மீண்டும் மீண்டும் உணர்ச்சிக்கொப்பளிக்கும் இந்த வசனம் போர்க்கால மரணத்தின் போராளிகளின் கதையை எழுதிக்கொண்டே இருக்கிறது. பாஸ்கரன் கதைப்பாத்திரம் யார்?தீபன் யார்?செல்வா யார்?தமிழ் நாட்டில் போராளியைக் காட்டிக்கொடுத்த “அவன்” யார்?இப்படியான விவாதங்களை எழுப்பி சமகாலத்தில்நடந்து முடிந்த சரித்திர நிகழ்வுகளின் பின்னணியில்கதைப்பின்னலை உருவாக்கி… திரையில் வந்திருக்கிறதுFAMILY MAN2 . *இப்படியான ஒரு கதை இந்திய அரசு உளவுத்துறை, ஐஎஸஐ, தமிழ் ஈழப் போராளிகளின் இயக்கங்கள் குறிப்பாக புலிகள் இயக்கம், பெண் போராளிகள்,நாடு கடந்த தமிழ் ஈழ அரசு என்று காட்சிப்படுத்தப் பட்டு வெளியிட்ட தன் மூலம் அமேசான் ப்ரைம் உலகளாவிய ஈழத் தமிழர்களின் கவனத்தைஈர்த்ததில் வெற்றி பெற்றிருக்கிறது.அமேசானின் நோக்கம் சமகால ஈழப்போராட்டத்தைக் காட்டுவதோ அதன் நியாயப்பாடுகளை முன்வைப்பதோ அல்ல. அவர்களுடைய நோக்கம்மார்க்கெட்டிங்க், விற்பனை. எதைக் காட்டினால் தன் அலைவரிசையை உலக நாடுகளெங்கும் எடுத்துச் செல்ல முடியும் என்று நினைக்கின்றார்களோஅதைக் காட்டி நடக்கும் வியாபாரம்.*இக்கதையோட்டத்தில் வரும் முக்கியமான ஒரு வசனம்“ நான் அரசியல்வாதி அல்ல, போராளி”ஈழப்போராட்டக் களம் தாண்டி விவாதிக்க வேண்டிய கருத்து இது.*ராணியாக நடிக்கும் சமந்தா..சிறிய விமானத்தை windmill என்று சொல்லி லாரியில் கட த்தும்போது செக்போஸ்டில் பிடிபடுகிறார்கள்.
அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்ல முடியாது என்று அதிகாரி சொல்கிறான். அவன் பார்வை ராணியைநோக்கி இருக்கிறது. லாரியை ஓரமாக நிறுத்தியாகிவிட்ட து.அடுத்து…???ராணி அவன் பார்வையைப் புரிந்து கொண்டு அவன் எப்படிப்பட்டவன் என்பதை அடையாளம் கண்டுகொள்கிறாள். அவனருகில் செல்கிறாள்.எதோ பேசுவதாக லாங்க் ஷாட் காட்சி. வசனம் ஒலிப்பதில்லை.அருகிலிருக்கும் ஒரு ஷெட்டுக்குள் நுழைகிறாள்.அந்த அதிகாரியும் நுழைகிறான்.சிறிது நேரம் கழித்து அவள் மட்டும் வெளிவரும் காட்சி.ராணி தன் மேல்சட்டையை சரி செய்து கொண்டு முகம் வியர்த்து கண்கள் சிவந்து வெளியில் வருவாள்.நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை எடுத்துக் கொண்டு அவர்கள் புறப்படுவார்கள்.ஷெட்டுக்குள் என்ன நடந்த திருக்கும் என்பதை பார்ப்பவர் புரிந்து கொள்கிறார். ராணி பாலியல் வல்லாங்கை அனுபவித்தவள்.இலங்கை இராணுவத்தின் கொடுமையிலிருந்து அவளை மீட்ட து தமிழீழ இயக்கத்தின் தலைவர்.. கதையோட்ட த்தில் இக்காட்சி..என்ன சொல்லவருகிறது?பெண் போராளியை இழிவுப்படுத்திவிட்ட தா?உடல் .. பெண்ணுடல்.. ஆணின் அதிகாரத்தைக் காட்ட அவன் ஏறி அமரும்பெண் உடல்..உடலை ஆயுதமாக தற்கொலை ஆயுதமாக பயன்படுத்ததுணிந்திருக்கும் ராணி..செத்துப்போனால் கருகி சாம்பாலாகும் உடல்புதைத்துவிட்டால் மக்கி மண்ணோடு மண்ணாகும் உடல்..இந்த உடலில் என்னடா இருக்கு..போடா .. நீயும் உன் புனிதங்களும்..எந்த உடலை வைத்து பெண்ணைக் கீழ்மைப்படுத்த முடியுமோஅதே பெண்ணுடல் போராயுதமாகவும் மாறும்..!எந்த உரையாடலுமின்றி காட்சிகள் விரியும்போதுஉரையாடல்கள் நமக்குள் விரிகின்றன.