கவிஞை ஒளவையின் (கனடா) தலைமையில் “வன்முறையின் முகங்கள்ஒளவையின் சிறு தலைமையுரையோடு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது
இப்போதெல்லாம் திரும்பிய இடங்களிளெல்லாம் விளம்பர பேனர்களாகவும் காட்சியளிக்கின்றதன சாதாரண ர ஒயில் விளம்பரத்துக்கு கூட பெண்களை வைத்தே எடுக்கப்படுகின்றது பெண்ணின் பெருமையானது ஆண்களை கவர்வதற்காகவே காட்டப்படுகின்றன. . நீ கருப்பாய் இருக்கிறாய் மற்றவர்களால் ரசிக்கப்படமாட்டாய் எனவே நீ சிவப்பாவது கண்டிப்பாய் எம் நாட்டுக்கு அவசியமானது போன்ற விளம்பரங்களையும் பெண்களிடையே தாழ்வு சிக்கல்களை உருவாக்கும் விளம்பரங்களும் அதிகமாக காணப்படுகின்றன. பெண்ணின் பெருமையானது விளம்பரங்கள் மூலம் ஆண்களை கவர்வதற்காகவே காட்டப்படுகின்றது..நடைமுறையில் பெண்களின் மீது திணிக்கப்படும் ஆணாதிக்க சிந்தனையின் வடிவம் தான் விளம்பரங்களிலும் பிரதிபலிக்கிறது. என தனது பேச்சில் கோகிலதர்ஷினி தெரிவித்தார்
சட்டமும் நடைமுறையும்- சிநேகா-
சட்டமும் நடைமுறையும் என்ற தலையங்கத்தில் பேசுவதற்கு 15 நிமிடங்கள் போதாதாது என கூறிய சிநேகா தான் இந்திய அதாவது தமிழகத்தின் சடட்டமும் நடைமுறைகளைப்பற்றியுமே பேச இருப்பதாகவும் அதே நேரம் தன்னைப்பற்றிய சிறு அறிமுகத்தை தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் பண்பாடுத் தளத்திலிருந்து எழுந்த சட்டமானது உடைமைகள் உரித்துகள்இ திருமணம் பெண்களின் பாலியல் பிரச்சினைகள் மதம் சார்ந்த பிரச்சினைகள் சம்பந்தமான விதிகளைகொண்டு கொண்டு சட்டம் இயற்றப்படுட்டுள்ளன இயற்றப்டுகின்றன சட்டமும் நடைமுறையும் என்ற கருத்திற்கமைவான அவரது பேச்சுரையை இந்த வீடியோ மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
.
ஊடகங்கள் – அனுதர்ஷி லிங்கநாதன்-
ஊடகத்துறையில் பெண்கள் சாதிக்க வேண்டும் என்றால்இ ஆண்களை காட்டிலும் தீவிரமாக செயற்பட வேண்டியிருக்கும். ஊடகங்களில் பெண்கள் சந்திக்கும் சவால்களும் அதிகம் . பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சேஷ்டைகளை எல்லாம் தாண்டிதான் ஊடகங்களில் வேலை செய்ய வேண்டியுள்ளது. பல நிகழ்வுகளை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டினாலும் ஊடகங்களிலும் சில கறுப்பு பக்கங்கள் இருக்கின்றன.அச்சுறுத்தல்கள் மிகுந்த சூழலில் தான் பெண் ஊடகவியலாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்