இலங்கையின் பொருளாதார நெருக்கடி , எரிபொருட்களை நுகர்பவர்களுக்கு மாத்திரமே பிரச்சினையைக்கொடுத்திருக்கவில்லை .ஆனாலும் இது மாத்திரமே இலங்கையின் எரியும் பிரச்சினை என்கின்ற மாயையை உண்டுபண்ணுகின்ற முகப்புத்தகப்பதிவுகள் , வீடியோக்கள் , வீடுகளில் எரியாத அடுப்புக்களைப்பற்றியோ , அமைதி காக்கும் சமையலறைகளைப்பற்றியோ , எதைச்சமைப்பது என்ற ஏக்கத்திலிருக்கும் வறுமையான குடும்பங்களின் நிலைமைகள் பற்றியோ சிந்திக்கவில்லை .காரணம் சமூக வலைத்தளங்கள் தத்தம் நிலைப்பாடுகளை உடனுக்குடன் வெளிப்படுத்தும் ஓர் ஊடகம் அவ்வளவே . ஆனாலும் மறுதலையாக நாம் ஒன்றைச்சிந்திக்கவேண்டியிருக்கின்றது .
சமூகவலைத்தளங்களை எட்டியும் பாராத எத்தனை மனிதர்கள் ‘ #நாளைக்கு#என்ன#வேலை கிடைக்கும்? #எத்தனை#கிலோ#அரிசி#வாங்குவது ? #எந்த#நேர#உணவை#இன்று#சமைப்பது ? என்ற கேள்விகளுடன் ஒவ்வொரு நாட்களையும் கடந்துகொள்கின்றனர் ?????? அவர்களைப் போலவே அவர்கள் பிரச்சினைகளும் பேசப்படாத பொருளாகவே ஆகிவிடக்கூடாது என்பது எப்போதும் எனது சிந்தனையில் இருந்துகொண்டேயிருக்கின்றது .எத்தனை வீடுகள் ஒருவேளை உணவுக்காகக் கூட வருமானம் பெறமுடியாத கூலித்தொழிலாளிகளையும் பெண்தலைமைத்துவக்குடும்பங்களையும் வயதானவர்களையும் மாற்றுத்திறனாளிகளையும் கொண்டிருக்கின்றது தெரியுமா ????இத்தகையதான இடர்களை சிறிய அளவிலேனும் நீக்கவேண்டும் என்ற சிந்தனை வருகின்ற சமநேரமெல்லாம்” அறம் செய்ய விரும்புகின்ற மனநிலை இருக்கின்ற எல்லோராலும் அதைச்செய்யக்கூடிய ஆற்றல் இருக்கின்றதா ??? என்ற கேள்வி வந்து என்னைக் கிண்டலடிக்கும் .அதே நேரம் பொதுவாக , குறைந்த வருமானம் பெறுபவர்களைத்தேடி , உயர்வருமானம் பெறுபவர்கள் உதவிசெய்வதையும் என்னால் ஏற்கமுடிவதில்லை . சம வருமானத்தை ஈட்டக்கூடிய குறைந்தபட்ச வாய்ப்பாவது தனிமனிதனுக்கு இருக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு .மேலும் இனவாதத்தைத் தூண்டி அரசியல் இருப்பு கோருவதைப்போல , வர்க்க வேறுபாடுகளையும் காட்டி அரசியல்வாதிகள் கஸ்டப்பட்ட மக்களைக்கையேந்த வைப்பதிலும் உடன்பாடில்லை.எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாகச் சிந்தித்தாலும் செயல்வடிவம் கொடுப்பது சுலபமானது அல்லவே !
ஆனாலும் , மேற்போந்த சிந்தனைக்கெல்லாம் சிறகுகள் கொடுத்து செயல்வடிவம் பெறவைத்த ஊடறு பெண்கள் அமைப்பாளர் ரஞ்சியக்காவையும் Pathmanathan Ranjani அதில் ஆர்வத்தோடு எம்மை இணைத்துக்கொண்ட ரவியண்ணாவையும் Ravindran Pa ஆதரவு அமைப்பு செயற்பாட்டாளர்களையும் இந்நேரத்தில் நன்றியோடு நினைவுகூருகின்றேன் .யூலை 4 ,5 ஆம் திகதி இருக்கும் . தர்சிகா அக்கா , ஸப்னா அக்காவுடன் , என்னையும் இணைத்து , இதுவரை காலமும் மலையகம் திருகோணமலை மட்டக்களப்பு வன்னி கிளிநொச்சி போன்ற இடங்களில் குறிப்பாக தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் , சுயதொழில் வாய்ப்புக்கள் மற்றும் இடர்கால நிவாரணங்கள் வழங்கிவந்த ஆதரவின் பார்வையை யாழ்ப்பாணத்திற்கும் கொண்டுவந்த நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும் .இலங்கைப்பொருளாதார நெருக்கடி நேரடியாகவே , பசி என்கின்ற கொடிய நெருப்பை அங்கிருக்கின்ற வறுமையான குடும்பங்கள் மீது பற்றி எரிய வைத்திருக்கின்றது என்பது யாவரும் அறிந்திராத உண்மையல்ல .
