ஒப்பனைக்கு முன்பும் பின்பும் ஒரு survivor நிகழ்வுக்கு பிறகு ஒரு ஊடகப் பெண் தனது போட்டோவை பதிவேற்றம் செய்கிறார். அப்பெண்ணை கலாய்க்கிறோம் , கேலிபேசுகிறோம் என்கின்ற பெயரில் ஒப்பனைக்கு முன்பான அவரது கருமை நிற தோற்றத்தை பலர் பலவிதங்களில் தரம் தாழ்ந்து விமர்சிக்கறானுங்க. கருப்பின் மீதான ஒவ்வாமையும் வெறுப்புணர்வும் இங்கே அமெரிக்க காரனை விட இந்தியாக்காரன் எவ்ளோ வக்கிரத்தோடு இருக்கான் பாருங்கள். இந்த லெட்சனத்தில் இங்கிருப்பவன் ஜார்ஜ் பிளாய்ட் மீதான நிறவெறிப் படுகொலைக்கு நீலிக்கண்ணீர் வடித்தான் வேறு.சாதிவெறி, மதவெறி, பாலின ஏற்றத்தாழ்வைப்போல் , நிறவெறி பாகுபாடும் இங்கே பலரின் மனங்களில் ஆழ வேரூன்றி இருக்கிறதுவெள்ளை என்பது அழகல்ல நிறம்.ஆங்கிலம் என்பது அறிவல்ல மொழி என்பதை மூடர்கள் உணர்தல் வேண்டும்.