கலாநிதி பார்வதி கந்தசாமி -http://www.tamilauthors.com/01/719.html
குடும்ப வன்முறை என்பது நெருங்கிய உறவுகளுக்கு இடையே உள்ள வன்முறை வழியான துன்புறுத்தல் ஆகும். இது தொடர்ச்சியாகக் குடும்பங்களில் உள்ள அதிகாரக் கட்டுப்பாட்டைத் தனது கையில் எடுத்துக்கொண்டு வலுக் குறைந்தவர்களைக் கொடுமையாக பலவித வன்முறைகளைப் பயன்படுத்தித் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நடத்தை சார்ந்தது. ஓங்கிய கையுடைகவர்கள் தங்களுடைய கட்டுப்பாடுட்டுப்கு உள்ளேளேயே எதனையும் வைத்திருப்பர். ‘அவனின்றி அணுவும் அசையாது’ என்ற பழமொழி ஆண் தலைமை கொண்ட கடவுளைக் குறிக்கப் பயன்பட்டாலும் அத் தொடர் தோன்றிய காலத்துத் தந்தை வழிச் சமூகத்தின் ஆழப் பதிக்கப்பட்ட முத்திரையாகவே அதனைக் கொள்ளவேண்டும். பின் வந்த ஒளவையும் ‘தந்தை சொன்மிக்கதோர் மந்திரம் இலலை’ என்றார். ஒளவை பொன் மொழிகளைத் தந்தாலும் சமூகத்தின் கண்களுக்கு அவரும் ஒரு இரண்டாம பட்சமான பிரஜையாகவே கருதப்பட்டுள்ளார். குடுப்ப அதிகாரமும் கட்டுப்படுத்தலும் யார் கையில் உள்ளதோ அவர் வன்முறையாளராக இருப்பதை உலகிலுள்ள எல்லாச் சமூகங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. இந்த வன்முறை பல வடிவங்களில் இருக்கலாம். ஊடல் சார்ந்ததாகலாம், உளம் சார்ந்ததாகலாம், பாலியல் சார்ந்ததாகலாம், உணர்வு சார்ந்ததாகலாம், நிதி- பொருள் சார்ந்ததாகலாம், மிரட்டுவதும் துன்புறுத்தல்தான். அதிகாரத்தால் குடும்பத்தில் திராணி அற்றவர்களை அவர்கள் வேண்டாத செயலைச்செய்ய வைத்தல், தொந்தரவு கொடுத்தல், சிறுமைப்படுத்துதல். தனிமைப்படுத்துதல், பயமுறுத்துதல், குரூரத்துக்கு உள்ளாக்குதல், பயந்தாங்கொள்ளியாக்குதல், காயப்படுத்துதல், குற்றம் சுமத்துதல், உடலில் தழும்புகளை உண்டாக்குதல், மனவடுக்களை ஏற்படுத்துதல் போன்ற இன்னோரன்னவற்றை அதிகாரத்தைக் கையில் எடுத்தவர்கள் கைக்கொள்ளும் வன்முறைக்கான ஆயுதங்களாகும.
ஊடல் ரீதியான வன்முறை: அடித்தல், சொட்டுதல், சொக்கில் அறைதல், தள்ளுதல், உதைத்தல், கையால் வலோத்காரமாக இழுத்தல், மயிரில் பிடித்து இழுத்தல், கிள்ளுதல் ( நுள்ளுதல்), கடித்தல, பந்தாடித் தூக்கி எற்றுதல்; போனறவை ஊடல் ரீதியான வன்முறைகளாகக் கொள்ளப்படும். நெருங்கிய துணையை வைத்தியம் செய்ய விடாமல் விடுதல் – செய்ய மறுத்தல், மதுவையோ அல்லது போதைப் பொருட்களையோ வலோத்காரமாகப் பருக்குதல், அருந்த வற்புறுத்தல் போன்றவையும் இதனுள் அடங்கும்.
பாலியல் வன்முறை: நெருங்கிய துணையினுடைய சம்மதம் இல்லாமல் பாலியல் உறவு கொள்ளுதல், பாலியல் வல்லுறவு கொள்ளுதல், தகாத பாலியல் நடவடிக்கைகளை வலுவற்றவர்மீது மேற்கொள்ளுதல், பாலியல் உறுப்புக்கள் மீது தாக்குதல நிகழ்த்துதல்;, பாலுறவுக்கு வற்புறுத்துதல், உடல் ரீதியான துன்புறுத்தலைச் செய்த பின்னர் வலோத்காரமாகப் பாலுறவு கொள்தல், பாலுறவுக்குப் பொருத்தமானவர் அல்ல எனச் சிறுமைப்படுத்தல், தணிக்கை செய்யப்பட்ட பாலுறுவுப் படங்களைப்
(pornography)பார்த்து அவைபோல அருவருக்கத்தக்க பாலுறவு நடவடிக்கைகளை வன்முறையால் தனது நெருங்கிய துணையைக் கொண்டு செய்ய வைத்தல்;, பல்வேறு சேர்க்கையாளருடன் பாலுறவில் களியாட்டம் கொண்டு துணைகளையும் இரையாக்குதல் போல்வன.
உணர்வு ரீதியான வன்முறை: உளக் கோணலை ஏற்படுத்தும் சின்னத்தனமான செயல்கiளை ஒருவர்மீது செய்தல், ஒன்றுக்கும் உதவாதவர் என்று ஏளனம் செய்தல். நிரந்தர துன்பத்துக்குள் மூழ்க வைத்தல்;, ஒருவருடைய இயலுமையைக் குறைவாக மதிப்பிடல், வைதல், திட்டுதல், பட்டப் பெயர் சூட்டுதல், பட்டப்பெயரால் அழைத்தல், நாலு பேருக்கு முன்னால் தலை குனிய வைத்தல், பிள்ளைகளைச் சேரவிடாது அவர்கள் உறவைத் தடுத்தல் போன்றவையாகும்.
நிதி- பொருளாதார ரீதியான வன்முறை: ஒருவரை நிதிதொடர்பாக அதிகாரம் பிரயோகிப்பவரில் தங்கியிருக்க வைத்தல். அதிகாரம் பிரயோகிப்பவர் நிதி – பொருள், ஆபரணங்கள், ஆதனங்கள் முதலயவற்றைத் தன் கையுள் வைத்திருத்தல், வங்கி அட்டையைக்கூடத் தம்வசமே வைத்திருத்தல், பணத்தைப் பெறும் வழிகள் எல்லாhவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல், பாடசாலைக்குச் செல்வதைத் தடுத்தல், வேலைக் குச் செல்ல விடாது தடுத்தல,; சீதனப் பேச்சு எடுத்துக் கொடுமைப் படுத்தல் போன்றனவாகும்.
உளரீதியான வன்முறை: பைத்தியங்கள் எனப் பெயர் சூட்டுதல், அதிகாரம் பயன்படுத்துபவரில் அச்சம் கொள்ள வைத்தல், அடித்தல்,உதைத்தல், வைதல், திட்டுதல், பட்டப் பெயர் சூட்டுதல், பட்டப்பெயரால் அழைத்தல், பிள்ளைகளைச் சேரவிடாது அவர்கள் உறவைத் தடுத்தல் போன்றவற்றை அவர் செய்வார, கொல்வார் என்ற பயத்துடன் வாழ்தல், வளர்ப்புப் பிராணிகள் மீது வன்முறை பிரயோகித்தல்ஈ உடமைகளைச் சேதப்படுத்துதல் குடும்பம், உறவுகள், பிள்ளைகளிடமிருந்து பிரித்தல,; தனிமைப்படுத்துதல், பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்குப் போகவிடாது தடுத்தல் போன்றவை தொடர்பான பீதியுடன் வாழும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படலாம் என்ற பயத்தையும் கொண்டு வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
பொறுப்பேற்றல்; செய்தல் ரீதியான வன்முறை:
பொறுப்பேற்கப்பட்டவரிடம் குடிவரவுக் திணைக்கள அனுசரணையுடன் ;வந்தவர்களைத் திருப்பி ஆனுப்பிவிடுவார்குடிவரவுத் திணைக்களம்; எனப் பயப்படுத்தி வைத்திருப்பர். அது உளவியல் ரீதியிலான தாக்கத்தையும் அங்கலாய்ப்பையும் ஏற்படுத்தும். சித்திரை 18 2017 இல் குடிவரவுச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட திருத்தத்தில் பொறு;கபேற்றல் மூலம் கனடாவுக்கு வந்தவர்; துணைவரால் திருப்பி ஊருக்கு அனுப்பப்படமாட்டார்; என்ற சட்டம் சேர்த்துக் கெர்ளளப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறை எவருக்கும் நிகழலாம். எந்த நிறத்தவருக்கும் நிகழலாம். எந்த நாட்டவருக்கும் நிகழலாம். எந்த மொழி பேசுபவருக்கும் நிகழலாம். ஏந்த வர்க்கத்தினருக்கும் நிகழலாம். ஏடைக்கும் நிகழலாம், பண்க்காரருக்கும் நிகழலாம். எந்தச் சாதியினரக்கும் நிகழலாம். எந்தச் சமயத்தினருக்கும் நிகழலாம், எந்தப் பாலினருக்கும் ஏற்படலாம், எந்த வயதினருக்கும் நிகழலாம். விவாகமானவருள்ளும் நிகழலாம், ;. விவாகமாகாது சேர்ந்து காதலராக வாழ்வோர் மீதும் நிகழலாம். பாதிப்பது ஒருவரை மட்டுமல்ல. குடும்பத்தின் அங்கத்தவரான பிள்ளைகள், பெற்றார், அயலவர், நண்பர்கள், சுற்றத்தவர் அனைவiiயும் பாதிக்கின்றது. சமூகத்தையும் பாதிக்கின்றது. கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும். சுழல் வட்டத்தின் பணியாக மரபணுக்களால் காவப்பட்டு பாதிக்கப்பட்ட பிள்ளைகளும் என்முறையாளர்களாக மாறும் தன்மை உடையவர்களாக ஆகவும் வாய்ப்பு உண்டு. ஆகவே மதுவுக்கு அடிமைப்படல் போலக் குடும்ப வன்முறை என்பது ஒரு தொற்றுநோயா? கனடாவில் வன்முறையிலிருந்து பாதுகாக்க 911 என்ற பொலிசாரின் அவசர இலக்கத்தைத் தொலைபேசியில் அழைப்பதால் உதவி கிடைக்கும். இது வன்முறையிலிருந்து ஒருவரை உடனடியாகக் காப்பதற்கும் காப்பகத்தில் பாதுகாப்புத் தருவதற்கும் வழிசமைக்கும்.