தமிழக அரசின் கலைஞர் பொற்கிழி விருதுப் பெற்ற காஷ்மீரிய கவிஞர் நிஹாத் சாஹிபாவின் இலக்கியம் வாசமும் கருத்தும்
நான் என் குடும்பத்தில் முதல் தலைமுறைக் கற்றவள். என் அம்மா பள்ளிக்கூட வாசனை அறியாதவள். என் தந்தை எட்டாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்தியவர். எதை படிக்கவேண்டும்இ எதை படிக்கக் கூடாது என்பது கூட எனக்குத் தெரியாது. கிராமத்துப் பெண் வீட்டு வேலைதான் செய்யவேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆனால் எனக்கு வரையறுக்கப் பட்ட கனவுகள் இருந்தன. என் மூத்த சகோதரர்கள் வாங்கி வைத்திருந்த அனைத்து உருது காதல் நாவல்களையும் என்னால் சுதந்திரமாக வாசிக்க முடிந்தது.. காரணம் என் தாய் நான் பள்ளிப் பாடத்தை படிப்பதாகவே கருதிக் கொண்டாள். ஒருவேளை நான் படித்த குடும்பத்தில் பிறந்திருந்தால் ‘ஆலீஸ் இன் வொன்டர்லேண்ட்’ படித்திருப்பேன். நான் படிக்க வேண்டும் என்பதில் என் சகோதரர்கள் ஆர்வம் காட்டினார்கள். பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் ஆதரிக்கவேண்டும் என்று ஆண்களுக்கு எப்போதும் கற்றுத் தரப் படுவதில்லை. பாகிஸ்தானிய எழுத்தாளர் கிஷ்வர் நஹீத் எழுதிய ஒரு புத்தகம் படித்திருக்கிறேன்.
பெண்கள் திருமணத்திற்கு பிறகு மாடுகளைப் போல் வேலை செய்வதற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று கற்றுக் கொடுக்கப் படுகிறார்கள்! ” இதனால்தான் பெண்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை ஆண்களுக்கு காட்ட விரும்புவதில்லை. என் கவிதைகளை என் முகத்திற்கு நேராக பாராட்டுகிறவர்கள் கூட எனக்குப் பின்னால் நின்று இதை வேறு யாராவது எழுதிக் கொடுத்திருப்பார்கள் என்று கூறுவார்கள். ஒரு ஆண் விருது பெற்றால் அவன் அதற்கு தகுதியானவன் என்று சொல்கிறவர்கள் ஒரு பெண் பெற்றால்இ அவள் பெண் என்பதால் பெறுகிறாள் என்று கீழ்த்தரமாகப் பேசுவார்கள். நான் என் பேனாவை உடைத்துவிடும் குழப்பமான மன நிலைக்கும் சென்றிருக்கிறேன். ஒரு பெண் ஆடினாள் நடனக் கலைஞர் என்றும் பாடினாள் என்றால் பாடகி என்றும் சொல்பவர்கள் பெண் எழுதினாள் என்றால் மட்டும் அவளை பெண் எழுத்தாளர் என்பதும் கூட பிரித்து அவளை போட்டிக்கிழுப்பதாகும். நான் பொதுவாகவே யாரும் என்னை பெண் கவிஞர் என்று அழைப்பதை விரும்புவதில்லை.