1978 – லேயே எழுத்தாளர் ஆர் சூடாமணி தெளிவான பார்வையுள்ள, சுயசிந்தனையுடைய ஒரு அம்மா பாத்திரத்தை படைத்திருக்கிறார் என்று அறிந்தபோது…….. எழுதிய அந்த கைகளை முத்தமிடத் தோன்றியது. அவர் எழுதிய `செந்துரு ஆகிவிட்டாள் !’ சிறுகதையிலிருந்து.“…..
மங்களூரிலிருந்த இரண்டாவது அக்காவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. சவலைக் குழந்தையும் கைக் குழந்தையுமாக இருப்பதால் இரண்டையும் பார்த்துக் கொள்வது தனக்கு சிரமமாக இருப்பதாகவும், அம்மா ஆறுமாதகாலம் தன்னோடு வந்து தங்கியிருந்தால் சௌகரியமாக இருக்கும் என்றும் எழுதியிருந்தாள்.தன் அம்மா அக்காவின் உதவிக்கு விரைவாள் என்றுதான் நினைத்தாள் நித்யா. ஆனால், செந்திரு மிகத் தெளிவாக தன் முடிவை அறிவித்தாள்.`இந்த வீட்டுக்கு என் மகனோ, மகளோ குடும்பத்துடன் வரட்டும். இது அவங்க வீடுதான். நான் எப்பவும் வரவேற்க தயாரா இருக்கேன். என்னாலான எல்லாம் செய்து கொடுத்துப் பார்த்துக்கறேன். ஒரு வேளை யாருக்காவது பெரிய ஆபத்துன்னா ஓடிப்போய் உதவவும் தயாரா இருக்கேன். ஆனா, சின்னச்சின்ன சிரமங்களுக்குக் கூட அம்மா வந்து உழைக்க கடமைப்பட்டவள்னு நினைச்சா நான் அதற்கு உடன்படமாட்டேன். இப்போ உன் அக்கா என்னை ஒரு ஆயாவாத்தான் நினைச்சுக் கூப்பிடறா. ஒரு வேலைக்காரியைப் போட்டுக் கொள்ள வசதியில்லாதவளா அவள் ? அம்மாவைப் பார்த்தால் வீணாப் போறாப்பல தோணுதா ?…….” THANKS Penn பெண்