கவிஞர்ச.விஜயலெட்சுமி i எழுதிய காளி சிறுகதை தொகுப்பு –
மொத்தம் 12 சிறுகதைகள்.
கதையோடு ஒத்து வாசிக்கத்தகுந்த எழுத்து நடை . ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமான அரசியலும், மக்களின் வாழ்வியலையும் தெளிவா சொல்லிருக்காங்க. எந்த இடத்திலையும் கடினமாவோ தொய்வாகவோ தோன்றவில்லை. புரிந்து கொள்ள கதை சூழலோடு பொருத்திக் கொள்ள எளிமையான சொற்கள். பாதுகாப்பு, சமூக இடைவெளி என சொல்லி சொல்லி மனச்சோர்வு பெருகி போன நாட்களில் தேவையான ஆசுவாசம் கிடைக்க புத்தகங்கள் ரொம்ப உதவியா இருக்கும். அப்படியான உணர்வ தான் இதன் வழியாக மீட்டு கொள்கிறேன்.
“பாராசூட் இரவு பயணம்”
குப்பத்து மக்களுடைய வாழ்வியல் சூழல் அவர்களுடைய கனவு ஆசைகளை சொல்கிற கதை. யசோதா அச்சூழலின் பெண்ணிலை கல்வி பாதுகாப்பு என அப்பெண்களின் ஒட்டுமொத்த வடிவமாக தெரிகிறாள். அடிப்படை வசதி இருப்பிடம் தேடி அலைகின்ற மனதின் வலிகளை பதிய வைக்கிறார்.
“இரயில் விளையாட்டின் ராட்சஸ நொடிகள்”
இரயில் பயணத்தை நேசிக்கிற பொண்ணொருத்தி தன் சிநேகியின் வார்த்தைகளுக்கு செவிகொடுத்து ஒரு எச்சரிக்கை உணர்வோடு பயணிக்கிறாள். சகபயணியாக அறிமுகமான ஆண் ஒருவர் அந்த பெண்களிடம் ளுநஒரயட யடிரளந செய்கிறார். அதை எப்படி அந்த பெண்கள் கையாள்கிறார்கள் என்பதை விளக்குகிற கதை. தயக்கம் என்பது ரொம்ப ஆபத்தான வியாதி என தெளிவுபடுத்துகிறார். அந்த பெண் இரயிலை விட்டு இறங்குற நேரம் இரயில் அவளின் துணிச்சலில் அலறிக்கொண்டு ஓடியது என சொல்லப்பட்டிருக்கும். என்ன தான் தைரியமாக பிரச்சனைகளை சமாளித்தாலும் எப்போதும் எச்சரிக்கை உணர்வோடையே இருப்பது பெண்களுக்கே வழங்கப்பட்டிருக்கிற சாபமாக தோன்றியது.
“சிவப்பின் நிறம் பெண்மை”
இந்த கதை ரொம்பவே எனக்கு பிடித்திருந்தது. தனியா Trip போக நினைக்கிற பெண்ணுடைய ஆசை கனவு உற்சாகம் என Self explore பற்றிய மனவோட்டத்தை அழகா சொல்லிருப்பாங்க . பயண குறிப்புகளை தெளிவுடன் விளக்கியிருப்பாங்க. இயற்கையோடு இணைந்து பயணிக்கும் போது வழியோக்கில் நடக்கிற ஒரு மூடநம்பிக்கையான செயல் மாதவிடாய் தீட்டுபற்றிய பொதுபுத்தி கருத்தாங்களை உடைத்து பெண்ணின் வலிமையை பதிய வைக்கிற விதம் கூடுதல் சிறப்பு.
“ஈவா”
பல இடர்பாடுகளுக்கு நடுவே ஒரு பறவை போல பறந்து போகிற பெண்ணின் கதை. இதன் ஊடாகவே பாலின மாற்றத்தையும் பால் சார்ந்த புரிதலையும் போகிற போக்கில் அழகா சொல்லி புதிய கோணத்திற்கு சூழல் நகர்கிறது.
காளி
இந்த கதையில் பல விசயங்கள் பேசப்பட்டிருக்கும். உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் உழைப்பு சுரண்டல் காதல் திருமணம் குழந்தை வளர்ப்பு என எல்லாவற்றிற்குமான உணர்வை காளி கடத்தி செல்கிறாள்.
“அண்டர்டக்கர்”
வளரிளம் ஆண் குழந்தையோட மனநிலையை இந்த கதை வழி பார்க்க முடிகிறது. பால் சார்ந்த ஹார்மோன் மாற்றத்தை அவனே உணருகிற விதம். அதனால் ஏற்படுகிற சில விளைவு . தன்னை எப்படி கையாள்வதென புரியாது தவிக்கிற மனசு அண்டர்டக்கராக மாறி நிற்கிறது.
“யவனா”
ஒரு இறப்பின் துயரத்தை விவரிக்கிற கதை. கதை போக்கில் விறுவிறுப்பும் ஆர்வத்தையும் கொடுக்கிறது. முடிவிற்குள்ளான காரணங்களை நம்மையே தேட வைக்கிறது.
“கிளிமஞ்சாரோ”
நாட்டு மக்களுக்கும் அரச குடும்பத்திற்குமான உறவு இ உழைக்கும் மக்களின் உழைப்பு சுரண்டல் மற்றும் எகிப்தின் பண்பாடு பாரம்பரியம் இ இறந்தவரை புதைத்து வைக்கும் பழக்கம் அது சார்ந்து கதை நிகழ்த்தப்படுகிறது.
“அவிப்பலி”
கல்லானாலும் கணவன் என சொல்கிற காலத்திலிருந்து மீண்டு கொடுமை பண்றவனை விட்டு ஒன்னு தள்ளி வந்து நிம்மதியா இரு. இல்ல திருப்பி திருப்பி வந்தா ஓடவிடுனு சொல்ற மாதிரி இருந்தது. ஆமா நம்மை சுழ்ந்திருக்கும் பல செல்லம்மாக்களின் கதை. செல்லம்மா எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வரும் தொடர்கதை .
“ஏகன்”
சென்னை வெள்ளசூழல் மாதிரியான கதைகரு. அதிலிருந்து மீண்டுவருகிற பெண்ணும் எலிகாப்டரிலிருந்து காப்பாத்துகிற ஒரு ராணுவ வீரனுக்கும் இடையான நட்பு நன்றியுணர்வு கலந்த அன்பின் நுணுக்கங்கள் ரொம்ப அழகா கடத்தப்பட்டிருக்கும். சமூக அக்கறை கொண்ட துணிச்சலான பெண் ரீனா தனித்துவம்.
“உயிர்ப்பு”
கருவுற்ற பெண்ணின் கர்ப்பகாலம் மாற்றத்தை வலிகளை சொற்களில் உணர முடிகிறது. மருத்துவமனையில் பார்க்கிற ஒரு முதிர்வயது பெண்ணின் சுருக்கங்களுக்குள் ஒளிந்திருக்கும் அனுபவங்கள் வாழ்விற்கான வலிமையை சொல்கிறது.
“ருத்ரா”
காட்டுவளங்கள் சுரண்டப்பட்டு நகரமயமாக்கலை விவரிக்கிற கதை. அதுவும் காட்டுவாழ் உயிரினத்திலிருந்து சொல்வது அழகு. காடு பற்றி தெரியாத காவலர் அதை பற்றி தெரிந்த ஒரு பழங்குடி இளைஞனை அழைத்து வருகிற காட்சி… விலங்கானாலும் மனிதனாலும் வளர்ந்தது ஓரே மண்ணு தான் என நிலவுடமை சார்ந்து எல்லாமே கார்ப்ரேட்களுக்கு தாரைவார்க்கிற சமூகபோக்கு சொல்லப்பட்டிருக்கும்.
காளி புத்தகத்திலுள்ள எல்லா கதைகளிலும் பெரும்பாலும் பெண் பாத்திரங்கள் சார்ந்தே நகர்கிறது. நடைமுறை சார்ந்த அவலங்களே கதைகரு.இயல்பா வாழ்வியல் சார்ந்த யதார்த்தத்தை கண்முன் காண்கிற உணர்வு. பெரிய பெரிய அரசியலும் நுணுக்கமான உணர்வுகளையும் பெரும் ஆசுவாசத்தையும் இக்கதைகளின் வழி உணர வைத்த
ஒரு நல்ல பின்னோட்டம்மா இருக்கு…காளி சிறுகதை தொகுப்பு படிக்கணும்ன்னு ஒரு ஆர்வம் உண்டாகிருக்கு கண்டிப்பா படிச்சிட்டு சொல்றேன்…