கிழக்கின் பழங்குடிகள்
பழங்குடிகளின் பண்பாட்டுத் தொடர்ச்சியுடன் திருகோணமலை மூதூரின் சில கிராமங்களில் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கிடையில் ஒரு பழங்குடி சமூகம் வாழ்ந்து வருகிறது. அவர்களுக்கு காலம் காலமாக நாம் பெரும் அநீதியை இழைத்திருக்கிறோம் அவற்றுக்கெல்லாமாக அவர்களின் வாழ்வை ஆவணப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரம் பற்றியும் தொடங்கப்பட்ட வேலைகளின் தொடர்ச்சியாக திருகோணமலையில் கிழக்கின் பழங்குடிகளைப் பற்றி பேசுவோம்.
பூவுலகைக் கற்றலும் கேட்டலும்
ஆழியாள்
மொழிபெயர்த்த அவுஸ்திரேலிய பழங்குடிகளின் கவிதை அந்த பழங்குடி மக்களின்
வாழ்வியலையும், அவர்களின் அடையாளமிழத்தலையும் பதிவு செய்திருக்கிற மிக
முக்கியமான தொகுப்பாகும்.
அவுஸ்திரே லிய பழங்குடிகளின் கவிதையுடன் கிழக்கின் பழங்குடிகளைப் பேசுவோம்.
ஆர்வலர்கள் அனைவரையும் அழைக்கிறோம். –
Arunthavam Janojan