எமது சங்கமி பெண்ணிய உரையாடல் நூல் மற்றும் ஏதிலி- அ.சி. விஜிதரன் நூல் பற்றிய கலந்துரையாடல்கள் லண்டனில்

எதிர் வரும் ஞாயிறு 16.2.20 ..மாலை 4.00 மணிக்கு இடம் – At London Tamil Book Centre , 425 High Street North, East Ham, London E12 6TL நடைபெற உள்ளது ….நன்றி பௌசர்

நன்றி பௌசர்

காலம் – 16 பெப்ரவரி 20. (ஞாயிறு)
மாலை 4.00 மணிக்கு

இடம் – At London Tamil Book Centre , 425 High Street North, East Ham, London E12 6TL


இரு நூல்கள் பற்றிய கலந்துரையாடல்
சங்கமி – பெண்ணிய உரையாடல்கள்
( தொகுப்பு- ஊடறு ரஞ்சி, புதிய மாதவி )

உரை – கௌரி பரா, மாதவி சிவலீலன்

ஏதிலி ( நாவல் ) – அ.சி.விஜிதரன்

எஸ்.வாசன், சேனன்

சங்கமி : பெண்ணிய உரையாடல்கள்

தொகுப்பாசிரியர்கள்: ஊடறு றஞ்சி, புதியமாதவி;

பெண்கள் சமூகத்தாலும் கூடவே ஆணாதிக்கத்தாலும் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற அடிப்படையில் பெண்ணியச் சிந்தனைகள் வளர்ந்து வந்திருக்கின்றன. சமகாலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் மாறுபடுகின்றன. அதையொட்டி பெண்ணியச் சிந்தனைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இலங்கையில் இனப் போராட்டத்தின்போது ஆயுதம் தாங்கிப் போராடிய பெண்கள், ராணுவத்தால் பாலுறவுத் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள், ஆப்கானிஸ்தானத்தில் அந்நிய நாட்டு ஆக்கிரமிப்பு சக்திகளின் தாக்குதலினால் இடம்பெயர்ந்து வேறுநாடு
களில் சென்று வாழும் பெண்கள், சாதி ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் பெண்கள், மதவெறியால் பாதிக்கப்படும் பெண்கள் என பெண்களுக்கு நிகழும் பாதிப்புகள் பெண்ணியச் சிந்தனைகளின் வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றன.
ஆணாதிக்க எதிர்ப்பு, ஆளும் சக்திகளின் எதிர்ப்பு என்ற அடிப்படையில், பல்வேறு பண்பாட்டு, உளவியல், கருத்தியல்ரீதியான பெண்ணியச் சிந்தனைகள் வளர்ந்திருப்பதை இந்நூலில் இடம் பெற்றுள்ள பெண்களின் நேர்காணல்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய குடும்ப அமைப்பு, பாலுறவு குறித்த கருத்துகள் பதிவு பெற்றிருக்கின்றன.இந்நூலில் இடம் பெற்றுள்ள வ.கீதா, அம்பை, மங்கை, புதிய மாதவி, சிவகாமி, ஒளவை, ஹெர்டா முல்லர், மலாலாய் ஜோய் உள்ளிட்ட 33 பெண் ஆளுமைகளின் நேர்காணல்கள் பெண்ணியம் சார்ந்த சிந்தனைகளைத் தூண்டுகின்றன.

ஏதிலி- அ.சி. விஜிதரன்

இந்த நாவல் ஈழத் தமிழர்களின் தமிழக முகாம் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் முகாம்களில் வாழும் ஒவ்வொருவருக்கு பின்னாலும், துயரம் நிறைந்த பயணக்கதையும் மனதை அறுக்கும் சோகச்சுமையும் கனன்றுகொண்டே இருக்கும்.
சொந்தமண்ணோடு சுதந்திரமிழந்த அவர்களின் சொல்லுக்குள் அடங்காத துயரச் சொல்லலை பலமுறை தூக்கமிழந்து கொட்டக்கொட்டக் நெஞ்சுகனக்க இரவுகள்தோறும் கேட்டிருக்கிறோம்
இவை ஏதாவது ஒரு படைப்பாய் வந்தால்.. ஒரு ஆவணமாக, ஏதிலி இலக்கிய வகைமையாக, காலம் கடந்து நின்று பேசும் என்று நினைத்ததுண்டு..அதை ஏதிலி என்ற நாவலாக கொண்டுவந்திருக்கிறார் முகாமில் வாழ்ந்த அ சி விஜிதரன்வெறும் முகாமோடு அதை துண்டாடிவிடாமல் ஈழத்தில் நின்ற வாழ்வையும் இயல்பாகவே அவர் எழுதிச்செல்கிறார்..

OOO

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *