தகவல் – ஷ்ரின் சறூர்( (Shreen Saroor)
End impunity on child labour, trafficking, and sexual exploitation
On 2021.07.03 Friday, Ms. Jude Kumar Ishalini of Diyagama, Hatton—an underaged girl employed as a domestic aide at the residence of former Minister and present Member of Parliament Mr. Rishad Bathiudeen was admitted to the Colombo National Hospital with burn injuries. She succumbed to her injuries on the 15th while receiving treatment in Ward 73 of the Intensive Care Unit 2.
Thereafter, according to her Case No. B/52944/2/21, the Colombo Additional Magistrate Rajindra Suriya visited the Colombo National Hospital to view the body of the deceased girl and ordered a post-mortem. It has been reported in the media that she has been sexually abused for a long time.
Ishalini was born in Diyagama, Hatton on December 11, 2004. She was only 15 years and 11 months when she arrived as a domestic aide at the residence of Member of Parliament Mr. Rishad Bathiudeen. At the time of her death, Ishalini was only 16 years and 08 months of age. During her employment, she was only permitted to communicate with her family a few times over the phone but was denied visits to her family. She died without seeing her family members for nearly a year.
Education is compulsory for every child in Sri Lanka until the age of 16. There are officers attached to each Divisional Secretariats such as child probation officer, child protection officer and women development officer etc. and their work is to ensure that the children get educated and do not drop out from schools before 16. These officers are mandated to work within the community to protect children like Ishalini and help them with their education. If there are dropouts, they must work with the families and community to ensure that they go back to school. Hence, this case also sheds light on another dark side of the systemic failure of protecting and promoting child rights in this country. It is not new that up-country children are being used as forced labour in this country for decades. Rarely this cruelty has been brought to light. Further, women’s groups have observed an increasing trend of not only underaged girls being sold as domestic labour but also being sexually abused and treated inhumanly during this pandemic.
According to the Employment of Women, Young Persons, And Children Act (No. 47 of 1956) of Sri Lanka, children aged between 16 – 18 can be employed for a common good. But before so employing children between the age of 16 -18, the Labour Commissioner should be informed of the reason. Further, the law says that no one can employ a child in such a manner as to prevent the child from attending school.
Therefore, Ishalini’s employment as a domestic aide is improper as her education had been disrupted. Furthermore, the post-mortem report states that the victim has been sexually abused for some time. In terms of the Penal Code sexual exploitation is an offence and sexual harassment at the workplace is a punishable crime too.
This incident is linked with various grave offences such as employing an underage girl child, being forced to discontinue education and sexual exploitation. Hence extensive and impartial investigations should be carried out in connection with the death and other related rights violations and perpetrators brought to book. Fair trial and justice to Ishalini, hopefully, will put an end to the abuses and exploitations of many Ishalinies.
Presently, the Corona pandemic situation has caused various economic hardships to people including loss of livelihoods to many. As a result, there is visible and phenomenal increase in domestic violence, sexual abuse and more generally violence against women and children. In the Batticaloa district alone in the last six months, 14 child sexual abuse cases and 63 violence against children have been recorded.
In July, to date, media has reported a total of 05 cases of violence against children, including the instant case of Ishalini. They are:
1. The horrific crime of online trafficking of a 15-year-old girl.
2. A 16-year-old girl employed as a domestic aide at the residence of a representative of the legislative body succumbing to burn injuries.
3. Two sisters aged 12 and 14 were sexually abused by their father aged 36.
4. A 13-year-old girl child from Nawalapitiya was sexually abused by her father and many others since she was 07 years of age.
5. In Gampaha a monk (head of a Buddhist temple) and 4 men have been arrested for sexually abusing a 13-year-old girl.
These are the reported cases and possibly a tip of an iceberg of an endemic that is overshadowed by Covid -19 in this country. The Child Protection Authority and the structure of the Women and Children’s Welfare Police Division must work impartially and fearlessly to ensure justice in terms of complaints received about child abuse and exploitation. This must be stressed as none of the above structures was able to carry out their duties in an effective and efficient manner, despite the escalating violence against children during the period when travel restrictions are in force.
