“அகர” அரங்காடிகளின்

“அகர அரங்காடிகளின்

vijayan

மிழ்ச்சிறுவர்களுக்கான நாடக வகுப்புகள்

Schulhaus Kornhausbrücke
Limmatstrasse 176
8005 Zürich.

ஆகஸ்ட் 25ம் திகதி புதன்கிழமை அன்று ஆரம்பமாகும்

***

நாடகம் என்பது வாழ்க்கையை பிரதிபலிக்கும் அல்லது பிரதிநிதித்துவப்படுத்தும்
ஒரு விடயமாகும். அது மக்களுக்காக நடாத்தப்படும் ஒரு நிகழ்வு. இது எல்லா
கலாச்சார காலகட்டங்களிலும் இருந்திருக்கிறது. நாடகத்தை ஒரு
பொழுதுபோக்கான அம்சமாகவேதான் பார்க்கப்பட்டு வந்தது. ஆனால்,
நாடகமானது சிறுவர்களுக்கு வாழ்க்கை பற்றி, வாழ்கையின் செயல் அதன்
தாக்கம், நம்பிக்கைகள் பற்றி அறிந்து கொள்வதற்கு ஒரு ஆரம்ப
வழிவகையாகவும் அமைகின்றது. இவ் அரங்கியல் வகுப்புகளுக்கூடாக உங்கள் பிள்ளைகள்
அவர்களை சூழவுள்ள  கலைத்துவத்துமானவற்றையும்,
தன்னம்பிக்கை, புதிய சிந்தனை
உருவாக்கம், தெளிவான தொடர்பாடல், குழுச்செயற்பாடு, சிக்கல்களை
இலகுவாக சமாளிக்கும் அறிவு என்ற பக்குவத்தை பெற்றுக்கொள்வதோடு,
கலைத்துவமான சிந்தனையை இந்த நாடக
பயிற்சிகள் மூலம் உருவாக்கலாம் என நாம் நம்புகின்றோம்.

அத்துடன் மாணவர்களின் கோரிக்கைகளுக்கும்,
சிந்தனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
அத்தோடு, பெற்றோர்களாகிய உங்களுடைய பங்களிப்பும் எங்களுக்கு
மிக அவசியமான ஒன்றாகும்.

இவ் நாடக வகுப்புக்கள் தமிழ் மொழியிலேயே நடாத்தப்படும்.

நன்றி,

தொடர்புகட்கு

– பா.விஜயசாந்தன் –

(நாடக ஆசிரியரும், பொறுப்பாசிரியரும்)

தொலைபேசி 076 5166761

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *