‘சவப்பெட்டிகளில் வரும் டொலர்கள்’’ முறையற்ற விதிமுறைகளால் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணிப்பெண்கள்

Bild9by singaraja:Elangovan – Thanks Thinnakkural 02,3,18 Bild3

மலையகப் பிரதேசங்களில் போதிய வருமானமின்மை இவறுமை நிலை போன்றவற்றை கருத்திற்கொண்டு வருமானத்தை உயர்த்திக்கொள்ள மத்திய கிழக்குநாடுகளிற்கு இருவர் பணிப்பெண்களாக செல்கின்றனர். ஒருவர் கற்பகவள்ளி (வயது 41) மற்றையவர் கிருஷாந்தி (15 வயதுசிறுமி). கற்பகவள்ளி ஒருவருடமும் கிருஷாந்தி 2 வருடங்களும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்துள்ள நிலையில் இருவரும் தாய்நாடு திரும்புகின்றனர் ஆனால் உயிரற்ற சடலங்களாக சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகளில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஐந்து மாதங்கள்கடந்த நிலையில் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இந்த இரு பெண்களும் இலங்கை மற்றும் பணிபுரிய சென்றநாடுகளில் உரியசட்டதிட்டங்களை முறையாக பின்பற்றப்படாமையே இவர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திட்டமிடல், தகவல் தொழில் நுட்பபிரிவின் பிரதிப்பொது முகாமையார் பி.பி. வீரசேகர தெரிவித்துள்ளார்;. முறையான சட்டதிட்டங்களை உரியவாறு பின்பற்றப்படாமல் பணிப்பெண்களாக செல்லுவோருக்கு இவ்விருசம்பவங்களும் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகுமென இலங்கை வெளிநாட்டுவேலை வாய்ப்புபணியகம்சு ட்டிக்காட்டுகின்றது.

 மஸ்கெலியாஸ் டெர்ஸ்பி சூரியகந்தை தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி கற்பகவள்ளி (41) என்பவரின் சடலம்இறந்து பலமாதங்களின் பின்னர் கடந்த வருடம் மார்ச்மாதம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. மூன்று பிள்ளைகளின் தாயான கற்பகவள்ளி  தமதுகுடும்பத்தின்வறுமை நிலைகாரணமாக  கொழும்பிலுள்ள தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உதவியுடன் 2015 ஆம்ஆண்டு ஒக்டோபர்மாதம் இலங்கையிலிருந்து சவூதிக்கு பயணமாகியுள்ளார். பல கனவுகளுடன் சவுதிக்குச் சென்ற கற்பகவள்ளிக்கு என்ன நடந்ததென்று தெரியாதநிலையில் உறவினர்கள் இருந்துள்ளனர். பின்னர், சவூதி அரேபியாவிலுள்ளறியாத்  ‘ஒலேய்யாபபா’ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துவிட்டதாக 2016 நவம்பர்முதலாம்திகதி உறவினர்களுக்குதகவல்கிடைத்துள்ளது. ஒருவருடம்மாத்திரமேசவூதிஅரேபியாவில்உயிருடன்இருந்தகற்பகவள்ளியின்மரணச்செய்தி கிடைத்ததும் தவித்து போனஉறவினர்கள் சடலத்தைபெற்றுத்தரும்படி கற்பகவள்ளியை அனுப்பிவைத்த தனியார்வேலைவாய்ப்பு முகவர் நிலையம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உதவியை நாடியுள்ளார்கள்.

