பிணந்திண்ணி கழுகுகள்- சந்திரலேகா கிங்ஸ்லி

கொரேனாவெனும் கொடிய விசம்
குருதிவரை ஊடுருவி உலையிட்டு
முரணச் சங்கதிகளை அரசியலாக்கி
யோட்சியின் பெருங் கொடுமை தீராமல்
முக்களை நாயாய் நரிகளாய்
ஊளையிலச் செய்து விட்டு
உருப் பெருக்க ஒவ்வொன்றையும்
உலகுக்கு காட்டி கபட நாடகமாடி
இலாபங்களையெல்லாம் தனியுரிமையாக்கி
புரிணந்திண்ணி கழுகுகளின் கொடும் வேட்டை
இராட்சியங்களிலெ;லாம் தலைவிரித்தாடினாலும்
ஆந்தக் கோர குருதி வயல் கொடுமை
புpணந்தின்னி கழுகுகளின் பெரும் வேட்டை
இனத்தின் மீது இலக்கு வைத்த படுகொலைகள்
முள்ளிவாய்க்hக லில் முடிந்ததென
முழக்கமிட்ட துப்பாக்கி வேட்டுக்கள்
சகதியும் ரத்தமுமாய் என் ஜனங்கள்
சாக்கிடங்கில் குவிக்கப்பட்டு
கொலையூட்டிய தீச்சுவாலை பிம்பங்கள்
எப்படி இராசமணியம்மா எனக்கு மறந்து போகும்
உன் மகனின் வலியில் தான்
எனக்கிந்த மரண ஓலம் மனநதைத்தது.

செம்மணிகளை எப்படி தீர்த்துக்கட்டலாம்
செஞ்சோலை பிஞ்சுகளின் ஓசை
செவி கிழித்து உயிர் குடித்த துயரம்
எரிமலை குமுறலாய்
இன்னமே இருக்கிறது தோழி
இசை பரியாத உன் நரம்புகளை
ஆம்மணமாய் கிழித்துப் போட்ட
பேரவலம் பேரவலம்
ஏன் இனக் கருவறையில்
பீனிக்ஸ் பறவையாய் இன்னமும்
பிணந்திண்ணி கழுகுகளும்
வல்லூறுகளும்
என் நிலத்தின் குருதியால் சபிக்கப்பட்டவைகள்
புனித நூலோடு வந்த எந்த ரட்சகனும்
ஏன் விடுதலையை விசாரிக்கவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *