– பிரியதர்சினி சிவராஜா-
வெலிக்கடை சிறைச்சாலை பெண் தடுப்பு கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து முன்னாள் தடுப்பு கைதியான தரங்கா தில்ருக்க்ஷி சிலோன் டுடே பத்திரிகையில் நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.
அதில் சிறைச்சாலை அவல நிலைகளை அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
178 பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள Y பிரிவில் 3 மலசல கூடங்கள் உள்ளன.
அங்கு கழிவு நீர் தொகுதி முற்றாக அடைப்பட்டுள்ளது.
110 பெண்கைதிகள் உள்ள X பிரிவில் 2 மலசலகூடங்கள் மட்டுமே உள்ளன.
அங்கு மழை நாட்களில் கழிவு நீர் பெருகுகின்றது.
சிறார்கள் உள்ள பிரிவில் போஷாக்கான உணவுகள் வழங்கப்படுவதில்லை.
கொதிக்க வைக்கப்பட்ட நீர் சிறை அதிகாரியின் அனுமதியுடனே கிடைக்கும்.
வழங்கப்படும் உணவுகள் தரமற்றவை.
வவுனியாவில் இருந்து வந்துள்ள உடுவரா என்ற அதிகாரியின் பணிப்புரையின் பேரில் பெண்களுக்கு ஒரு மாதவிடாய் துவாய் மட்டுமே வழங்கப்படுகின்றது.