ஊடறு முப்பத்திமூன்று பெண் ஆளுமைகளின் செவ்விகளின் தொகுப்பை சங்கமி என்ற தலைப்பில் 2019ல் வெளியிட்டிருக்கிறது.
அவ்வப்போது ஊடறுவில் வெளியான நேர்காணல்களை ஒன்று திரட்டி நூல்வடிவில் கைகளில் சேரும்போது அது ஒரு பெறுமதி மிக்க ஆவணமாகிறது.இலங்கை, இந்திய,மலேசிய,ஆப்கான், ஆபிரிக்கா,அரேபியாவிலும் புலம்பெயர்நாடுகளிலும் வாழ்ந்த-வாழுகின்ற பெண்திறமைகளை சங்கமியில் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கிறது.
காடு இருந்தால்தான் நாங்கள் இருப்போம்.காடுபற்றிய அனைத்து விபரங்களும் எங்களுக்கு தெரியும். மரங்கள்,செடி, கொடிகள்பற்றியும், மூலிகைகள்,வனவிலங்குகள்பற்றியும் எங்களிடம் இருந்துதான் மற்றவர்கள் தெரிந்துகொண்டார்கள்.எங்கப் பெரியவங்களுக்கு இதுபற்றிய விபரம் நிறையத் தெரியும்…….
. மரங்கள்,செடி, கொடிகள்பற்றியும், மூலிகைகள்,வனவிலங்குகள்பற்றியும் எங்களிடம் இருந்துதான் மற்றவர்கள் தெரிந்துகொண்டார்கள்.எங்கப் பெரியவங்களுக்கு இதுபற்றிய விபரம் நிறையத் தெரியும்… .எங்களுக்கும், காட்டுஜீவராசிகளுக்கும் நல்ல புரிதல் இருந்ததால்,எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. வேட்டையாடுவதைக்கூட இயற்கையின் சமன்பாட்டுக்கு ஏற்றபடிதான் செய்வோம்.குறிப்பாக,இனப்பெருக்க காலத்திலும்,கர்ப்பகாலத்திலும் வேட்டையாடமாட்டோம்.மரங்களை தெய்வமாக நினைப்பதால்அவற்றை வெட்டமாட்டோம்.அதன் வாதுகளையும்,குச்சிகளையும் பயன்படுத்துவோம்…சி.கே.ஜானுவின் உள்ளார்ந்த இயற்கையை நேசிக்கும் யதார்த்தமான வெளிப்பாடு இது .
இவருடைய செயல்பாடுகளில் மனிதநேயம் மிளிர்கிறது.கார்ப்ரேட்டுகளும்-இந்தியஅரசும் ,4 லட்சத்துக்கும் மேல் வாழும் இனக்குழுக்களை சீர்குலைத்து, வனவிலங்குகளை பாதுகாக்கிறோம், ஆதிவாசிமக்களை முன்னேற்றுகின்றோம் என்கிற பாசாங்கு பிரச்சாத்தின் மூலம் இவர்களை ஏமாற்றி,வாழ்விடங்களை பறித்து வருகிறது.இவைகளுக்கு எதிரான போராட்டங்கள் சி..கே. ஜானுவின் இடைவிடா முயற்சியால் தொடர்கிறது. தாய்வழிச் சமூகம் நிலத்தை நேசித்தது. இயற்கையின் மேல் அன்பு செலுத்தும் மக்களே தாம் வாழும் பூமியை தம் சந்ததிக்கு மாசற்ற காற்றை,நீரை தரக்கூடியவர்கள். தம்மை ஒறுத்து நல்வளத்துக்காக போராடும் பெண்களின் குரல்கள் தொகுப்பில் உரத்து பேசுகின்றன.வலுமிக்க கோஷங்கள் ஆபிரிக்க,ஆசியப் பெண்திறமைகளிணூடாக ஐ.நா.வரை தம் கோரிக்கைகளை கொண்டு சேர்த்திருக்கிறது.,பெண் உரையாடல்கள் தலித் மக்களை அரசியல் படுத்தி அ்மைப்பாக்குவது, களச்செயற்பாடு,சாதி அ்டையாளத்தளத்தை அழிப்பது தொடர்பான முழுமையான பணிகளில் பெண்கள் தம்மை ஈடுபடுத்தி கொண்டிருக்கின்றர் என பல உரையாடல்கள் பதிவிடுகின்றன. சாதிக் கொடுமைகளை-சமூக அநீதிகளை வெல்ல முயலும் பெண் எழுத்தாளர்களின் ஆற்றலும் கூட்டுசேர்ந்து செயல்படுகின்றன. திருநங்கையரின் வலி..இவர்களுக்கு மேலான சமூக இழிவுகள்-குடும்ப நிறுவனம் பற்றிய கேள்விகள்-வர்க்கவேறுபாடுகள் பற்றி -இலங்கை பெண் போராளிகளின் தற்போதய வாழ்நிலை என மிக மிக விசாலமாக பேசப்பட வேண்டிய விடயங்களை சங்கமி முன் மொழிந்திருக்கிறது.
