அடிமையாக இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. சட்டத்தால் அல்லது பழக்கவழக்கத்தால் எந்தப் பாதுகாப்பும் தரப்படாமல் இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. இன்னொருவரது விருப்பத்துக்கு முழுமையாக அடிபணிய வேண்டியவராக சட்டங்களால் விற்பனைக்குரிய ஒரு பொருளின் நிலைக்குத் தள்ளப்பட்டவராக இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது…
அமெரிக்காவின் அடிமை வாழ்க்கை வரலாறுகளைக் கருப்பொருளாகக் கொண்டு இதற்கு முன் வந்த பல நூல்களை விட ஹாரியட் ஏ. ஜேக்கப்ஸின் இந்நூல் ஈர்ப்பு மிகுந்த அம்சங்களை முன் வைக்கிறது. ஏனெனில் உண்மையும், புனைவும் கலந்த அந்த நூல்களிலிருந்து மாறுபட்ட ஒன்றாக, அமெரிக்காவின் விசித்திரமான அடிமை அமைப்புக்குப் பலியாகிவிட்ட ஓர் இளம் பெண்ணின் சிக்கலான வாழ்க்கை அனுபவத்தின் பதிவு இது.
அடிமை முறையில் நான் அனுபவித்த துயரமான வாழ்க்கை குறித்து ஓர் உண்மையான நியாயமான விவரணையை நேர்மையான விதத்தில் முன்வைப்பதற்கு முயற்சிக்கின்றேன். கிறஸ்தவ உணர்வோடு அதைச் செய்ய முயற்சிக்கிறேன். என்பது கடவுளுக்குத் தெரியும் வேறு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு பெண் என்ற முறையில் நான் உங்களுடைய இரக்கத்தைப் பெறுவதற்குத் தகுதியானவளா அல்லது வெறுப்பைப் பெறுவதற்கு தகுதியானவளா என்று தீர்ப்பு வழங்கப்படுவதற்காக உங்கள் முன்னால் என்னை நானே முன் வைக்கிறேன். என் மனதில் இன்னொரு நோக்கமும் இருக்கிறது. பரிதாபத்திற்குரிய ஓர் அடிமைத் தாயினுடையதாக அது உங்களிடம் வரவேண்டும். என் காதில் விழுந்ததையல்ல. பரிதாபத்திற்குரிய ஓர் அடிமைத் தாயாக நான் பார்த்தததை நான் அனுபவித்ததை மட்டுமே சொல்ல வேண்டும் என்பது தான் அது.
ஜேக்கப்ஸ் தனது தோழிக்கு எழுதுகிறார் “நான் அடிமையாகப் பிறந்தேன். இரணடு வயதிலும், நான்கு வயதிலும் விற்கப்பட்ட இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகும் வரை துன்பத்தின் இருப்பிடமான தெற்கில் வளர்ந்து வந்தேன். வடக்கு மாநிலங்கள் அனைத்திலும் நான் வேட்டையாடப்பட்டேன். ஆனால் என் சொந்தத் துயரங்களையெல்லாம் உங்களிடம் சொல்லப் போவதில்லை. என் ஆன்மாவைப் பெருந்துயரில் ஆழ்த்திய அனுபவங்களையெல்லாம் நான் சொல்லமாட்டேன்.,
அடிமையாக இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. சட்டத்தால் அல்லது பழக்கவழக்கத்தால் எந்தப் பாதுகாப்பும் தரப்படாமல் இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. இன்னொருவரது விருப்பத்துக்கு முழுமையாக அடிபணிய வேண்டியவராக சட்டங்களால் விற்பனைக்குரிய ஒரு பொருளின் நிலைக்குத் தள்ளப்பட்டவராக இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது.” என்கிறார்.மனிதர்களை விற்பனைப் பொருளாக பாவிக்கும் அடிமை முறைக்கும் அதற்கு துணை நிற்கும் வெள்ளை இனவாதக் கருத்தியலுக்கும். அது போலவே மரபான தந்தைவழி அமைப்புக்கள் மற்றும் கருத்தியல்களுக்கு சவாலாக விளங்கியது. லிண்டா பிரண்ட் என்ற கதை சொல்லியை படைத்து அதனுடாக தன்னைத் தானே ஓர் இயக்கிய பாத்திரமாகப் மாற்றிக் கொண்டது தான் ஜேக்கப்ஸின் சாதனை. எந்த பாலியல் நெறிமுறைகளின் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தாரோ அந்த நெறிமுறைகளை கடைபிடிப்பதில் தோல்வியடைந்து விட்டதையும் அவர் விவரிக்கிறார். மாற்றுத் தீர்வொன்றை அடையும் நோக்கில் சுதந்திரமான பெண்களுக்கு விதிக்கப்படும் பாலியல் நெறிமுறைகள் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு பொருந்தாது என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார். ஆழமான மனப்போராட்டத்தை வெளிப்படுத்தாமல் தனது கடந்த காலப் பாலியல் வாழ்க்கையை விவாதிக்க முடியாதவராக இருந்த போதிலும், இந்த வேதனை மிகுந்த தனிப்பட்ட விசயத்தை அரசியல் சார்ந்ததாக ஆக்குவதன் பொருட்டும் அடிமைப் பெண்களின் மீதான பாலியல் ஒடுக்குமுறை என்ற தடைசெய்யப்பட்ட தலைப்பு அடிமைமுறை என்னும் பிரச்சினை மீதான பொது விவாதங்களில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவும் இந்த விசயத்தை முன்னிலைப்படுத்திப் பேசும் ஒரு பெண்ணின் குரல்.
(விடுதலையின் நிறம் முகவுரையிலிருந்து)
எழுதியவர்: ஹாரியட் ஏ. ஜேக்கப்ஸ்
தமிழில்: வி. நடராஜ்
வெளியீடு: விடியல்