இதன் பின்னர் பல இன்னல்களுக்கு மத்தியில் கற்பகவள்ளியின் சடலம் இலங்கைக்கு வந்து சேர ஐந்துமாதங்கள் ஆகியிருக்கின்றன. கடந்த 2017 மார்ச் 25 ஆம்திகதி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட கற்பகவள்ளியின் சடலம்  2017 மார்ச் 27 ஆம் திகதி  உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கற்பகவள்ளி மாரடைப்பு காரணமாகஉயிரிழந்துள்ளதாக சவூதி அரேபியா வழங்கிய மரணச்சான்றிதழும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 41 வயதுடைய கற்பகவள்ளியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்ததையடுத்து மீண்டும் வைத்திய பரிசோதனை இலங்கையில் செய்யப்பட்டது. இவ்வைத்திய பரிசோதனையின் பெறுபேறு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கற்பகவள்ளி மாரடைப்பால் மரணமடைந்ததா கசவூதிஅரேபியநாட்டின் பரிசோதனை அறிக்கை கூறினாலும் இலங்கையின் வைத்தியஅறிக்கையோ உயிரிழந்தவரின் இடுப்புமற்றும் கழுத்து பகுதிகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையிலேயே கற்பகவள்ளியின் மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

குறித்த பெண்மணியின் மரணம் உண்மையிலேயே இயற்கை மரணமா அல்லது சித்திரவதையின் விளைவிலான கொலையா? என்ற குழப்பத்தில் குடும்பமே மூழ்கிப்போனது. கற்பகவள்ளியின் மரணம் தொடர்பான தகவலை சமூகவலைத்தளங்கள் மூலமே அறிந்துக்கொண்டதாக கற்பகவள்ளியின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.கணவரைப் பிரிந்துவாழ்ந்த இவருக்கு இரண்டுபெண்பிள்ளைகளும் மகனொருவரும்உள்ளனர். கற்பகவள்ளி உயிரிழந்து 8 நாட்கள் கடந்த நிலையிலும் கூட உறவினர்களுக்கு எந்ததகவலும் தெரியப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

இந்தசம்பவத்தில் உண்மையில் என்னநடந்தது? என்பது பற்றி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புபணியகத்தின் பிரதிப்பொதுமுகாமையாளர் வீரசேகரதெளிவுபடுத்தினார்.

Bild4

கற்பகவள்ளி இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புபணியகத்தில் பதிவு செய்து பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். எனினும் அங்குஅவர் பணிபுரிந்த வீட்டில் வீட்டுப்பணிப்பெண்ணாக இருக்கும் போதே மேலதிக வருமானத்திற்காக அங்குள்ள வேறுவீடுகளில்; பணிபுரிந்த நிலையிலேயே இவ்வாறான ஒரு துர்பாக்கிய சம்பவம் இடம்பெற்றதாக பிரதிப்பொது முகாமையாளர் தெரிவிக்கின்றார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சவூதி அரேபியாவிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள தூதரக அறிக்கையின் பிரகாரமே இத்தகவல் உறுதிசெய்யப்பட்டதாக பிரதிப்பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் வெளிநாடுகளில் இடம் பெற்றால் தூதரகத்தினூடாக தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பணியகம் முன்னெடுக்கும் அதேவேளை இதுபோன்றசம்பவங்களில்அ நீதி இழைக்கப்பட்டால் குறித்த பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு பணியகத்தினூடாக காப்புறுதி தொகையொன்று வழங்கப்படுமெனவும் இச்சந்திப்பின் போது வீரசேகர கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்தவர், கற்பகவள்ளியின் சடலம் இலங்கைக்கு கொண்டுவர எடுத்தகால தாமதம் குறித்தும் விளக்கமளித்தார். பொதுவாக சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்குநாடுகளில் இவ்வாறான மரணங்கள் இடம்பெற்றால் சட்டரீதியான சிக்கல்கள் அதிகம் இருப்பதும் ,சடலம் குறித்தான அக்கறையின்மையுமே  இவரது  சடலம் இலங்கைக்கு  கொண்டுவர காலதாமதமானமைக்கான பிரதான காரணமென தெரிவித்தார். அத்துடன் அந்நாட்டிலுள்ள விதிமுறைகளின் படி மரணப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டால் இரண்டுமாதத்திற்கு மேற்பட்டகாலம் எடுக்கும் எனவும் இதன்போது பணியகத்தின் பொதுமுகாமையாளர் கூறினார். இச்சம்பவத்தில் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவுடன் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே மீள்மரணப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட  அதேவேளை இதுதொடர்பான தீர்மானத்தை தாமாக முன்னெடுப்பதில்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.

கற்பகவள்ளி பணிக்கு அமர்த்தபட்ட குறித்த வீட்டிலிருந்து தனது விருப்பின் பேரிலேயே பிரத்தியேகமாகவெளியில் பணிபுரிய சென்றிருக்கின்றார் எனபணியகம்தெரிவிக்கும் அதேவேளைச வூதி அரேபியாவிலுள்ள ஒலேய்யாபபா முகாமில் கற்பகவள்ளி அனுமதிக்கப்பட்ட காலப்பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்ட இலங்கை பணிப்பெண்கள் அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கின்றது. சவுதி அரேபியாவின் பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ்முறையாக இயங்கும் இந்த முகாமில் ஏதும்பிரச்சினைகள் இடம்பெற்றதாக தமக்குதகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லையென்று வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டுகின்றது. பணிப்பெண்களாக செல்லுபவர்கள் குறிப்பிட்ட மாதசம்பளத்திற்கிணங்கவே ஒப்பந்தமாகி அங்குசெல்கின்றனர். எனினும் பிரத்தியேகமாக பணிபுரிந்தால் வருமானம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விசாஇன்றி பணியாற்றிய வீடுகளிலிருந்து வெளியேறி வாடகை அறைகளில் தங்கி இவ்வாறான சட்டவிரோத செயல்களில்அங்குபலர்ஈடுபட்டுவருவதாகபணியகம்தெரிவிக்கின்றது. கற்பகவள்ளியும்இவ்வாறுவெளிவீடுகளில்பணிபுரிந்தகாலப்பகுதியில்மரணத்தைசம்பவவித்துள்ளதால் சட்டதிட்டங்களுக்கமைவாக இவரது குடும்பத்தினருக்கு மரணம்குறித்தான முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக பொதுமுகாமையாளர் சுட்டிக்காட்டினார்.

கற்பகவள்ளி பணிக்காக சென்றவீட்டிலிருந்து முறைப்பாடுகள் எதுவும் இவர் தொடர்பா கஅளிக்கப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கும் பணியகம் கற்பகவள்ளி வீட்டில் பணியாற்றிய காலப்பகுதியில் இவ்வாறான சம்பவம்இடம்பெற்றிருந்தால் இவர்களுக்கெதிரான சட்டநடவடிக்கை எடுத்திருக்கலாம் ஆனால் தமது விருப்பின்பேரில் குறித்தவீட்டிலிருந்து வெளியேறிவெளியிடங்களில் பணியாற்றிய சந்தர்ப்பத்திலேயே முகாமில் அனுமதிக்கப்பட்டு மரணம்நிகழ்ந்துள்ளதாக பணியகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Bild5

