மெய்வெளியின் “காத்தாயி காதை”விம்பம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையக இலக்கிய மாநாடு-2022 இல் மெய்வெளியின் தயாரிப்பில் மேடையேறிய காத்தாயி காதை :
பங்கேற்கும் கலைஞர்கள் சாம் பிரதீபன்,றஜித்தா,சுஜித்,காண்டீபன்,அலன், றித்திக்,அனுஷன்,
இசைப் பிரயோகம் -ஷாருகா,அஞ்சனா,
-அரங்கமைப்பு கைவினைப்பொருட்கள் ஒப்பனை வேட உடைத் தயாரிப்பு றாஜி,மோதிலா,அஞ்சனா,
- உதவி நெறியாள்கைறஜித்தா
- எழுத்துரு நெறியாள்கை சாம் பிரதீபன்
- தயாரிப்புமெய்வெளி நாடகப் பயிலகம்
மட்டக்களப்புக்கும் பதுளைக்கும் இடையில் பண்ட, ஆயுத பரிவர்த்தனை நடந்து கொண்டிருந்த காலம். தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு மலையகத்திலும் ஒரு ஆதரவு அலை வீசிக்கொண்டிருந்தது. பதுளையைச் சேர்ந்த காத்தாயி யும் அந்த அலையினுள் அகப்பட்ட ஒரு அப்பாவி சீவன். 1994 ஆம் ஆண்டு ஆயுதப் படைகளால் கைதுசெய்யப்பட்ட காத்தாயி எவ்விதமான சித்திரவதைகளை அனுபவித்திருப்பார் என்பதை வெலிக்கட சிறையில் இருந்தவர்களே சாட்சி. காத்தாயி புற்று நோயிலே அவதிப்பட்டுக் கொண்டு வெலிக்கட சிறையிலே துடித்துக் கொண்டிருந்தார். 2014ல் புற்று நோய்க்கு தன்னை பறிகொடுத்து இயற்கை எய்தினார்.