இதன் அடிப்படையில் வறுமைக்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் , மாற்றுத்திறனாளிகள் மற்றும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் என்பவர்களை இலக்காகக்கொண்டு #ஆதரவு#அமைப்பின்#பதின்நான்கு#லட்சத்து#ஐம்பதாயிரம் ரூபா நிதிப்பங்களிப்பில் 170 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்களை வழங்கியிருந்தோம் .10000 ரூபா பெறுமதிமிக்க அரிசி, அரிசி மா , கோதுமை மா , பருப்பு , சீனி ஆகியவற்றை உள்ளடக்கிய 30 KG பொருட்களை மூன்றுக்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் உள்ள குடும்பங்களுக்கும் , 15 KG பொருட்களை ஒன்று / இரண்டு அங்கத்தவர் உள்ள குடும்பங்களுக்கும் பகிர்ந்தளித்திருந்தோம் .பொருட்களைக்கொள்வனவு செய்தும் பொதிகளைத் தயாரிப்பதிலும்
முழுமூச்சாகச்செயற்பட்ட பெண்கள் அமைப்பின் தர்சிகா அக்காவிற்கும் விசேடமாக நன்றிகளையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கின்றேன் . இத்தகையதாக வாசல் தேடி வந்து கைபிடித்து அழைத்து சமூகத்திற்குள் இறங்கவைக்கும் இந்த வாய்ப்பிற்குப் பின்நிற்கக்கூடாது என்ற இதயத்தின் விருப்பம் ஒருபுறம் , யாரைத்தெரிவு செய்வது எங்ஙனம் தெரிவுசெய்வது என்ற குழப்பம் இன்னொரு புறம் இருக்க , #காலத்தினால்#செய்த#உதவி உண்மையாகவே தேவைப்படும் ஒன்றாகவும் , பயனுள்ள ஒன்றாகவும் உரிய தரப்பினரைச்சென்றடையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் ஒரே மனதாக இருந்தமையினால் நலிவடைந்த சமூகமக்களை குறிப்பாக இதில் இணைத்துக்கொண்டோம்.
நான் யாழ்ப்பாணம் , கொக்குவில் , அச்சுவேலி , புத்தூர் , கெருடாவில் , தொண்டைமானாறு ஆகிய இடங்களிலிருந்து வறுமையானது பெண் தலைமைத்துவம் கொண்டதுமான குடும்பங்களைத் தெரிவுசெய்துகொண்டேன் .என்னுடன் இணைந்து செயற்பட்ட எனது சக நண்பர்களுக்கும் இத்தருணத்தில் எனது அன்பும் நன்றியும் பொதிகளை வழங்கினோம் என்று இல்லாமல் , வாழ்வியலில் பொருளாதார சமூகக்காரணிகளால் நொந்திருக்கும் இம்மக்களை இனங்கண்டு சமூகத்திற்குக்கொண்டு சேர்ப்பதையும் எனது சமூகக்கடமைகளில் ஒன்றாக பார்க்கின்றேன்புலம்பெயர் தேசத்தில் இருந்தவாறு இத்தகைய சமூகச்செயற்பாடுகளால் எமது மக்களுடன் இணைந்து பயணிக்கும் , கைகோர்க்கும் சுவிஸ் ஆதரவு நண்பர்களுக்கு பலகோடி நன்றிகள்
பயன் அடைந்த மக்கள் மனங்களில் என்றும் நிற்கும் உங்கள் சேவை என்பதுடன்வாக்கு அரசியல் சாயம் கொள்ளாத இத்தகைய பணிகள் மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்
கடினமான ஓர் பணி என்றாலும் புதியதொரு இன்பமான அனுபவம்