கற்பகவள்ளி மன உளைச்சலுக்குள்ளான நிலையிலேயே முகாமில் அனுமதிக்கப்பட்டதாக ‘’ஒலேய்யா பபா’’ முகாமின் அறிக்கை தெரிவிக்கின்றது. முறையற்ற விதத்தில் பணியாற்றிய நிலையில் இடம்பெற்ற மரணத்தினால் அதற்கெதிராக எந்தசட்டநடவடிக்கையும் சவுதி  அரேபியஅரசினாலோ அல்லது  இலங்கைவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினாலோ எடுக்க முடியாமல் போனதாக பணிகம் தெரிவிக்கின்றது. இவரை  அனுப்பிய முகவர்நிலையம் முறையாகவும் இசட்டரீதியாகவும் செயற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புபணியகம் தெரிவிக்கின்றது. பணிப்பெண்களுக்கு எதிரானபிரச்சினைகள் அவர்கள்பணிபுரியும் இடங்களில் இடம்பெற்றாலோ அல்லதுதொடர்பற்றநிலையில் இருந்தாலோ உடனடியாக பொலிஸாரின் உதவியுடன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்புபணியகத்தை தொடர்புகொள்ளுமாறு பணியகத்தின் பிரதிப்பொது முகாமையாளர் தெரிவிக்கின்றார். பணிப்பெண்களுக்குசம்பளப்பிரச்சினைகள்அல்லதுசித்திரவதைகள்குறித்துதமக்குதெரியவருமாயின்பணிப்பெண்களைவேறுவீடுகளுக்குபணியாற்றுவதற்கானஒழுங்குகள்செய்துகொடுக்கும்அதேவேளைகுறித்தவீட்டில்பணிபுரியஇலங்கைபெண்கள்அமர்த்தப்படாதவாறுசட்டரீதியானநடவடிக்கைஎடுக்கப்படுமெனவும்பணியகம்கூறுகின்றது. சவூதி அரேபியாவின் பொலிஸ் சட்டதிட்டங்கள் கடுமையா கஇருக்கின்ற அதேவேளை சித்திரவதைகள் அல்லதுகொடுமைகள் ,மரணம் இடம்பெற்று தெரியவருமானால் கடுமையான சட்டநடவடிக்கை குறித்ததரப்பினருக்கெதிராக மேற்கொள்ள வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகம் தயாராக இருப்பதாகவும் பொதுமுகாமையாளர்  தெரிவிக்கின்றார். அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டால் சவூதிஅரசாங்கத்தினால் பெரியதொருஇழப்பீ;ட்டு தொகைவழங்கப்படுமெனவும் வீரசேகர கூறுகின்றார். இவ்வாறு சம்பளப்பிரச்சினை மற்றும் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் கடந்தகாலத்தில்ஏ  ற்பட்டபோதிலும் இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகம் அதற்கு எதிராகசெயல்பட்டு நட்டஈட்டுத் தொகைபெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பணியகம்சு ட்டிக்காட்டுகின்றது. அத்துடன் பணிப்பெண்களை  அனுப்பும் முகவர் நிலையங்கள் தொடர்பாக அவதானத்துடன் இருக்கும் வேலைவாய்ப்புபணியகம் ,அவர்கள் முறையற்ற விதத்தில் செயல்படுமிடத்து அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுப்பதுடன் அவர்கள் மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்லாதவகையில் தடைசெய்யப்பட்டக ருப்புப்பட்டியலில் உள்ளடக்கப்படுமெனவும் தெரிவிக்கின்றது. எனினும் கற்பகவள்ளியை அனுப்பிய முகவர்நிலையம் குறித்து தமக்கு எந்தமுறைபாடுகளும் கிடைக்கப்பெறவில்லையென வேலைவாய்ப்புபணியகம் தெரிவிக்கின்றது. கற்பகவள்ளி முறையற்ற விதத்தில் தான் பணிபுரிந்  த எஜமானாரின் வீட்டிலிருந்து பிறவீடுகளில் பணியாற்றச் சென்றதே அவருக்குநேர்ந்த இக்கதிக்குகாரணமாக அமைந்ததுடன், அதுவே இவரின் மரணத்தின் பின்னரும் நியாயமான நட்டஈடு கோறுவதில் இழுபறிநிலை நிலைக்கான காரணமெனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.

கற்பகவள்ளி ஒருவருடம்தொழில்புரிந்தநிலையில்இரண்டுமுறைமாத்திரமேசம்பளபணத்தைஅனுப்பியுள்ளதாகஉறவினர்கள்தெரிவித்துள்ளனர். குடும்பத்தினருடன் பலமாதங்களாக தொடர்பற்றிருந்த இவர் நிதானமற்ற நிலையிலேயே முகாமுக்குக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டதாக முகாமின் அறிக்கை தெரிவித்துள்ளது.

