#குமிழி பாதி படித்து விட்ட பாரத்தின் நடுவில்…உண்மைகளோடு தொடர்பான விடையங்களைப் படிக்கும் போது விடய தன்மைக்கு ஏற்ப எமக்குள் உந்தி தள்ளும் உணர்வோட்டங்குளும் மிக தாக்கத்துக்குரியதாக அமைந்துவிடுவதுண்டு. அதுவும் இரத்தமும் சதையுமான எமது மண்ணும் மக்களும் துயரங்களான பாத்திரங்களாக அரசியலில் வரலாற்றில் வஞ்சிக்கப்பட்டவர்களா படிக்கும் நோ அதிகமானது.
விடுதலை நோக்கிய போராட்டத்தை எல்லோருக்குமானதாக நேசித்த பலரின் கனவு களத்திலேயே சிதையும் காட்சிகள். இன்னும் வலிப்பதாலும் அழியாததாலும்தானே அவை வடுக்கள் என்றாகிறது.(ஆனால் புனைவுகள் எம்மக்குள் எழுதுவோரின் ‘கைவண்ணம்’ அது அவரல்ல-என்ற உள்பிசகள், எழுத்தாளரை இன்றைய நவீன உலகம்
இலகுவாக முகம் காட்டும், அடையாளப்படுத்தும் வெளிப்படுத்தும், விவாதிக்கும்- தளங்களை வாசகர்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. எனவே சமூக வலைத்தளங்கள் இல்லாத காலங்களில் அவர்கள் மீதிருந்த எழுத்தாளனை ‘எழுத்தாகவே’ நம்பும் போக்கு குறைந்து அது அவர்கள் ‘திறமை’ அதுவாகவே அவர்கள் அதுவாக இருப்பதில்லை என்றளவில் வாசகர்கள் விழிப்படைந்ததில் எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.)ஆனால் உண்மை அனுபவங்களோடு தொடர்பான எழுத்தை அப்படி படிக்க முடிவதில்லை. அதிலும் இடது சாரிய அரசியலையும் அமைப்புத்துறை தொடர்பான கோட்பாடுகளையும் அதிகாரத்துக்கு எதிரான மன நிலை போக்கையும் பெற்றுவிட்டால் ‘குமிழி’ போன்ற அனுபவ அரசியல் புத்தகங்கள் தரும் அதிர்வு என்பதைச் சொற்களில் கொண்டுவந்திட முடிவதில்லை.” ‘சமூக விரோதி’ மனிதன் சுடப்பட்ட இந்த நாளிலிருந்து அரச உளவாளிகள் எனச் சந்தேகப்பட்டவனை, இராணுவ முகாம் இருந்த பெரு வீதியால் நடந்து வந்தவனை, எனத் தொடங்கி பிறகு மன நோயாளர்களை, பால்வினைத் தொழிலாளர்களை, ஓரினப் புணர்சியாளர்களை, கோழிப்பிடித்தவனை பசியால் களவெடுத்தவனை எல்லாம் அந்த கார்போர்ட் மட்டை துரத்தித் திரிந்தது… மாணிக்கம் அதனிடம் அகப்பட்டிருந்தால் எப்படியாய் சிதைந்திருப்பான்…..” (ன்-ர்)இத்தகைய மனப்போக்கை இன்றும் நாம் ஆயுதம் இல்லாத அமைப்புகளிடம் எதிர் நோக்க முடியும். ஆயுதம் இருந்திருந்தால் மண்டையில் போட்டிருப்பார்களோ என்று சொல்லுமளவு ஈழ அரசியல் அமைப்புகள் ஒருவரை ஒருவர் இழுத்து விடவும் அந்த இடத்தைப் பிடிக்கவும் எதை வேண்டுமானாலும் கையில் எடுப்பர் என்பதைக் காண முடியும்.‘அமைப்பைக் காப்பாற்ற’ என்ற தாரக மந்திரத்துக்குள் எல்லாம் அடங்கிப்போகும்…குமிழி இப்படிச் சொல்கிறது.. ” ‘இராணுவ இரகசியம்’ என்ற வன்முறை வசதி கொண்ட சூழலுக்குள் விடப்பட்டிருந்தார்கள்.
அநியாயம் என்று தெரிந்திருந்தாலும் கூட அணி திரள முடியாதவாறு தனிமனித உறவு நிலைகள் புனைவு அறிமுகங்கள் வெளிப்படைத்தன்மையற்ற நிலை என்பன கவனமாகப் பேணப்பட்டிருந்தன…”அங்கத்தவர்களிடம் அனுமதிக்கப்படாத வெளிப்படைத்தன்மைப் போக்கு கட்டப்பஞ்சாயத்தை விட மோசமானது. அதிகாரம் படைத்தவர்களில் எல்லாவகை சேட்டைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் விசுவாசிகளை உருவாக்கவல்லது. விசுவாசிகள் மக்களுக்கன அரசியலின் சாபக்கேடு. சமூக மாற்றத்துக்கான போர் குணத்தில் அறையப்படும் முதல் ஆணியும் அது….எமது போராட்டம் விட்டுச் சென்ற எச்ச சொச்சங்களாகத் தொடர மீதமிருப்பது அது மட்டும்தானா !?என்ற கேள்வி எழுவதை நாடு கடந்த அமைப்பு அனுபவ அரசியலும் எழுப்புகிறது..’புதியதோர் உலகம்’ படித்துக் கொண்டிருக்கும் போது அந்த புத்தகம் வேண்டி நின்ற சமூகமும் அது கொண்டிருந்த மனித நேயத்தின் நோக்கமும் அதை எழுதியவ கோவிந்தன் பின் அதற்காகவே கொல்லப்பட்டார் என்ற தகவல்- இதயத்தை இறுகிக்கொண்டே இருந்து. ஆனால் அந்த ஒரு கனதியைத் தவிர்த்தாலும் குமிழியை படிக்கும் போதும் இதயம் பாரமாகி நெற்றி சுடுவதைத் தவிர்க முடியவில்லை…எமது போராட்ட வரலாற்றில் பதியப்பட வேண்டிய அனுபங்கள் படிக்கப்பட்டு களையப்பட வேண்டிய பலகீனங்கள்..Copied