உடலில் 72 வீதமான தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இஷாலினி இறந்த பிறகு . மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு பரிசோதனையில் அந்தச் சிறுமி நெடுங்காலமாக பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.. முன்னாள் அமைச்சரும்இ பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் வீட்டில் கடந்த ஒரு வருடமாக வேலை பார்த்த சிறுமி இறந்து போகும் போது அவளது வயது பதினாறு. (12.11.2004 – 15.07.2021)பாராளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதீயுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வந்த 16 வயது சிறுமி தீயினால் இறந்ததாக கூறப்பட்டாலும் இச்சம்பவத்துடன்டன் தொடர்புடையவர்களையும் பாராளமன்ற எம்பி ரிசாட் பதியுதீனையும் சம்பவத்துடன் தொடர்பான குற்றவாளிகளைசயும் சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனையளிக்கப்பட வேண்டும்.
இலங்கை,இந்தியா,சுவிற்சர்லாந்து,ஜேர்மனி,அமெரிக்கா
மலேசியா,சிங்கப்பூர், லண்டன், பிரான்ஸ்,இத்தாலி
நியுசிலாந்து,அவுஸ்திரேலியா ,கனடா,நெதர்லாந்து ,டென்மார்க் ,நோர்வே, ஐக்கிய அரபு ராச்சியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்ணிய சமூகசெயற்பாட்டாளர்கள். மற்றும் ஊடறு தோழிகள் சிறுமி இஷாலினியின் வன்கொடுமைக் கொலையை கண்டிக்கிறோம்