சிங்கப்பூரில் நடந்த ஊடறு பெண்கள் சந்திப்பில்

சிங்கப்பூரில் நடந்த ஊடறு பெண்கள் சந்திப்பில்.. யோகியின் புகைப்படங்கள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது யோகியின் முதல் புகைப்படக் கண்காட்சி ஆகும். அன்றைய தினத்தில் யோகி காட்சிக்கு வைத்த புகைப்படங்களில் விற்கப்படும் புகைப்படங்களின் பணத்தை தமிழ்நாட்டில் ஆணவக்கொலையில் கொல்லப்பட்ட தோழர் அசோக்கின் குடும்பத்திற்கு வழங்குவதாக அறிவித்தார். அதன்படி கிடைக்கப்பெற்ற ரூ.6760 தொகையை அவர் தோழர் ஜீவலெட்சுமியிடம் வழங்கி அக்குடும்பத்திடம் வழங்க கோரிக்கை வைத்தார். அண்மையில் அப்பணம் தோழர் அசோக்கின் குடும்பத்திடம் வழங்கப்பட்டது. நெல்லை சி.பி.எம் தாலுகா செயலாளர்-எம்.சுடலை ராஜ் அப்பணத்தை, தோழர் அசோக் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

ஊடறு பெண்கள் சந்திப்பின் முன்னெடுப்புகள் பல பரிணாமங்கள் பெற்று வருகிறது என்பதில் இது ஒரு உதாரணம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *