எங்களுக்கு நடுவே, சிறிய ராணுவ வீராங்கனையை போல் அழகாக அவள் நடந்துவருவாள்””அச்சிறுமி கருப்பினத்தை சேர்ந்தவள் என்பதால் அமெரிக்க பள்ளியில் அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்காவின் வெள்ளை இன குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் கருப்பின மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத காலம் அது. அந்நாட்டின் உச்சநீதிமன்றம் வெள்ளையர் பயிலும் பள்ளிகளில் கருப்பின குழந்தைகளும் சேர்க்கபட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனாலும் லூசியானா மாநிலத்தில் வெள்ளையர் பயின்ற பள்ளிகள் கருப்பினர் பயில அனுமதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அரசு பள்ளிகள் கடைபிடிக்கும்படி கடுமையாக வலியுறுத்தப்பட்டது.
எனவே கருப்பின மாணவர்கள் பள்ளியில் சேருவதை தடை செய்ய பள்ளிகள் ஒரு யுக்தியை கையாண்டன. அதுதான் நுழைவு தேர்வு எனும் தடைக்கல். நுழைவுத் தேர்வில் கருப்பின குழந்தைகள் தேர்ச்சி பெற இயலாது என நினைத்தனர். ஆனால் இந்த நுழைவுத்தேர்வினை எழுதி 6 குழந்தைகள் தேர்ச்சி பெற்றனர். ஆனால் அக்குழந்தைகள் பள்ளியில் சேர பயந்தார்கள். ஆனால் அதில் ஒரு சிறுமி மட்டுமே பள்ளியில் சேர்ந்தாள். அச்சிறுமியின் தாய், தன் மகள் படித்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 1960ல் நவம்பர் 14 அன்று பள்ளிக்கு நான்கு காவல்துறையினரின் உதவியோடு, நிமிர்ந்த தலையோடு வகுப்புக்கு சென்றாள் அச்சிறுமி. அச்சிறுமி பள்ளிக்கு சென்ற முதல்நாளே நூற்றுக்கணக்கான வெள்ளையர்கள் பள்ளியின் வாசலில் அச்சிறுமிக்கு ஏதிராக முழுக்கமிட்டு எதிர்த்தனர். அச்சிறுமியே, அது குறித்து அச்சமோ கவலையோ கொள்ளாமல் தன் தாயின் வாக்கின்படி நிமிர்ந்த தலையோடு பள்ளிக்கு சென்றாள். ஒரு ஆசிரியர் தவிர மற்ற அனைத்து ஆசிரியர்களும் அச்சிறுமிக்கு பாடம் எடுக்க மறுத்தனர். எதிர்ப்பை காட்டும் வகையில் வெள்ளையர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தினார்கள். அச்சிறுமி மட்டும் வகுப்பறையில் தனியாக இருந்தாள். ஆனால், சில நாட்களிலேயே வேறு வழியின்றி பிற பெற்றோரும் ஒவ்வொருவராக தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். பலரின் மிரட்டலுக்கு பயப்படாமல் ஐந்தே வயதான அச்சிறுமி பள்ளிக்கு தினமும் சென்று வந்தாள். இதன்காரணமாக சிறுமியின் தந்தை பணி செய்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யபட்டார். அவர்கள் குடும்பத்தினருக்கான பொருட்கள் தருவது கூட கடைகளில் நிறுத்தப்பட்டன. பள்ளிக்கு சிருடை வாங்க கூட அவளுக்கு வசதியில்லை. ஆனாலும், கல்விதான் தன்னை விடுவிக்கும் என்ற சிந்தனையை அச்சிறுமியின் மனதில் ஆழமாக பதியவைத்தார் அவரது தாய். ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் கல்வி கற்றே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள் அச்சிறுமி. அப்படி உறுதியுடன் இருந்து கல்வி பயின்றதுதான் அச்சிறுமியின் சாதனை. எந்த பள்ளி அவரை வேண்டாம் என்று ஒதுக்கியதோ, அந்த பள்ளியிலேயே அவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது”.அச்சிறுமியின் பெயர்”#ரூபி_பிரிட்ஜஸ்” அவர்கள்.”எவ்வளவு மோசமான சூழலிலும் ரூபி அழுது நாங்கள் பார்த்ததில்லை. எங்களுக்கு நடுவே, சிறிய ராணுவ வீராங்கனையை போல் அழகாக அவள் நடந்துவருவாள்” – #மார்ஷல்_சார்லஸ்_பர்க்ஸ்Via Anbu Selvan