பல அறியப்பட்ட கவிதையாயினிகள் செவ்வி தந்திருக்கின்றனர். கதை,நாவல் ஆக்கதாரர்கள்,நாடகவியலாளர்,நடிப்புகலைஞர், விளையாட்டுவீரர் இமொழிபெயர்ப்பாளர் பாடகர்,ஓவியர் கைவினைகலைஞிகள், மனிதஉரிமை,சமூகமுன்னேற்ற-ஊடகச்செயற்பாட்டாளர்கள் என பல கலை-செயல் ஆளுமைகளின் சிறப்புகள் நூலில் கூறப்பட்டுகின்றன.,தமிழீழத்துக்காக போராடிய போராாளி தந்திருக்கின்றனர். ஆக்கதாரர்கள்,நாடகவியலாளர்,நடிப்புகலைஞர், விளையாட்டுவீரர் ,மொழிபெயர்ப்பாளர் பாடகர்,ஓவியர் கைவினைகலைஞிகள், மனிதஉரிமை,சமூகமுன்னேற்ற-ஊடகச்செயற்பாட்டாளர்கள் என பல கலை-செயல் ஆளுமைகளின் சிறப்புகள் நூலில் கூறப்பட்டுகின்றன.,தமிழீழத்துக்காக போராடிய போராாளிப் பெண்ணிடம் புனர்வாழ்வு தொடர்பான செவ்வியும், பேரினவாத அரசை விமர்சித்ததற்காக கொலை செய்யப்பட்டு,காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியலாளருக்காக அவ்வரசை எதிர்த்து இடைவிடாபோராட்டம் நடத்தும் பெண்ணின் செவ்வியும் சங்கமியில் செவ்வியும் சங்கமியில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
பெண்உழைப்புசுரண்டல்,பெண்சுதந்திரம்,பெண்உரிமை,பெண்ணுக்கான பொதுவெளி, பெண்-மத ஒடுக்குமுறை, பெண்சிசுக்கொலை, சிறுமியர்திருமணம், சாமத்திய சடங்கு, ஆடைத் தொழிற்சாலைகளில் பெண்களின் ,நிலைமை, சீதனம்,பெண்கல்வி,சிறுவர் கல்வி என மிக அவசியமான விடயங்களை விவாதிக்கும் ஆளுமைகளுக்கு கிடைத்த விருதுகள் அவர்களை மேலும் உற்சாகப்படுத்துகின்றன. பெண்சுதந்திரம் விழையும் பெண் ,போராளியாக அமைதியை குலைப்பவளாகவே காட்சி தருகிறாள்.
உண்மையில் பெண் சுதந்திரம் என்பது ,பெண் சுயமாக சிந்தித்து செயல்படுவது,அவளுக்கான வாய்ப்புக்களை அவள் தேடி பயணிக்கும்போது எந்த தடைகள் வந்தாலும்,சமாளிக்கும் தைரியம்,துணிச்சல்,அறிவாற்றல் என அனைத்தையும் பெறுதல்.இந்தச் சுதந்திர பயணத்தில் அவள் பிறர் உரிமைகளையும் மதித்து வளர்க்கும் பக்குவம் பெறும்போது, பொதுவெளியிலும் தனக்கான ஆளுமையைப் பெறுகிறாள்.கல்பனாவின் உற்சாகம் தரும் மொழி அது.
சங்கமி,கலைப்படைப்பான ஒரு முகஅட்டையைக் கொண்டும்,சுமார் 365பக்கங்களை கொண்டும் ,ரஞ்சி-புதியமாதவியின் முயற்சியாலும் ஒரு தொகுப்பாக உருவாக்கம் பெற்றிருக்கிறது.
https://www.dinamani.com/specials/nool-aragam/2019/nov/18/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF–%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3282900.html