இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராக கலந்துரையாடல்.. இணையம் வழி ஊடறு பெண்கள் அமைப்பு நடத்தியது
மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஸ்ரீரீன், ஜுவரியா, பிஸ்லியா உட்பட வழக்கறிஞர் வைஷ்ணவி எழுத்தாளர் சல்மா உட்பட இந்தக் கலந்துரைடலில் பங்கு பெற்று தங்களின் எதிர்ப்பையும் ஆதரவையும் கருத்துகளையும் முன்வைத்தனர்.
1. வெண்துணி கவன ஈர்ப்பு போராட்டம். அதன் அர்த்தம் அல்லது அந்தப் போராட்டத்தின் தீவிரம் என்ன?
2. ஜனாஸாக்களை பலவந்தமாக எரியூட்டப்படுவதற்கு எதிராக நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் அமைதிப்போராட்டத்திற்கு எம்மாதிரியான எதிர்ப்புகள் வந்துக்கொண்டிருக்கின்றன? நாட்டு மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது? மேலும் உள்நாட்டில் முஸ்லிம் அல்லாதவர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது?
3. 80-க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்ககளின் உடல்கள் அவர்களின் மததிற்கு எதிராக எரிக்கப்பட்டுள்ளன. தவிர பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகள் இருவரை குடும்பத்தின் சம்மதம் இல்லாமல் எரித்திருக்கிறார்கள். இது மனித உரிமை மீறல் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு இலங்கை அரசு சொல்லும் காரணம் என்ன?
4. இறந்த உடலில் கொரானா வைரஸ் வெகு காலம் வாழ்வதில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கும் வேளையில் எதன் அடிப்படியில் இலங்கை அரசாங்கம் இந்த முடிவை எடுத்தது?
5. கொரோனா நோய்த்தொற்று காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அங்கு கோவிட் தொற்றால் மரணித்த இஸ்லாமியர்களை எப்படி இறுதிகாரியம் செய்தார்கள்? இலங்கையில் நடக்கும் இந்த மனித உரிமை மீறலை இந்தியாவில் எவ்வாறு பார்க்கப்படுகிறது?
6. முஸ்லிம் அல்லாத பிற இனத்தவர்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த விவகாரத்தை பெரிதாக கதைப்பதாக தெரியவில்லை. என்ன காரணம்?உள்ளிட்ட கேள்விகளுக்கும் அது தொடர்பான பதில்களில் எழுந்த சந்தேககங்களுக்கும் பேச்சாளர்கள் மிகப் புரிதலோடு பதில் அளித்தார்கள். தவிர, நேரலையில் கணிசமானவர்கள் இந்த உரையாடலை செவிமடுத்ததோடு இன்னும் அந்த உரையாடலை பகிர்ந்தும் கேட்டும் வருகின்றனர். வெண்துணி கவன ஈர்ப்பு போராட்டத்தை முதன் முதலில் முன்னெடுத்தது முஸ்லிம் அல்லாத பெண்கள்தான் என்று தோழர்கள் பதிவு செய்தார்கள். மிக நெகிழ்ச்சியாக இருந்தது..முழு உரையாடலையும் காண..