Dr Norman Finkelstein (American political scientist) -மொழியாக்கம் – கௌரி பரா
நாடற்றவர்களுக்காக நான் பிறந்தேன் அங்கு ஏற்கனவே வாழ்ந்தவர்களின் வதிவிட உரிமைகள் நான் வந்தபின் பறிக்கப்பட்டனஎனது மக்கள் 400 பலஸ்த்தீனிய கிராமங்களை அழித்து தரைமட்டமாக்கினர்.அவர்களின் வரலாற்றை மண்ணோடு மண்ணாக்கினர்.இந்தச்செய்கை மூலம் அவர்களுக்கு நான் படிப்பித்த பாடம் என்னவெனில் ஒன்றில் செத்து மடியுங்கள் இல்லை வெளியேறுங்கள் என்பதாகும்.எனது பெயர் இஸ்ரேல். எனது குடிமக்கள் சிலர் படுகொலைகளை செய்கிறார்கள் பின்னர் அவர்களே பிரதம மந்திரிகள் ஆகிறார்கள். 1948 ல் மனேச்சம் பிகின் உத்தரவின் பேரில் டெயர் பாசின் வாழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப்படுகொலையில் 100 பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். 1953 ல் ஏரியல் ஷாறன் உத்தரவின் பேரில் குப்பிய வாழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.1982 ல் சப்ரா மற்றும் ஷற்றிலா அகதி முகாம்களில் வாழ்ந்த 2000 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.எனது பெயர் இஸ்ரேல் 1948 ல் 78 வீதமான பலஸ்தீனிய மண்ணிலிருந்து நான் பிறந்தேன்.அப்போது பலஸ்த்தீனியர்களை நான் வெளியேற்றினேன்.ஐரோப்பா மற்றும் உலகெங்கும் பரந்து வாழ்ந்த யூதர்களை இங்கு கொண்டு வந்து குடியேற்றினேன்.இங்கு பல்லாயிரம் வருடமாக வாழ்ந்த பலஸ்த்தீனியர்களை நான் இங்கு மீள் குடியேற அனுமதிக்கவில்லை.ஆனால் உலகில் எந்த மூலையில் இருந்து யூதர்கள் இங்கு வந்து குடியேறினாலும் அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் உடனடியாக குடியுரிமை வழங்கினேன்.எனது பெயர் இஸ்ரேல். 1967 ல் மிகுதியாக இருந்த பூர்வீக பலஸ்தீனிய நிலங்களை அபகரித்ததோடு வெஸ்ட் பாங் , கிழக்கு ஜெருசலேம் காசா நிலங்களில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்வை இராணுவ அடக்குமுறைக்குள் கொண்டு வந்து அவர்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறேன்.
இதன் மூலம் பலஸ்த்தீனியர்களுக்கு நான் கற்பிக்கிற பாடம் என்னவெனில் அவர்கள் இந்த நிலத்தில் வேண்டாத விருந்தாளிகள், இறுதியாக அவர்களுக்கு இருக்கும் ஒரே தேர்வு ஜோர்டன் மற்றும் லெபனானில் உள்ள அகதி முகாம்களில் வாழும் பல மில்லியன் பலஸ்த்தீனிய அகதிகளோடு சேர்ந்து கொள்வது தான். எனது பெயர் இஸ்ரேல். அமெரிக்க பிரதான ஊடகங்கள் என் செயல்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கின்றன. இதற்காக நான் பல மில்லியன் பணத்தை ஒதுக்கியிருக்கறேன்.நீங்களே பாருங்களேன், அகில உலக மீடியாக்களை! நான் செலவிடும் பணம் எத்தனை கச்சிதமாகப்பயன்படுத்ப்படுகிறது. எனது பெயர் இஸ்ரேல்.பலஸ்த்தீனியர்களே! உங்களுக்கென்ன வேண்டும்? சமாதானம்? நான் உங்களுடன் பேச்சு வார்த்தைக்கு வருகிறேன், நீங்கள் முனிசிப்பால்ரிகளை நிர்வகிக்கலாம் ஆனால் நாட்டின் எல்லைகள் , நீர் வளம், வான் வெளி எல்லைகள் மற்றும் முக்கினமானவைகள் எல்லாம் என் கட்டுப்பாட்டிற்குள்த்தான் இருக்கும், சமாதானப்பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கும் போதே நான் உங்கள் மலைகளை அபகரிப்பேன், அங்கு ஆயுதமேந்திய தீவிரவாதிகளை குடியேற்றுவேன். இந்தக்குடியேற்றங்கள் பிரதான போக்குவரத்து பாதைகளோடு பிணைக்கப்பட்டிருக்கும், இந்தப்பாதைகளை நீங்கள் பயன்படுத்த முடியாது .
