சூரியா பெண்கள் அமைப்பின் கலாச்சார நிகழ்வாக ஒரு நாடகத்தை அரங்கேற்றினர்.வாழ்க்கையையே புரட்டி போட்ட போரும் பெண்ணின் வாழ்க்கையையும் அந்த நாடகம் பேசியது. அதிக இரைச்சல் இல்லாத கை இசையும் வாய்ப்பாட்டும் மட்டக்களப்பு மற்றும் போரை சந்தித்த பெண்களின் இறுக்கமான சூழலை அங்குக் கொண்டு வந்ததுடன், வந்திருந்த அனைவரையுமே அது இறுக்கத்தில் தள்ளியது. உண்மையில் பாதிக்கப்பட்ட பலர் அங்கிருந்ததால் இந்தச் சூழலிருந்து வெளியில் வருவதற்கு அதிக நேரமெடுத்தது. கடந்த காலத்திற்கு போய்விட்ட பலரை அவர்களின் கண்ணீரிலிருந்து மீட்டுக் கொண்டு வரத்தெரியாத எங்களுக்குச் சங்கடத்தையே ஏற்படுத்தின. வடியும் கண்ணீரை அடக்குவதற்கு ஆறுதல் வார்த்தைகள்தான் ஏது? சூரியா பெண்கள் அமைப்பின் கலாச்சார நிகழ்வாக ஒரு நாடகத்தை அரங்கேற்றினர். நாம் வாழ்வதற்கான சரித்திரம் ஆறறப்படுத்தலும் ஆறறும் படுத்தும் கடந்தகாலங்களில் ஏற்பட்ட யுத்த துயரங்களில் இருந்து மீண்ட பெண்களின் துயர்களை எடுத்தியம்பினார்கள். இரத்த ஆறு ஓடிய காலம் காணாமல் போனோர்களின் 25 வருட காலம் யுத்தத்தினால் மாத்திரமின்றி சிறுமிகள் மீதான வன்முறைகள் குடும்ப வன்முறைகள் யுத்தத்தினால் கணவனையிழந்த பெண்களுக்கான கலாச்சார ஒடுக்குமுறைகள் இன்று வரை அழிக்கப்படும் தொழில் வளங்கள் இன்னும் இலக்கு வைக்கப்படும் கண்ணுக்கு புலப்படாத ஆயுதங்களை குறி வைக்கப்படும் நிலை காணாமல் போனோரை தேடி அலைபவர்கள். போராட போன போராளிகளின் அவலை நிலை … என தங்கள் பாட்டு மற்றும் வசனங்களால் கூடியிருந்தோரை கண்கலங்க வைத்தனர்
வீடியோ இணைக்கப்பட்டுள்ளது