As women’s rights activists, we made several attempts, but the said structures failed to respond effectively. Therefore, it is apparent that the ineffectiveness of these structures has also contributed significantly to the continuation of grave violence against children. We hope, at least after the publicity Ishalini’s tragic death has garnered, these structures would wake up and discharge their duties effectively to ensure justice for the victims. In addition, the relevant Minister G.L. Peiris and the Minister of Justice Ali Sabry who is continuously discussing reforms to the legal system should consider introducing changes to the laws concerning child rights to be more effective.
An effective mechanism should be developed within the legal framework to inquire about cases involving children and to establish procedures to ensure the sentencing of offenders expeditiously. Officers who neglect their duties must also be brought to book. A strong victim and witness protection mechanism should be installed in every district. But most importantly implementation of an expedited process must ensure justice without delay whilst guarding the dignity of the victim throughout. This would be the only way forward to guarantee a reduction in incidents of child abuse and violence against children in Sri Lanka.
முன்னாள் அமைச்சர் மற்றும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாரட் பதியுர்தீன் அவர்களின் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டில்இ வீட்டு வேலைகளை புரிவதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹற்றன் டயகம பகுதியைச் சேர்ந்த ஜூட் குமார் கிஷாலினி எனும் சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை (2021/07/03) அன்று அவரது உடலில் பலத்த தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 73வது சிகிச்சை அறையில் அமைந்துள்ள தீவிர சிகிச்சை பிரிவு 2 இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி சிகிச்சைகள் எதுவும் பலனின்றி உயிரிழந்துள்ளார
இதனை அடுத்து வழக்கிலக்கம் B/52944/2/21 க்கு அமைய கொழும்பு தேசிய வைத்தியாலைக்கு குறித்த சடலத்தினை பார்வையிடச் சென்ற கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திரா சூரிய அவர்கள் குறித்தசிறுமியின் மரணம் தொடர்;பான பிரேத பரிசோதனைகளை உரிய முறையில் முன்னெடுக்க உத்தரவிட்டிருந்தார்.
குறித்த பாதிக்கப்பட்டு மரணித்த சிறுமி 2004ஃ11ஃ12 அன்று ஹற்றன் டயகமவில் பிறந்துள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் மற்றும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுர்தீன் அவர்களின் வீட்டுக்கு வீட்டுப்பணிப்பெண் வேலைக்கு வரும் போது அச்சிறுமிக்கு 15 வயது 11 மாதங்களே பூர்த்தியடைந்தவராக இருந்துள்ளார். அச்சிறுமி இறக்கும் போது அவருக்கு வயது 16ம் 8 மாதங்களும் மட்டுமே ஆகும். குறித்த சிறுமி வீட்டு வேலைக்காக குறித;த வீட்டிற்கு வந்த பின்னர் அவர் தொலைபேசியின் ஊடாக சில தடவைகள் குடும்பத்தனருடன் தொடர்புகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதுடன் அவர் வீட்டிற்கு விடுமுறையில் செல்வதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை. உறவினர்களை பார்க்காமலே குறித்த சிறுமி எரியூட்டப பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
எமது நாட்டில் வயது 16 வரை பிள்ளைகளுக்கான கல்வி கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளதுடன்இ அதுதொடர்பாக பிரதேச அலுவலகத்தில் காணப்படும் அதிகாரிகள் அதாவது சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்இ சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்இ பெண்கள் அபிவிருததி உத்தியோகத்தர் என்று பலர் குடும்பங்களில் பின்தொடர்தலை மேற்கொண்டு பாடசாலை கல்வியில் இருந்து விலகிச்செலலும் மாணவர்களை பாடசாலையில் இணைப்பதற்கு பாடசாலை சமூகத்துடன் பணியாற்ற வேண்டியவர்களாக காணப்படுகின்றனர். இந்நிலையில் இந்த சிறுமியினது கல்வி இடைவிலகல் அவதானிக்கப்படாமல் இருந்துள்ளதுடன் குறித்த உத்தியோகத்தர்கள் தமது கடமையை சரிவர செய்ய தவறியுள்ளனர் என்பது தெளிவாக புலப்படுகின்றது.
இலங்கையில் 1956ம் ஆண்டின் 47ம் இலக்க பெண்களையும் இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் சட்டத்திற்கு அமைவாக பொது நன்மைக்காக 16 வயதுக்கு மேற்பட்டதும் 18 வயதுக்கு இடைப்பட்டதுமான ஆட்களை தொழிலுக்கு அமர்த்தலாம். ஆனால் அது தொடர்பாக தொழில் ஆணையாளருக்கு அறிவித்து அவசர நிலை தொடர்பாக அறிவித்த பின்னரே அதனை செய்ய முடியும். இதே சட்டத்தில் பாடசாலைக்கு செல்வதை தடுப்பதாக அல்லது உடலுக்கு பங்கம் விளைவிக்கும் தொழிலில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்த முடியாது என சட்டம் தெளிவாக கூறுகின்றது.
இந்நிலையில் இச்சிறுமி வயது குறைந்த நிலையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் அவரதுகல்வி நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது பிரேத பரிசோதணை அறிக்கையின்படி குறித்த சிறுமி தொடர்ச்சியான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எமது தண்டனைச் சட்டகோவையின் பிரகாரம் பாலியல் துஷ்பிரயோகம் என்பது மிகவும் பாரிய குற்றமாக காணப்படுவதுடன் இதுவேலைத்தளங்களில் இடம்பெறுவதும் கண்டிக்கப்பட்டும் வருகின்றது
இங்கு சிறுமியை வேலைக்கு அமர்த்தியதுஇ கல்விக்கு பங்கம் விளைவித்தமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை போன்ற பல்வேறுபட்ட பாரதூரமான குற்றங்களுடன் பின்னிப பிணைந்ததாக காணப்படுகின்றது. இதனடிப்படையில் குறித்த சிறுமியின் மரணத்திற்கும் அதனோடு தொடர்புடைய ஏனைய உரிமை மீறல் குற்றங்களுக்கும் தகுந்த வகையில் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறித்த விசாரணைகளை சட்டத்தினை அமுல்படுததும் தரபபினர் பக்கச்சார்பின்றியும் எந்த ஒரு பின்புல அழுத்தங்களையும் பொருட்படுத்தாது நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் நீதியானது பல கிஷாலினிகளின் துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற ஒன்றாக அமைய வேண்டும்.
தற்போதைய கொரோனா சூழலில் மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தள்ளப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து காணப்படும் இந்த சூழலில் குடுமப மற்றும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள அதிகரித்துள்ள நிலையினை நாம் காண முடிகின்றது. இந்த மாதத்தில் கிஷாலினியின் வழக்கு உளளடங்கலாக மொத ;தம் 6 சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகள்பதிவாகியுள்ளன.தீக்காயங்களுடன் மரணம்
1. 15 வயது சிறுமி இணையவழியில் விற்பனை செய்யப்பட்ட கொடுமை.
2. 16 வயது சிறுமி சட்டவாக்கத்துறை பிரதிநிதியின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில்
3. 14, 12 வயது சொந்த மகள்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய 36 வயது தந்தை.
4. 13 வயது நாவலப்பிட்டியைச் சேர்ந்த சிறுமி அவளது 7 வயதில் இருந்து சொந்தத் தகப்பன்
உட்பட பலரினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுள்ளமை.
5. கம்பஹா 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக ஒரு விகாரையின் தலைமை துறவி உட்பட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டள்ளனர்.
