Funny Boyதீபா மேத்தா எடுத்துள்ள Funny Boy படம் இனப்படுகொலை பற்றி சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்து விமர்சிக்கப்பட்டு வருகின்றது.Funny Boy திரைப்படம் மூலமாக 83 இல் இலங்கையில் இனவன்முறைகள் நடந்தது என்று உலகத்திற்கு தெரியட்டும் என்று சொல்கிறார்கள்.. படத்தில் இடம்பெற்ற அரசியல் சமரசம் மற்றும் மொழிப்பயன்பாடு,தமிழர்கள் புறக்கணிப்பு போன்ற விடயங்கள் பற்றி விமர்சகர்கள் கலைஞர்கள் தங்கள் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பின்னர் இலங்கை அரசுடனும் இனப்படுகொலையை செய்தவர்களுடனும் கைகோர்த்து நிற்பவர்கள் தான் Funny Boy படத்தை எடுத்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. LYCA ரஜனி , விஜய் என பிரபலமான நடிகர்களை வைத்து பல கோடியில் படம் எடுத்துக்கொண்டிருக்கும் லைக்கா ஏன் இனப்படுகொலை பற்றி ஒரு படத்தை கூட இதுவரை எடுக்கவில்லை என்ற கேள்வி என்னுள் எழுகிறது. தீபா மேத்தா Mid Night Children போன்ற நல்ல படங்களை எடுத்துள்ளார் Funny Boy படமும் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என செய்திகள்