நீங்கள் உங்களுக்காக வரையறுக்கப்பட்எல்லைகளுக்குள் இருப்பது மட்டுமல்லாமல் நீங்கள் வாழும் எல்லாத்திசைகளும் கண்காணிப்பரண்களால் களால் சூழப்பட்டிருக்கும். கண்காணிக்கப்பட்டுக்கொண்டேயிருப்பீர்கள்.எனது பெயர் இஸ்ரேல். உலகத்தில் நான்காவது சக்தி வாய்ந்த ராணுவமும் அணுவாயுதங்களும் என் வசம் உள்ளன. என்ன துணிச்சலில் உங்கள் சிறுவர்கள் எனது ராணுவத்தின் அடக்குமுறையை எதிர்கொள்ள வெறும் கற்களை பாவிக்கறார்கள்? என்னுடைய ராணுவம் அவர்கள் தலையை துண்டாடுவதற்கு சற்றும் தயங்க மாட்டார்கள் என்று உங்களுக்கு புரியாதா? 17 மாதங்களில் உங்களில் 900 பேரைக்கொன்றிருக்கிறேன். 17 000 பேர்களை காயப்படுத்தி இருக்கிறேன், இதில் பெரும்பாலானோர் பொதுமக்கள், இதைத்தொடர எனக்கு எந்த தடைகளும் இல்லை , உலகம் இதை தட்டிக்கேட்காது.எனது பெயர் இஸ்ரேல்உங்களுக்கு என்ன வேண்டும் ? சுதந்திரமா? என்னிடம் கன ரக ஆயுதங்களும் துப்பாக்கிகளுமே உள்ளன. நான் உங்களின் நகரங்களை எனது கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கிறேன், உங்களுடைய மரங்களை வேரோடு பெயர்த்திருக்கிறேன், உங்கள் வீடுகளை தரைமட்டமாக்கியிருக்கிறேன், இன்னமும் நீங்கள் என்னிடம் விடுதலையைக்கோரி நிற்கிறீர்கள்? புரிந்து கொள்ளவே மாட்டீர்களா? உங்களுக்கு எந்தக்காலத்திலும் சமாதானமோ விடுதலையோ கிடையவே கிடையாது !ஏனெனில்எனது பெயர் இஸ்ரேல்! .
I am Israel. I came to a land without a people for a people without a land. Those people who happened to be here, had no right to be here, and my people showed them they had to leave or die, razing 400 Palestinian villages to the ground, erasing their history.I am Israel. Some of my people committed massacres and later became Prime Ministers to represent me. In 1948, Menachem Begin was in charge of the unit that slaughtered the inhabitants of Deir Yassin, including 100 women and children. In 1953, Ariel Sharon led the slaughter of the inhabitants of Qibya, and in 1982 arranged for our allies to butcher around 2,000 in the refugee camps of Sabra and Shatila.I am Israel. Carved in 1948 out of 78% of the land of Palestine, dispossessing its inhabitants and replacing them with Jews from Europe and other parts of the world. While the natives whose families lived on this land for thousands of years are not allowed to return, Jews from all over the world are welcome to instant citizenship.I am Israel. In 1967, I swallowed the remaining lands of Palestine – East Jerusalem, the West Bank and Gaza – and placed their inhabitants under an oppressive military rule, controlling and humiliating every aspect of their daily lives. Eventually, they should get the message that they are not welcome to stay, and join the millions of Palestinian refugees in the shanty camps of Lebanon and Jordan.I am Israel. I influence American mainstream media too, and you will always find the news tailored to my favor. I have invested millions of dollars into PR representation, and CNN, New York Times, and others have been doing an excellent job of promoting my propaganda. Look at other international news sources and you will see the difference. I am Israel. You Palestinians want to negotiate “peace!?” But you are not as smart as me; I will negotiate, but will only let you have your municipalities while I control your borders, your water, your airspace and anything else of importance.
While we “negotiate,” I will swallow your hilltops and fill them with settlements, populated by the most extremist of my extremists, armed to the teeth. These settlements will be connected with roads you cannot use, and you will be imprisoned in your little Bantustans between them, surrounded by checkpoints in every direction. I am Israel. I have the fourth strongest army in the world, possessing nuclear weapons. How dare your children confront my oppression with stones, don’t you know my soldiers won’t hesitate to blow their heads off? In 17 months, I have killed 900 of you and injured 17,000, mostly civilians, and have the mandate to continue since the international community remains silent. Ignore, as I do, the hundreds of Israeli reserve officers who are now refusing to carry out my control over your lands and people; their voices of conscience will not protect you. I am Israel. You want freedom? I have bullets, tanks, missiles, Apaches and F-16s to obliterate you. I have placed your towns under siege, confiscated your lands, uprooted your trees, demolished your homes, and you still demand freedom? Don’t you get the message? You will never have peace or freedom, because I am Israel.- Dr Norman Finkelstein (American political scientist)