6.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 63 சிறுவர்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் நம் நாட்டில் இம்மாதத்தில் இடம்பெற்ற கொடுமைகள். சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பெண்கள் சிறுவர்கள் நலன் பொலிஸ் பிரிவின் கட்டமைப்பும் சிறுவர்கள் தொடர்பான வன்முறை முறைப்பாடுகள் தொடர்பான பாரபட்சம் காட்டாமல் நியாயம் கிடைப்பதற்கு கட்டாயம் நீதியுடன் செயற்பட வேண்டும். காரணம் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருந்த காலப்பகுதியில் சிறுவர் தொடர்பான அதி கூடிய வன்முறை இடம்பெற்ற போதும் மேற்குறிப்பிட்ட கட்டமைப்புக்கள் எதுவும் சீராகவும் வினைத்திறனுள்ள முறையிலும் தங்களது கடமைகளை நிறைவேற்றவில்லை.
பெண்ணுரிமை செயற்பாட்டாளர்களாக நாங்கள் பல அணுகுமுறைகளை நாடியும் இந்தக் கட்டமைப்புக்கள் சீராக இயங்கவில்லை. அதனால் சிறுவர்கள் தொடர்பான பாரிய வன்முறைகள் தொடர்ச்சியான இடம்பெற இந்த கட்டமைப்புகளது வினைத்திறனற்ற செயற்பாடுகள் ஒருவகையில் வழிவகுத்துள்ளன. இந்த நிகழ்வின் பின்னரேனும் இந்தக் கட்டமைப்புக்கள் அவர்களது கடமைகளை சரியாக வினைத்திறனுள்ள வழியில் பாதிக்கபட்டவருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய வகையில் செய்ய வேண்டும். மேலும் அதன் துறை சார்ந்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நீதித்துறை சார்ந்த பல மாற்றங்களை கதைத்து கொண்டிருக்கும் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களும் சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்டங்கள் தொடர்பான மாற்றங்கள் தொடர்பாகவும் கருத்திற் கொள்ள வேண்டும்.
அதற்கான செயற்திறன் மிக்க பொறிமுறைகளை உருவாக்கி, நீதித்துறை சார்ந்த கட்டமைப்பில் சிறுவர்கள் சார்ந்து கையாளப்படும் வழக்குகளை காலதாமதமில்லாமல் விரைவாக விசாரணைகளை மேற்கொண்டு தண்டனைகளை வழங்கக் கூடிய செயல்முறைகளைக் கொண்டு வர வேண்டும்.துரிதப்படுத்தப்பட்ட செயன்முறையை (Expedited process) நடைமுறைப்படுத்தி விரைவாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு உதவ வேண்டும். இவ்வாறு செய்தால் மாத்திரமே சிறுவர் துஸ்பிரயோகத்தையும் அவர்களுக்கெதிரான வன்முறைகளையும் இலங்கையில் குறைக்க முடியும்
அனுசரணையுடன்:
1. Women’s Action Network
2. Suriya Women’s Development Centre – Batticaloa
3. Mannar Women’s Development Federation
4. Centre for Human Rights & Development
5. Affected Women’s Forum – Ampara
6. Muslim Women’s Development Trust – Puttalam
7. Rainbow Pillars for Creativity&8. Women Aid Network ௲ East
8. Women Aid Network & East
9. Eastern Social Development Foundation
10. Institute of Social Development & Kandy
11. Rural Development Foundation
12. Law & Human Rights Centre & Jaffna
13. Women Development Innovators
14. Third Eye Local Knowledge & Activist Group
15. Alliance for Minorities
16. Human Elevation Organization – Ampara
17. Viluthu Centre for Human Resource Development
18. National Christian Evangelical Alliance Sri Lanka
19. District Federation of Women Rural Development Societies (Jaffna, Killinochchi,
Mullaitheevu, Mannar, Puttalam, Batticaloa, Trincomalee)
20. Amara District Forums Female Heads of Households (Jaffna, Killinochchi, Mullaitheevu,
Mannar, Puttalam, Batticaloa, Trincomalee)
21. International Centre for Ethnic Studies
22. National Peace Council
23. Association of War Affected Women
24. Sisters at Law
25. Stop Child Cruelty Trust (as Organization)
26. Sisterhood Initiative
27. National Fisheries Solidary Movement
28. Hashtag Generation
29. People’s Alliance for Right to Land
30. Law & Society Trust
31.Centre for Policy Alternative