தற்போதுகற்பகவள்ளியின் குடும்ப சூழ்நிலை கவலைக்குரியதாகவே இருக்கின்றது. கற்பகவள்ளியின் கணவர் குடும்பத்துடன் தொடர்பற்றிருக்கும் நிலையில் இவர்களின் மூன்றுபிள்ளைகளும் கற்பகவள்ளியின் தங்கையான கலைவாணியின் பராமரிப்பிலேயேஇருந்து வருகின்றனர். இவர்கள் குடியிருந்த மஸ்கெலியாஸ்டெர்ஸ்பி ,சூரியகந்தை தோட்டத்தில் எதிர்நோக்கும் சமூகபிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை கருத்திற்கொண்டு தன்னுடன் அடைக்கலம் கொடுத்துவைத்திருப்பதாக கலைவாணிதெரிவிக்கின்றார். தன்னுடைய வயதான தாய்மற்றும் குடும்பத்தினருடன் வறுமை நிலையில்  .மூன்று பிள்ளைகளும்பாடசாலைக் கல்வியை தொடரமுடியாத இக்கட்டான நிலையும்ஏற்பட்டுள்ளது. தற்போது கொழும்பில் தமது சித்தியான கலைவாணியின் பராமரிப்பில் இருக்கும் இவர்களுக்கு பாடசாலை கல்வியை தொடர்வதில் மிகுந்தவிருப்பம் இருப்பதாகதெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க 2015 ஆம்ஆண்டு 15 வயது சிறுமியொருவர் வெளிநாட்டுக்குச் சென்று சடலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட செய்தியையும் நாம் அவ்வளவு இலகுவாக மறந்து விடமுடியாது. அவிசாவளை புவக்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த கணேசலிங்கம் கிருஷாந்தி என்ற சிறுமியின் சடலம் 19 வயதானநிலையில் 2015 டிசம்பர் 10 ஆந் திகதி இலங்கைக்குஅனுப்பிவைக்கப்பட்டது. தான் திரும்பி வரப்போவதாக தொலைபேசிமூலம் 2015 மார்ச் மாதத்தில் கிருஷாந்தி தனதுதாயாருக்கு தெரிவித்திருந்த நிலையில் 2015 ஜூன் 06 ஆம் திகதி அவர் தற்கொலை செய்து இறந்துவிட்டதாக அவர் பணியாற்றிய தொழில் முகவர்; அதிகாரிகளுடாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனினும் 7 மாதங்களின் பின்னரே கிருஷாந்தியின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

