பொன்னியின் செல்வன் படம் பார்த்து விட்டு எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன். படம் தமிழில் புதிய முயற்சி என்கின்ற அளவில் மட்டுமே பேசத் தக்கது. மற்றபடி திரையாக்கமாக படுதோல்வி. 1. காட்சியில் தமிழ் நிலம் ஏன் உடையலங்காரம் உட்பட தமிழ்ச் சூழல் இல்லை. 2. மிகப் பெரிய ஆற்றல் மிக்க எழுத்தாளர் என்று கொண்டாடப்படும் ஜெயமோகன் வசனத்தில் ஒழுங்கான கதை வசனமும் இல்லை. கல்கியின் கதாபாத்திரங்களை உள்வாங்கிய உணர்ச்சித் தெளிவும் இல்லை. எனவே கதாபாத்திரங்களுக்கு உயிரில்லை. 3. பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவமளிக்க விரும்பி சில இணைப்புகளைக் கூட செய்திருக்கிறார்கள். ஆனால் ஒழுங்காயில்லாத திரைக்கதையில் அம்முயற்சி சிறக்கவில்லை. மேலும் பூங்குழலி கதாபாத்திரத்தில் கோட்டை விட்ட பிறகு இவர்களைப் பற்றி என்ன சொல்ல….?மேலதிகமாக சொல்ல ஒன்றுமில்லை.