17 நிமிடங்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ள இக்குறும்படத்தை பெண் இயக்குநர் எர்த்லிங்க் கவுசல்யா எழுதி இயக்கியுள்ளார்.ஹோட்டல்களில் பெண்கள் குளிக்கும் வீடியோக்கள், துணிக்கடைகளில் பெண்கள் உடை மாற்றும் வீடியோக்கள், பெண்களின் மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோக்கள், காதலில் பெண் நெருக்கமாக இருந்த போட்டோ வீடியோ என இணையத்தில் வெளியிடப்பட்ட வீடியோக்களால் மாணவிகள் மட்டுமன்றி திருமணம் ஆன பெண்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன நிகழ்கின்றன.பெண்ணை அவளின் உடலுக்கு எதிராக வெட்கப்பட வைத்து வெறுக்க வைத்து இறுதியில் அவளைத் தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் ஒரு பெண் தன்னை எப்படி பார்க்க வேண்டும் இப்படியான சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்பதை 17 நிமிட குறும்படத்தில் முடிந்தவரை அழுத்தமாகவும் ஆழமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
துணிந்தவனுக்கு எதிலும் வெற்றி…
தற்கொலை செய்து,மானத்தை இழந்து வாழும் அவலம் அல்ல பெண்.இக்கதை கரு இப்படத்தின் அதீத வெற்றி…நாயகியின் நடிப்பை உள்வாங்க வேண்டும் அனைத்து பெண்களும்.வாழ்த்துகள்.