காலத்தினஇயங்குவிசை அவசரத்தில் தவறவிட்டுச் சென்ற யுகத்தின் வலிமையான கவிதைகளின் கருத்தாடலை ஒவ்வொரு யுகத்திலும் கவிதைக்கென அமையும்; தலைப்புகளின் மாயச்சுழியில் இழுபட்டுச் செல்லாமல் நிலாந்தி தன்னிலிருந்தும் தன்னைச ;சூழவுள்;ளதை எடுத்துக் கொண்டிருப்பதே அவரது கவிதைவெளி மொழியின் எளிமை நேரடித்தன்மை உண்மை துணிவு போன்றவற்றால கட்டமைந்திருப்பதுமாகும். இத்தொகுப்பில் அவரது பார்வைப் பரப்பெல்லை விரிவுபட்டிருப்பதையும் கருத்தியல் அழகியல் பெண் சார்ந்த விடயங்களை கண்டுகொள்ள முடிகிறது.
சோம்பலுடன் சுருண்டு தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையை சிலிர்த்துக் கொள்ளச் செய்யும் ஒரு நேசமான தடவலைப்போல கவிதைவரிகள் ஆங்காங்கு மனதைச் சிலிர்க்கச் செய்கின்றன.
என் கனவுகளின் அஸ்தியை
உன்னிடம் கரைத்து விட்டுச் செல்வதே
எனக்கு வேலையாகி விட்டது.
.வீடு, வேலை, சமூகம் என்று மட்டும் நிர்ணயிக்கப்பட் பெண்களின் வாழ்வில், இயல்பான நேசத்துடன் உணர்வுச் சூழல்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய நட்புக்காக ஏங்குவதே வழக்கமாகி விட்டபின், ஒன்று மொழி புரியாத குழந்தை மற்றையது இயற்கை. மிக இயல்பானது. வீட்டிலுள்ள உறவினர்க்கும் புரியாத உணர்வுகளை துல்லியமாக புரிந்து கொண்டவையும் கூட. இப்படித்தான் அடக்கி வளர்க்கப்பட்ட பெண்களின் உணர்வுப் பிரதிபலிப்பாக தன்மீதே நம்பிக்கையிழந்த வாழ்வின் கருத்தாக ஆரம்பிக்கின்றது. கவிதை வரிகள் ஆங்காங்கு மனதைச் சிலிர்க்கச் செய்கின்றன.
கண்களை வாயாக்கியது
வாயை ஊமையாக்கியது
மௌனத்தை கவிதையாக்கியது
கவிதையை தாய் மொழியாக்கியது
அழகை ஆராதித்து
அறிவைக் கொலை செய்தது.
இன்றைய சமூகத்தில் பெண்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் திகழ்வது வெளிப்படை எனினும் பெரும்பாலான பெண்களிடையே இத்தகைய உணர்வுகளே காணப்படுகின்றன. இங்கு தொனிக்கும் சோக உணர்வை ஊசலாடும் நம்பிக்கையின்மையை இன்னும் வலிதாக வெளிப்படுத்துகின்றன.
ஒரு மனதில் ஊசலாடும் நம்பிக்கைகளும் மிக மெல்லியவையே. வீட்டிற்குள் மனைவி, தாய், தாதி என்ற வகைகளில் வளைய வரும்போது, பழக்கப்பட்ட ஒரு தடத்தில் எந்த மாற்றமும் இல்லாத வாழ்க்கை முறையில் இயங்கும் மரத்துப்போன உள்ளத்திலும் ஒரு தேடல்; என்னவென்றே இனம்புரியாத தேடல். சராசரியாக எல்லாப் பெண்களின் வாழ்விலும் காணப்படக்கூடிய உணர்வுதான். மாற்றங்களை எதிர்பார்த்த போதும் மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும்போது சமூகத்திற்கான அச்சம் அவர்களை சிலையாக்கிவிடும்.
என்னுடனே போராடிக்
கொண்டிருக்கும்
என்கனவுகளே
நான் இறக்கும் போது
இறந்து விடாதீர்கள் நீங்களும்
எ ன்னைப் போல் யாரேனும்
வருவார்கள்
உங்களை வாழ வைக்க
இதனால் நிஜங்களை நேசிக்கிறார். வாழ்தலையும் மரணித்தலையும் தனக்காகவே செய்து கொள்வதற்கு ஒவ்வொரு பெண்ணையும் தூண்டுகிறார்.என்று தன்மீது பொய்மைத்தனத்தின் நிழல்கூட படிந்துவிடாதபடி எவ்வித பாசாங்குகளுமற்று மிக வெளிப்படையான இயல்புகளுடன் வெளிப்படும்
என் உயிரை உருக்கி
வார்த்தைகள் வடிக்கிறேன்
என் கண்ணீரை பேனா
மொழி பெயர்க்கிறது
என யதார்த்தத்தை தேடி ஏமாற்றமடைந்து வெதும்புகிறார். அநீதிகளை சகித்துக் கொண்டு வாழ முனைதலில்
அந்தியில் பூக்கும்
இந்த நிலாவில் கறைகளைப்
பூசியவர்கள்
அவர்களின் கறை படிந்த
கைகளையும்
சுமந்துகொண்டே
திரிகிறார்கள்.
என்று தனக்குத்தானே உறுதியெடுத்துக் கொண்டு தனக்கான பாதையை வகுத்துக் கொண்டுள்ளார். இது- கண்ணீரும் கவலையும் கழிந்து புத்துயிர்ப்புடன் வீறு கொண்டெழும் எல்லாப் பெண்களினதும் சார்பான குரலாக ஒலிக்கிறது நிலாந்தியின் முற்றுப்பெறாத கவிதைகள்.