அன்புடன் நண்பர்களுக்கு இன்று காலை நான் முத்துக்குமாரின் தங்கை மற்றும் அவர் கணவருடன் கதைத்ததின் நிமித்தம் அவர்கள் இந்த வீடியோவை எடுத்து முத்துக்குமாரின் தங்கையின் கணவர் எனக்கு வாட்சப்பில் அனுப்பியதை இங்கு நான் பதிவு செய்கிறேன்.முகநூலில் பரவும் முத்துக்குமார் பற்றிய பொய்யான தகவல் அம்பலம் குறித்தான வீடியோ ( முத்துக்குமாரின் அப்பா பேசுகிறார் )
https://www.facebook.com/oodaru/posts/3525124770900632
முத்துக்குமாரின் தங்கையுடனும் அவரது கணவருடனும் இன்று காலை கதைத்தேன் பலஅதிர்ச்சியான கதைகளை அவர்கள் கூறினார்கள். முத்துக்குமாரின் அம்மா 2001 லேயே இறந்து விட்டாராம் முத்துக்குமாரின் அப்பா கான்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் முத்துக்குமாரின் தந்தையார் பழைய பேப்பர்களை பொறுக்கி தனது வாழக்கைச் செலவுக்காக விற்று வருகின்றாராம். முத்துக்குமார் குடும்பம் தூத்துக்குடியை விட்டு வந்து சென்னையில் தான் வாழ்கிறார்களாம். அவர்களுக்கும் இந்த போட்டோவில் உள்ளவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். முத்துக்குமாரின் போட்டோவை வைத்து இப்படி அரசியல் வியாபாரம் செய்வது பிஜேபி ஆட்கள் தான் எனக்கூறுகிறார்கள் அவர்கள் . தயவு செய்து இவற்றை நம்ப வேண்டாம் என்கிறார்கள் முத்துக்குமார் அப்பா தங்களுடன் தான் இருக்கிறார் என்றும் இருவரும் கூறினார்கள். முத்துக்குமாரின் தங்கை கணவருடன் தொடர்பு கொள்ள விரும்புவர்கள் தொடர்பு கொள்ளலாம். இந்தப் இவ்விடயத்தில் முத்துக்குமாரின் தங்கையை சம்பந்தப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை…விரும்பினால் முத்துக்குமாரின் அப்பாவுக்கு நாம் உதவி செய்யலாம்.உதவி செய்ய முன்வந்த,டென்மார்க், பிரான்ஸ் ,சுவிஸ் மலேசிய, ,லண்டன் நண்பர்கள், மற்றும் தமிழ் நதிக்கும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்