கலந்துரையாடல்
13.10.2022 வியாழக்கிழமை
இலங்கை/ இந்திய நேரம் 20:30
Zoom : id 9678670331
நேற்று நடைபெற்ற ஊடறு கலந்துரையாடல் பற்றி தோழர் சக்கையா அவர்கள் புதிய மாதவிக்கு அனுப்பிய கருத்து* நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி தோழர்.எனது கைபேசியின் தினசரி டேட்டா 2 GB யும் தீர்ந்து விட்ட காரணத்தால் என்னால் நிகழ்ச்சியில் தொடர்ந்து இருக்க முடியாமல் போய்விட்டதுஇன்றைய சமூகத்திற்கான அவசியமானதொருமிகச்சிறப்பான கலந்துரையாடல்தங்களது உரையும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பும் மிகச்சிறப்பாக இருந்தது.தோழர் மாலதி மைத்ரியின் உரையும் அருமை.இந்த பொருண்மை குறித்து பெரியாரிய, மார்க்சிய தோழர்களின் தவறான புரிதலை தெளிவாக எடுத்துரைத்தார்தோழர் தீபாலட்சுமி வாடகைத்தாயின் உடல் depressionமட்டுமல்லாதுஉணர்வு depression குறித்தும் பேசியது சிறப்புதோழர் சிநேகாவின் உரை பல கேள்விகளுக்கு/ ஐயங்களுக்கு தெளிவைத் தந்தது உங்களது உரையில் வாடகைத்தாயின் வழியாக பெற்றுக் கொள்ளப்படும் குழந்தைகள் யாருடைய மரபணுக்களின் குணாதிசியங்களைப் பெற்றிருக்கும் என்ற எதிர்கால பயாலாசிக்கல் கேள்வியினை “நாளைய கேள்வி”யாக வைத்தது ஒரு புதிய சிந்தனையின் கதவை திறந்து வைத்திருக்கிறதுஇன்னும்சொத்துடைமை அடிப்படையில் ஆணாதிக்க போக்கில் தங்களது விந்துவினால் உருவாக்கப்படும் குழந்தைகளையே பெற்றுக் கொள்ள விரும்புவதை சமூகத்தின் முகத்தில் அறைத்தாற் போல் தாங்கள் பேசியதை குறிப்பிட்டேயாக வேண்டும்.முதலாளித்துவ சுரண்டலுக்குமருத்துவதுறை வழியாகவும் இந்த கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதையும்வாடகைத் தாய் என்பதில் ஒரு வணிகச்சந்தை திறந்து வைக்கப்பட்டு இருப்பதையும் நேற்றைய கலந்துரையாடல்விழிப்புணர்வோடுவிவாதப் புள்ளியை வைத்திருக்கிறதுஇந்த கருத்தை இவர்கள் தான் பேசவேண்டும் என்ற அடிப்படையில் பெண்களால் இந்த கலந்துரையாடலை அமைத்துக் கொடுத்த ஊடறு அமைப்பிற்கு சிறப்பு வாழ்த்துகள்.இன்னுமொரு நிகழ்வில் சந்திப்போம் தோழர்.வாழ்த்துகளும்நன்றியும்
நினைவுக் குறிப்பு:1980 ல் வெளியான சிவசங்கரியின் நாவலைத் தழுவிய ” அவன் அவள் அது”திரைப்படமும் வாடகைத் தாய் குறித்து பேசியிருந்தது.வாடகைத் தாயாக ஸ்ரீப்ரியா நடித்திருப்பார்.குழந்தை பெற்றுக் கொடுத்த பிறகு அவரது உணர்வுரீதியான depression காட்டப்பட்டு இருக்கும்.குழந்தை அழும் போது mother feeding கொடுக்க அவர்படும்பாட்டை உணர்ச்சி கொந்தளிப்பாய் அதை வெளிப்படுத்தியிருப்பார் ஸ்ரீப்ரியாபடம் வந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுது சன்னிலியோன்,நயன்தாரா நிகழ்வுகள் இந்த விவாதங்களுக்குபாதை போட்டு தந்திருக்கிறது.இந்த விழிப்புணர்வை சமூகத்தின் அடிநிலைவரை கொண்டு செல்ல வேண்டும் தோழர்
Deepa Lakshmi
நேற்று ஊடறு அமைப்பைச் சேர்ந்த Pathmanathan Ranjani ஒருங்கிணைத்த “இங்கே கருப்பைகள் வாடகைக்கு விடப்படும்” நிகழ்வில் கலந்து கொண்டது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.தோழர்கள் ரஞ்சனி, புதிய மாதவி, Malathi Maithri வழக்கறிஞர் Sneha Parthibaraja இரவி பாகினி ஆகியோர் வாடகைத் தாய் அமைப்பில் கார்ப்பொரெட்டின் மிகப்பெரிய கை இருப்பது குறித்து தெளிந்த பார்வையை ஏற்படுத்தினார்கள்.இந்தியா போன்றதொரு நாட்டில் இதன் சட்ட நுணுக்கங்களும் முதலாளித்துவத்துக்கும் பணம் படைத்தோருக்குமே சார்பாகத் தகவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதும் புலனாகியது.இயற்கையான முறையில் கருவுறும் பெண்ணுக்குப் பிரசவத்துக்குப் பின்பான பாதிப்பை விடச் செயற்கையான முறையில் கருத்தரிப்பது சிக்கலானது, அதற்காக வாடகைத் தாயின் உடம்பில் செலுத்தப்படும் மருந்துகள் ஏற்படுத்தும் பின்விளைவுகள், பாதிப்புகள் அதிகம்; அதற்கு யார் பொறுப்பேற்பது? பணத்தால் எல்லாவற்றையும் ஈடு செய்து விட முடியுமா? என்ற கேள்வியை எழுப்பினார் சினேகா.ஃப்ரான்சு, இத்தாலி, ஜெர்மனி, போன்ற வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் முற்றிலும் தடை செய்யப்பட்ட இம்முறை வளரும் நாடுகளிலும் ஏழை நாடுகளிலும் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இம்முறையில் பிறந்த சில குழந்தைகளும் அவற்றின் வாடகைத் தாய்களும் வாழ்வியல் ரீதியாகவும் சட்டரீதியாகவும் சந்தித்த பெரும் சிக்கல்களையும் வறுமையிலுள்ள பெண்களின் உடல்கள் மட்டுமல்லாது உணர்வுகளும் சுரண்டப்படுவதையும்குறிப்பிட்டேன். ரஞ்சிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேரன்பும் நன்றியும்.பி.கு. பதிவை ரஞ்சனி தோழர் இரண்டொரு நாளில் வெளியிடுவார்.