//மா….நான் பொண்ணா இருந்தா நல்லா இருக்கும்ல?ஏன் இசை….பையனா இருக்க புடிக்கலியா?பிடிச்சிருக்கு மா.ஆனா பொண்ணா இருந்தா நல்லாருக்கும்னு தோனுது.ஒன்னும் பிரச்சனை இல்ல.இதே போல உன்னோட 10 வயசுக்கு மேலயோ,15வயசுக்கு மேலயோ இல்லனா 20 வயசுக்கு மேலயோ தோனிச்சினா நீ பொண்ணா மாறிடு.ஆனா…பொண்ணா இருந்தா நல்லாயிருக்கும் அப்டிங்கிறதுக்காக இல்லாம….உன்ன நீ பொண்ணாவே உணருறனு சொன்னா அந்த முடிவுக்கு வா.அப்பவும் டாக்டர்கிட்ட போய் பேசிட்டு அந்த முடிவுக்கு வா.நான் இருந்தாலும் சரி இல்லானாலும் சரி.இது உன் உடம்பு உன்னோட உரிமை.சரி மா.//
இசைப்ரியன் ரெண்டாவது படிக்கும்போது நிகழ்த்துன உரையாடல் இது.இப்பவும் எப்போவாவது அவன்ட்ட நான் கேட்கறது உண்டு “அப்டி தோனுதா இசை?”னு.நடவடிக்கையையும் பார்த்துட்டே இருக்கிறதும் உண்டு.சிலசமயம் Lipstick போட்றது,Make up போட ஆசப்பட்றது,யஷ்வினாவோட பாவாடையை எடுத்துப் போட்றதுனு இருக்கான்.இது மாறாதுனு சொல்லவும் முடியாது,மாறிடும்னு நினைக்கவும் கூடாது.ஏனா…அது அவனோட உடல்சார்ந்த,உடைசார்ந்த விசயம்.ஆனா…ஒன்ன மட்டும் எப்பவும் இசைக்கிட்ட சொல்லுவேன் “நீ செய்ற எந்த விசயமும் அடுத்தவங்களை பாதிக்கக்கூடாது;சட்டப்படி சரியானத செய்யணும்”.வீட்டுக்குள்ள நடக்கும் இதே உரையாடலும் ஆலோசனைகளும் பள்ளியிலும் வகுப்பறைகளிலும் தொடர்ந்துகிட்டே இருக்கு.ஒருவரின் நடை,பேசும் விதத்தை வைத்து அவர்களை எதிர்பாலின சொல்லாடலைக் கொண்டு புண்படுத்தக்கூடாது;அவர்களை அவர்களின் இயல்புகளோடு ஏறுறுக்கொள்ளப் பழகவேண்டும் என்பன போன்ற சில ஆலோசனைகளோடு விவாதங்களும்,கலந்துரையாடல்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.திருநங்கைகளைத் திரைப்படத்திலும் நேரிலும பார்ததவர்கள்,திருநம்பிகளைப் பார்த்ததில்லை.திருநம்பிகளின் எண்ணிக்கை ஏன் குறைவாக இருக்கின்றது என்பதையும் விவாதித்துள்ளோம்.
ஒரு பெண் தைரியமாக,சுயமரியாதையோடு நடந்தாலே ” நீ என்ன ஆம்பளனு நெனப்பா;நீ என்ன ஆம்பள மாதிரி நடந்துக்கிற?”போன்ற கேள்விகளைக் கேட்டுப் பழகிய வெகுஜனம் ஒர் பெண் ஆணாக உணர்தலையும்,ஆணாக வாழ விரும்புவதையும் எப்படி விரும்பும்?திருமணம் வேண்டாம் என்று அடம்பிடிக்கும் பெண்களுக்குப் பின்னால்,திருமணமாகிக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளாமல் வாழும் பெண்களுக்குப் பின்னால்,நான் துறவியாகத்தான் போவேன் என்று விடாப்பிடியாக இருக்கும் பெண்களுக்குப் பின்னால் அத்தனை உணர்வு சார்ந்த வலிகள் இருக்கின்றன.இதைத் தாண்டி வெளிவருதல் என்பது அசாத்தியமானது.தெரியும் தூரங்களில் திருநங்கைகள் இருப்பதால் தன்னைப் பெண்ணாக உணரும் ஆண்களுக்குக் கலங்கரை விளக்கம் இருக்கின்றது என்ற நம்பிக்கைக் கிட்டியதால் இன்று அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள்.அவர்களின் தொழில் இது,அவர்கள் ஏன் கைத்தட்டி கேட்கணும்,அவர்கள் ஏன் அப்படி உடை உடுத்தணும் போன்ற கேள்விகள் ஒவ்வொன்றையும் கண்ணாடி முன் நின்று கேட்பது போல.அவர்களுக்கான வேலைகளை யாரும் வழங்க முன்வராதவரை,அவர்களை அப்படியான ஒரு பிம்பத்தில் பார்க்கும்போது,அவர்களை அனுபவிப்பவர்களை நாம் குற்றம் சாட்டாதவரை இவையெல்லாமே தொடரும்.”கஷ்டப்பட்டு,புள்ளைகள பெத்து,வளத்து,ஆளாக்கி,ஒரு நல்ல நிலைமைக்கு வரணும்னுதான ஆசப்பட்றோம்.ஆனா அவங்க எங்கள அவமானப்படுத்திட்டு,அசிங்கப்படுத்திட்டு போயிட்டாங்க.போயிட்டு பிச்சையெடுத்து சாப்பட்றாங்க.அப்டியென்ன அவங்களுக்குப் பொண்ணா/பையனா மாறணும்னு வெறி.கட்டுப்படுத்திட்டு எங்கக்கூடவே இருந்திருக்கணும்ல”.இவைகள்தான் பெற்றோர்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றன.எல்லோருக்குமான அறிவுறுத்தல்
அவர்களின் உடல்;அவர்களின் உரிமை.மனிதர்களைப் பாலின அடிப்படையில் பார்த்து,ஒழுக்கம் கற்பிப்பதை நிறுத்துவோம்.நம் எண்ணங்களை,கற்பனைகளை,குறிக்கோள்களை,ஜாதிகளை,மதங்களை,எதிர்பார்ப்புகளை….. நாம்தான் பெற்றெடுத்தோம் என்ற ஒரே காரணத்துக்காகத் திணிக்காமல் இருப்போம்.#transgenders#April15#TransgenderdayinTamilnadu#இனியதிருநர்தினவாழ்த்துகள் https://www.facebook.com/mahalakshmi838?comment_id=Y29tbWVudDo0MDA2NjQzOTc2MDgyMDQwXzQwMDY2