பெண்களின் செயற்பாடுகளும் படைப்புத்திறனும் தொழில் நுட்பமும் இன்னும் ஆணதிகாரத்தின் பிடியில் தானுள்ளது. அவற்றை ஊடறுத்து இன்று பல பெண்கள் தமது எழுத்துதிறன் மூலமும் செயற்பாடுகளின் மூலமும் விழிப்புவெளிக்கொண்டு வருகின்றார்கள். அவர்களின் எழுத்துச் செயற்பாட்டுக்கு ஊடறு எப்போதும் களம் அமைத்துக் கொடுக்க உங்களுடன் கை கோர்த்துக் கொள்ளும். தோழிகள் பெண் படைப்பாளிகள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பும் உற்சாகம் தரும்படியான கருத்துகளும் ஊடறுவை வளப்படுத்தியே வருகின்றன. பெண்களின் படைப்புகளும் இருபாலாரினது ஒத்துழைப்பும் வாசகர்களது தளவருகைகளும் ஊடறுவை ஒரு எழுத்தியக்கத்துள் வைத்திருக்கிறது. நாம் அதனை ஒன்றுகுவிக்கும் வேலையில் தொடர்ந்தும் செயற்பட உங்கள் ஒத்துழைப்பையும் உதவியையும் எதிர்பாரக்கிறோம்.
விமர்சனங்களும் உரையாடலும் ஊடறுவை மேன்மேலும் வளர்க்கும் என்பதையும் நினைவ கொள்கிறோம். ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் இன்று பலரால் பேசப்படும் ஒரு சந்திப்பாக உள்ளது.இணைந்து கரம் கொடுத்துக்கொண்டிருக்கின்ற இணைந்து கரம் கொடுத்த தோழிகள் அனைவருக்கும் எமது நன்றிகளும் அன்பும்…! தொடர்ந்தும் எம்முடன் இணைந்து செயற்பட உங்களை அன்புடன் அழைக்க்கின்றோம் ஊடறு ஆர் குழு