கிருஷ்ணகுமாரி பலாங்கொடை ,இலங்கை
அந்தரத்தில் அந்தகால்
ஆட்டம் காட்டி நிற்க
செந்தளித்த முகத்துடன்
வந்தவன் இளைஞன்
உள்ளத்தை மறைத்துக்கொண்டு
வரம் கேட்கும் பிச்சைக்காரர்
தொல்லைகள் பல தொடர
தொங்க விட்டேன் தலையை நான்
******
வண்டுகளாய் மொய்க்கும்
வாகனங்கள் இடையே
வட்டமிட்டன கண்கள்- என்
வணக்கத்துக்குரிய வண்டியை
வந்தது வண்டி
வரிசையில் நின்றேறி
பரபரப்பாய் நீங்கியொரு
பக்கத்தில் உட்கார்ந்தேன்
நின்றது ஓட – இன்னும்
நேரம் சில உண்டு
பார்வையை அலைய விட்டேன்
பாதை மீதில்…
உச்சிவெயில்
உயிரை வதைக்க
உள்ளம் நொந்தவண்ணம்
உடல்கள் உலவின
உள்ளத்தை மறைத்துக்கொண்டு
வரம் கேட்கும் பிச்சைக்காரர்
தொல்லைகள் பல தொடர
தொங்க விட்டேன் தலையை நான்
வண்டி நகரும் வரை
வாசலை பார்த்திருந்தேன்
வந்தான் ஒருவன்
வையத்தில் வாழ எண்ணி
காலொன்றின் சுமையைக்
கையிரண்டும் தாங்கி நிற்க
அந்தரத்தில் அந்தகால்
ஆட்டம் காட்டி நிற்க
செந்தளித்த முகத்துடன்
வந்தவன் இளைஞன்
கையில் ஒர் பலகையிலே
அதிஷ்ட சீட்டு பலகொண்டு
வந்தவன் அறிவாளி
முட்டாள்களை ஏமாற்ற
அதிஷ்டத்தை நம்பினால்
அவன் ஏன் அலைகிறான்?
ஆனாலும்இ பாடுகிறான் புகழுரைகள்
அதேயே தலைவனாக்கி
ஏதேதோ மொழி சொன்னான்
எதுவும் புரியவில்லை
வாயென்ன பேசினாலும்
வந்தவன் மனிதனன்றோ?
அன்றுவரை என்கை
அறிந்திராத அந்தச் சீட்டை
சிந்தையுடன் வாங்கிடவே
சில்லரையை நீட்டினேன்
கையில் தந்தவன்
கனிவுடன் புன்னகைத்து
மெய்யின் சுமைத்தாங்கி
மெல்லத் தொடர்கின்றான்
கண்ணைச் சில நொடிகள்
களவுக் கொண்ட அந்தச் சீட்டு
அதிஷ்டம் நிலைக்காதென
யார் யாரோ சொன்னாரே,
பின்னர் இதை நான் ஏன் பெற்றேன்!
காற்றொன்று வந்து
கையிருந்த அச்சீட்டை
களவாடிச் சென்றதம்மா
தடுமாறிப் போனேன் நான்
ஓ ஹோ… ஹோ… இதைத்தானோ
“அதிஷ்டம்” என்று சொல்லிவைத்தார்
உழைக்காது வரும் அதிஷ்டம்
உருப்படியாய் எதும் தரா