நிகழ்வு 3
கலந்துரையாடல்
மதுஷா மாதங்கி சிறுவர் துஸ்பிரயோகமும் குடும்ப அமைப்பு முறையும்-என்ற தலையங்கத்தில் தனது கலந்துரையாடலை செய்திருந்தார்
தலைமை சந்திரலேகா கிங்ஸிலி
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமானது எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேள்விக்குரியாக்குவதற்கு பிரதான காரணமாக அமைந்துவிடுகிறது.துஸ்பிரயோக நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பிள்ளையின் பெற்றோர்கள் அதற்கெதிராக எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருவதில்லை. காரணம் தமது தன்மானம் இழந்து விடுமோ என்ற அச்சமும், போதிய விழிப்புணர்வின்மையும் ஆகும். இவ்வாரான வன்முறைகளில் இருந்து தமது பிள்ளைகளை பாதுகாப்பதற்காளன எவ்விதமான மாற்று நடவடிக்கைகளையும் பெற்றோர்கள் மேற்கொள்வதுமில்லை.சிறுவர் உரிமைகள் தொடர்பிலும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வயதுப் பிரிவுக்கேற்ற வகையில் பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
வீடியோவை இங்கே அழுத்தவும்