கிளிநொச்சியில் தீ சட்டி ஏந்தி காணாமல் போன உறுப்பினர்களின் குடும்பங்கள் நீதி கோரி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்துள்ளனர்பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி) பரிந்துரைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனனர்.
ஒரு பாரம்பரிய தமிழ் நடைமுறையான தீசட்டி, களிமண் பாiனைகளை தங்கள் தலையில் கொண்டு போராட்டத்தில் பங்குபற்றியிருந்தனர் கொண்டு காணாமல் போனவர்களின் குடும்பங்கள் வடகிழக்கு முழுவதும் தொடர்ச்சியாக சாலையோர ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற கோரிக்கையோடும் அவர்களில் பெரும்பாலானோர்; மே 2009 இல் ஆயுத மோதலின் முடிவில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.என்று கூறும் இவர்கள். “நாங்கள் நான்கு ஆண்டுகளாக இடைவிடாமல் போராடி வருகிறோம்.
எங்கள் குழந்தைகள் பன்னிரண்டு ஆண்டுகளாக திரும்புவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம் “இன்னும் நீதி இல்லை” “அதனால்தான் நாங்கள் கறுப்பு கொடிகளை சுமக்கிறோம்.” ஏங்கள் பிள்ளைகள் எங்கே என கதறி அழுகின்றனர்.
நன்றி ஊடறுவுக்காக அதிரா