ஆண்மொழியின் கட்டுடைப்பு என்ற நிகழ்வுக்கு வெற்றிச்செல்வி தலைமை தாங்கினார்
பாலிழிவு : வேத மரபு செவ்வியல் மரபு வாய்மொழி மரபு -மாலதி மைத்ரி
பழமொழிகளும் பெண்களும் ஞானவள்ளி -யின் கட்டுரையை பெவர்லி கிங்ஸிலி வாசித்தார்
பெண்கள் மீதான பாலியல் பலாத்தாரங்களை சமூகத்தின தற்செயல் விபத்தாக நாம் கடக்க பழக்கிவிட்ட போதும் சில சம்பவங்கள் அதன் கொடூரத்தைப் பொருத்தும் சமூக சாதி அந்தஸ்த்தை பொருத்தும் நாடு தழுவிய மாநிலம் தழுவிய பொது விவாதங்களை போராட்டங்களை கிளப்பிவிட்டு அடங்கும். அச்சமயத்தில் மட்டும் தன்வீட்டு பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சப்படும் இக்கொடுமைகளுக்கு நீதிக் கேட்டு எழும் எல்லா ஆண்களும் மொழியில் பெண்களை குற்றவுணர்வற்று தன்மானமற்று தினம் தினம் ரேப் செய்யும் நடத்தையியலை குறித்து சுயவிசாரணை சுயமதிப்பீட்டுக்கு உட்படுத்திக் கொள்வதில்லை. பொதுவாக பெண்களும் இவை ஆணின் ரசிக்கத்தக்க இயல்பெனக் கடக்க பழகுகிறோம் அல்லது சுட்டிக்காட்டாமல் தவிர்த்து “குட் கேர்ள்” பிம்பத்தை காக்க அவர்களின் வசனத்துக்கு முன்னேயே சிரிக்கக் கைகுலுக்க பழகுகிறோம்
செம்மொழி தமிழன், சமயத் தமிழன், கலகத் தமிழன், நவீன தமிழன், திரைத் தமிழனின் மரபு மனநோய் கூறுகளைப் பார்த்தோம். மின்னணு சமூக ஊடகங்கள், கடந்த காலத்து குட்டிச் சுவர், திண்ணை டீக்கடை பெஞ்சு டாஸ்மாக் அந்த உரையாடல்களுக்கு முகம் உடல் கிடையாது, வெறும் குரல் மட்டுமே. அக்குரல் ஒவ்வொரு பெண்ணின் யோனி வழியேதான் பிறந்தது. விஞ்ஞான டிஜிட்டல் உலகில் பிரதி உள்ளேயும் வெளியேயும் நவீன மூத்திய, குஞ்சு இலக்கிய தமிழனின் பெண் வெறுப்பு பெண்ணிழிவு பாலிழிவு மனநோய் வெளிப்பாட்டையும் சற்று பார்க்கலாம்…..
ஞானவள்ளியின் கட்டுரையை பெவர்லி கிங்ஸிலி வாசித்தார் ….வீடியோ இணைக்கப்பட்டுள்ளது
பெண் என்றால் பூவை என்றும் பாவை என்றும் நங்கை என்றும் அவளின் அனுமதியில்லாமலே வர்ணித்த இலக்கியங்களும் மரபுகளும் அவளின் தோற்றத்தை வைத்தும் சகுனம் பார்த்து வைத்திருக்கின்றது இயற்கையான பிறப்பகை;கூட எள்ளிநகையாடுகின்ற இச்சமூகத்தில் தான் மாற்றுத்திறனாளிகளும் வாழ்ககையின் சவால்களை எதிர்கொண்டு வாழ்கின்றனர். இது இங்கு அழுத்தத் தக்கது. அதாவது கெண்டை பெருத்தவள் குலவழிக்கு ஆகாகது கூந்தல் பெருத்தவள் குடிவழிக்கு ஆகாது அதனாலேயே ஆண்களின் பலர் பெண்ணின் அகமுகத்தை பார்ப்பதை விட அடிபாதத்தை பார்க்கின்றனரோ?? வாழ்வதற்கும் கால் பெருத்து இருப்பதற்கும் கூந்தல் நீண்டு இருப்பதற்கும் என்ன பொருத்தம்.
வீடியோ இணைக்கப்பட்டுள்ளது