பொடாப் பெண்கள்
சர்வதேச பெண்கள் தினம் என்பது அதன் வரலாற்றை உருவாக்கிய சாதாரண பெண்களின் கதை. ஆண்களுடன் சமமாக இச்சமூகத்தில் சமத்துவத்திற்காகப் பல தலைமுறைகளாகப் பெண்கள் நடத்திய போராட்டத்தில் அதன் மூல வேர்கள் அடங்கியுள்ளன. வேலைமுறைகளுக்கு எதிராக பேராட்ட சூழலுக்கு வழிவகுத்த வேகமான உலகமயமாதலும் முதலாளிய பொருளியல் விரிவாக்கத்திற்கு இடையிலும் 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் சர்வதேச பெண்கள் தினம் என்று ஒன்று இருக்கவேண்டும் என்ற சிந்தனை முதன்முதலாகத் தோன்றியது. மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினம் உலகம் முழுவதிலும் சுரண்டப்படுகின்றன மக்கள் விழாவாகக் கொண்டாடப்படும் விடுமுறை நாள். இது பெண்களின் போராட்டத்தின் விளைவாகப் பெற்ற விடுமுறை நாள். குறிப்பாக பெண்கள் போராட்டத்தை திருவிழாவாக நடத்தும் ஒரு குறிப்பான நாளுக்காக கோரிக்கை வைத்த நியுயார்க் லோவர் ஈஸ்ட் திசையிலிருந்து குடிபெயர்ந்து வந்த ஆயத்த ஆடைத்தொழிலாளர்கள் கொடுத்த ஊக்கத்திலிருந்து பிறந்த நாள் மார்ச் 8
ஆயத்த ஆடைத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் புகழ்வாய்ந்த தொழிற்சங்கங்களை கட்டினர் அதில் 1900 களில் கட்டப்பட்ட சர்வதேச பெண்கள் ஆயத்த ஆடைத் தொழிற்சங்கம் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் பெண் தொழிலாளர்கள் வழிகாட்டுதலில் நடைபெற்ற போராட்டங்கள் பல. அமெரிக்க உழைக்கும் பெண்களின் கதைகளை அடிக்கடி மதர் ஜோன்ஸ்,எல்லார்வ் ப்ளுர்,கேட் முள்ளாணி சொஜர்னர் ட்ரூத் எலிசபெத் ஹர்லிப்ளின் போன்ற இயக்கத்தைச் சேர்ந்த வீரப் பெண்களின் மூலமாகத்தான் அடையாளம் காண்கின்றனர் இவர்கள் சிறப்புவாய்ந்த பெண்கள் இவர்களின் கதைகளும் அதைப் போன்றவையே. ஆனால் இவர்கள் சுதந்திரமான பெண்கள் ஒன்றுபடுவது ,போராடுவது, வெற்றிபெறுவது,தோல்விஅடைவது போன்றவற்றை எல்லாம் இந்தச்சாதாரண பெண்கள் தான் செய்தார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாங்கள் அழியாமல் இருக்கவேண்டும் என்றால் ஒன்று பட்டு செயல்படவேண்டும் என்ற மூல யுத்தியை கிரகித்து கொண்ட பெண்களே அவர்கள். பெண்களின் இடம் என்ற அற்ப சித்தாந்தங்களை வெட்கப்படவைத்த பெண்கள் அவர்கள் வெறும் வாழ்க்கைகான போராட்டத்தின் புகழ்வாய்ந்த லாரென்ஸ் டெக்ஸ்டைல்ஸ் வேலை நிறுத்தப் போராட்டத்தின் எங்களுக்கு ரொட்டியுடன் ரோஜாவும் வேண்டும் என்ற பிரச்சார முழக்கத்துடன் அணிவகுப்புக்கள் நடத்திய பெண்கள் அவர்கள். அவ்வகையில் ஜேம்ஸ் ஒப்பன்ஹமின் “பிரட் அண்ட் ரோஜஸ்” என்ற பாடல் உருவாவதற்கு உத்வேகம் அளித்தவர்கள் இந்தப் பெண்களே.
அழகான நாளன்று நாம் அணிவகுக்கும்போது
ஆயிரக்கணக்கான இருட்டு சமையலறைகளும்
சாம்பல் நிறத்தில் ஓங்கி நின்ற இயந்திரங்களும்
ஒரு திடீர்ச்சூரியனின் பிரகாசத்தால்
உணர்வுகள் பெருக்கெடுத்துப் பாடுகின்ற
எங்களைக் கேட்கின்ற மக்களுக்காக
பிரட் அண்ட் ரோஜஸ், பிரட் அண்ட் ரோஜஸ்!
நாங்கள் அணிவகுத்துக்கொண்டே
நல்ல நாட்களைக் கொண்டுவருவோம்
பெண்கள் எழுவதென்றால் இனமே எழுந்ததாகப் பொருள்
இனி அடிமைத்தனமும் இல்லை
சோம்பேறிகளும் இல்லை
ஒருவன் அமைதியாக இருக்குமிடத்தில்
பத்துபேர் மட்டுமே உழைப்பதுமில்லை
இனி வாழ்வின் மகிழ்ச்சியை
“பிரட் அண்ட் ரோஜஸ”,”பிரட் அண்ட் ரோஜஸ்”
சர்வதேச பெண்கள் தின அணிவகுப்பை நடத்துபவர்கள் வேலைநிறுத்தக் காரார்களின் கீதமான “பிரட் அண்ட் ரோஜஸ்” என்ற பாடலை விரும்பிப் பாடுவார்கள்.
அதே போல் பரந்துபட்ட பாட்டாளி வர்க்க மக்களை ஒன்றுபடுத்தம் முயற்சியில் ஆண் தொழிலாளா மீது வைத்த அக்கறையை பெண் தொழிலாளர் மீது வைக்கவில்லை என்றால் அது பாட்டாளிவர்க்க இயக்கம் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பாகும் என கிளாராஜெட்கின் கூறியுள்ளார்.
. உலகில் மகளிர் தினம் பிரகடனப்படுத்துவதற்கு காரணமானவர் கிளாரா ஜெட்கின் ஆவார ஆனால் மார்ச் 8 ஆன இந்நாளை வெற்றுச் சடங்காக சில சலுகைகளுக்கு குரல்கொடுக்கும் நாளாக முதலாளிய பெண்ணுரிமைவாதிகளும் ஏகாதிபத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சீர்திருத்த பெண்ணியவாதிகளும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அல்லது திட்டமிட்டு மூடி மறைக்கின்றனர். இந்த நாளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் பெண் அடிமைத்தனம் தோன்றியதற்கான வரலாற்றுக் காரணங்களை அதற்கான மூலவேர்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
நல்ல பதிவு அருமை வாழ்த்துக்கள்