ஒரு கனவு மெய்த்திருக்கிறது.எனது நாவல் வெளிவந்திருக்கிறது.(70களின் பிற்பகுதியில் ஈழ விடுதலை இயக்கங்களின் தோற்றங்கள் நிகழ்ந்தாலும், 80களின் முற்பகுதியிலேயே அவற்றின் வீச்சமும் வீக்கமும் நிகழ்ந்தன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற அமைப்பும் ஊதிப்பெருத்து ஒரு குமிழியாக அழகு காட்டியது. அதற்குள் அகப்பட்ட ஓர் இளவயது வாழ்க்கையின் அலைக்கழிவை இந் நாவல் பதிவுசெய்கிறது.) வெளவால்கள் அற்ற இரவில், தறிக்கப்பட்ட வேப்பமர விருட்சத்தின் பாதத்தில் உட்கார்ந்திருந்தேன். கஸ்ரோ எங்கிருந்தோ வந்தான். எதிர்பார்க்கவில்லை. “நீ காணாமல் போய்விட்டதாய் நினைத்திருந்தேன்
என நான் சொல்லிக்கொண்டிருக்க, உயர்ந்த என் புருவத்தில் விழிகள் ஏணை கட்டி ஆடின. தூறலாய் வந்த மழையில் உடலில் சோர்ந்திருந்த நரம்புகளெல்லாம் நெளியத் தொடங்கியது. எனக்குள் ஏதோ சுவறியது.“எனக்கு அழிவில்லை” என கண்சிமிட்டிச் சொன்னான்.பேசியபடி அவனது இருப்பிடத்துக்குச் சென்றேன். சோலையால் மூடி இருந்தது. நிழல் வீடு. யன்னல்கள் திறந்திருந்தன. அதனூடு பார்வை வெளி விரிந்து இந்த உலகை திறந்து காட்டிக் கொண்டிருந்தது. புதிய காற்று உள்ளே வீசியபடி இருந்தது. அது நரம்புகளில் படர்ந்து மூளைவரை நீண்டது. ஆயிரம் பூக்களின் மலர்வை அந்த யன்னலோரச் சட்டகத்துள் ஓவியமாய் வரைந்து எனது
சிந்தனையில் மெல்லக் கொழுவினான் கஸ்ரோ. வண்ணத்துப் பூச்சிகளின் சிறகசைப்பை அதன் படபடப்பை அதில் உணர்ந்தேன்.“வெற்றிகளுக்கு பொறுப்பேற்கும் உசாருடன் போன நீ, இப்போ தோல்விகளுக்கு பொறுப்பேற்காமல் நழுவுவது என்ன நியாயம்” என்றான்.“களைத்துவிட்டேன். நம்பிக்கையை தொலைத்துவிட்டேன். நான் எனது உயிர் குறித்தே இப்போ கவலைப்படுகிறேன். நான் வாழவேண்டும். எனக்கு இருத்தல் மீது ஆசை வந்திருக்கிறது. மரணத்தை வெறுக்கிறேன்” என்றேன்.“நானும்தான்” என்றான். “ஆடை களைவது போல் எல்லாவற்றையும் களைந்துவிட்டு ஒரு வெற்று மனிதனாக வாழ இலகுவில் உன்னால் முடியாது. எனக்கு உன்னை நன்றாகவே தெரியும். நொருங்கிப் போவாய்” என்றான். // (P.208)Copied Ravindran Pa குமிழிவெளியீடு விடியல் பதிப்பகம்பக். 220கதைக் களம் : ஈழம், தமிழகம்காலம் : 1984-1985இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் உங்கள் கைகளில் கிடைக்கும். விநியோகம் குறித்த விபரங்களை பின்னர் அறியத் தருகிறேன்.(இந்திய வாசகர்கள் விடியலுடன் தொடர்பு கொண்டு பெறலாம். அல்லது உள்பெட்டிக்குள் உங்கள் முகவரியை தாருங்கள்.விடியல் தொலைபேசி இலக்கங்களும் மின்னஞ்சலும் 0422-2576772, 9443468758vidiyal@vidiyalpathippagam.org)*//