 Bild2கிருஷாந்தி 1997 ஜூன் 19 ஆம் திகதி பிறந்துள்ளார். அவர் 2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். அவர் பணிப்பெண்ணாக செல்லும் போது அவருக்கு வயது 15. சடலமாக இலங்கைக்கு கொண்டு வரப்படும் போது அவரின் வயது 19 ஆக இருந்ததாக வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. 3 பிள்ளைகளைக் கொண் டகுடும்பத்தில் இரண்;டாவது பிள்ளையான கிருஷாந்தி சிறந்த முறையில் கல்விகற்றுக் கொண்டிருந்தபோது இளவயதில் ஏற்பட்டகாதல் தொடர்பொன்றினையடுத்து குடும்பத்திலிருந்து பிரிந்து சென்று கைப்பிடித்த கணவனுடன் வாழ்ந்து வந்ததாக கிருஷாந்தியின் தாயார் தெரிவிக்கின்றார். பின்னர் தனது சுயவிருப்பின் பேரில் பணிப்பெண்ணாக செல்வதற்கான கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை ஏற்பாடுகளை செய்து சவூதி அரேபியாவிற்கு சென்றதாக தாயார் மேலும் தெரிவித்தார். கிருஷாந்தி சவூதி அரேபியாபிற்கு சென்றதற்கும் தமக்கும் எவ்வித நேரடித் தொடர்பும் இல்லையென தெரிவிக்கும் பெற்றோர், மகள் இன்னும் உயிரோடு இருப்பதாக தாம் நம்புவதாக கண்ணீர் வடிக்கின்றனர். கிருஷாந்தியின் மரணமத்தின்போது அவரின் கணவரும் சவூதி அரேபியாவிலுள்ள பிறிதொருநகரத்தில் பணிபுரிந்துக்கொண்டிருந்தாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். 2015 டிசம்பர் 12 ஆந் திகதி கிருஷாந்தியின் உடல் புதைக்கப்பட்ட போதிலும் குடும்பத்தினர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அறிவித்ததையடுத்து,  2016 மார்ச் 02 ஆந் திகதி சடலம்தோண்டியெடுக்கப்பட்டு மரபணுபரிசோதனை செய்யப்பட்டதாக பெற்றோர்தெரிவிக்கின்றனர். எனினும்இந்தவழக்கு குறித்தான ஆவணங்கள் தற்போது குற்றப்புலனாய்வு  பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான முடிவு இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனகிருஷாந்தியின் தாயார் மன்றாடுகின்றார். தோண்டியெடுக்கப்பட் டசடலம் மீண்டும் எங்குபுதைக்கப்பட்டதென்று தமக்கு இதுவரைதெரியாதெனவும் பெற்றோர் கவலைதெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம்  குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிக்கையின் படிகிருஷாந்தியின் குடும்பத்தினரே முறையற்ற விதத்தில் முகவர்நிலையத்தினூடாக கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு 15 வயதான நிலையில் இவரை சவூதி அரேபியாவிற்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கின்றது. அத்துடன் இரண்டு வருட ஒப்பந்தக்காலம் முடிவடைந்தபின்னர் இலங்கைக்கு வரதயாரானநிலையில் கிருஷாந்தி இருந்தபோதிலும் மீண்டும் தொடர்ந்துபணிபுரியகுடும்பத்தினர் நிர்ப்பந்திக்கபட்டதையடுத்து அவர் மணவிரக்தியடைந்தநிலையில் தற்கொலைக்கு முகங்கொடுத்தாக வேலை வாய்ப்பு பணியகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. இவரைஅனுப்பியமுகவர்நிலையம்குறித்தும்எவ்விதமுறைப்பாடுகளும்தமக்குகிடைக்கப்பெறவில்லையெனவெளிநாட்டுவேலைவாய்ப்புபணியகம்தெரிவிக்கின்றது. ஆதலால்குடும்ப உறுப்பினர்களும்இவ்வாறானமரணங்கள்இடம்பெறஏதோஒருவகையில்காரணமாகஅமைந்துவிடக்கூடாதெனவும்பணியகம்பொதுமக்களுக்கு அறுவுறுத்துகின்றது.

குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு தியாகங்களைச் செய்து வெளிநாட்டிற்கு பணிப்பெண்களாக செல்லும் மலையக பெண்கள் அங்கு அனுபவிக்கும் சித்திரவதைகள் துன்பங்கள் ஏராளம். போலியான ஆவணங்களுடன் உண்மையான வயதும றைக்கப்பட்டு பலதனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுடாக இவர்கள் அங்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இவ்வாறானதரகர்கூட்டம்அப்பாவிப்பெண்களின்நிலையைதமக்குச்சாதகமாக்கிபணம்வசூலித்துஇமத்தியகிழக்குநாடுகளுக்குபணிப்பெண்களாகஏற்றுமதிசெய்கின்றது.பின்னர்சடலங்களாகஇறக்குமதியாகும்அவலநிலையைஇனியாவதுதடுத்துநிறுத்ததேவையானமுயற்சிகளைமேற்கொள்வோம்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்களின் அடிப்படையில் சவூதி அரேபியா மற்றும் குவைட் நாடுகளிற்கே அதிகமான பணியாளர்கள் வீட்டுப ணிப்பெண்களாக சென்றுள்ளனர்.இலங்கையின் அனைத்து  . இதில் ஒருதரப்பின உத்தியோகபூர்வமாக வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்டு முறையாகசெல்லும் அதேவேளைசட்ட விரோதமானமுறையிலும் அனேகமானோர்போலியான முகவர்நிலையங்களுடாக அனுப்பிவைக்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டுவேலை வாய்ப்புபணியகத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். 2016 ஆம்ஆண்டின் தகவல்களின்படி 27 சதவீதமானோர் பணியாளர்களாக வெளிநாடுகளுக்குசென்றுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் சட்டதிட்டங்களை நேரடியாக கண்காணித்து கட்டுப்படுத்தும் அதிகாரம் தமக்கு இல்லையென அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையகழகத்தின் (யுடுகுநுயு) தலைவர் ஏ.எல்.ஏ.ஹஷாம் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்த அதிகாரம் தமது சங்ககத்திலிருந்து நீக்கப்பட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 427; முகவர்களாகநிலையங்கள்தமதுசங்கத்தில்பதிவுசெய்யப்பட்டுள்ளதாககழகத்தின்தலைவர்தெரிவித்தார். தமது சங்கத்தில் அங்கத்தவராக வேண்டுமாயின்  (யுடுகுநுயு) தலைவர்ஏ.எல்.ஏ.ஹஷாம்தெரிவித்துள்ளார்.

கற்பகவள்ளியின் மரணம் குறித்து  ஆராயப்பட்டுவருகின்றநிலையில் இன்னும் சரியான தொரு தீர்வு எட்டப்படவில்லையாயினும் இஇதற்கானமுயற்சிகள் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால்; முன்னெடுக்கப்பட்டுவருவதாகஇலங்கைவெளிநாட்டுவேலைவாய்ப்புபணியகம்தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள மாவட்டங்களிலிருந்து வெளிநாடுகளுக்கு பல்வேறு தொழில்மட்டங்களின் அடிப்படையில் சென்றோரின் விபரங்களை கீழுள்ள வரைபடம் தெளிவாககாட்டுகின்றது.

 

பாடுபட்டு உழைத்த பணம் கைக்கு வராமலேயே ஏமாற்றத்தோடு வந்திறங்கும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. சித்திரவதைகளும் சாகடிப்புகளும் மறைப்புகளும்  மர்மமுடிச்சுகளாக அவிழ்க்கப்படாமலே புதையுண்டுபோகின்றன. இவ்வாறுதொழிலுக்காக மத்தியகிழக்கு நாடுகளிற்குசென்றபல பெண்கள் நாடுதிரும்பாத நிலைமையும் காணப்படுகின்றது. இளவயதுடைய குடும்பபெண்களே அதிகளவில் வெளிநாடுசெல்வதால் அவர்களுடைய பிள்ளைகளை பராமரிப்பதிலும் பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகின்றன. வெளிநாடு சென்றவர்களின் பிள்ளைகள் முறையாக பாடசாலை கல்வியை தொடராது இடைவிலகலில் ஆர்வங்காட்டுவதை வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்ற பலகுடும்பங்களில் வெளிப்படையாக காணக்கூடியதாக இருக்கின்றது.

 

தற்போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பலசட்டதிட்டங்களை முன்னெடுத்துள்ளதால் பணிபெண்களாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை கடந்த 5 வருடகாலப்பகுதியில்  கணிசமானளவு குறைவடைந்துள்ளது. 5 வயதான குழந்தைகள் இருக்கும் பெண்கள் பணிப்பெண்களாக செல்ல பணியகத்தினால் அனுமதிமறுக்கப்பட்டுள்ள அதேவேளை 25 வயதிற்கு குறைவான பெண்கள் சவூதி அரேபியாவிற்கும் 23 வயதிற்கு குறைவான பெண்கள் ஏனைய மத்தியகிழக்குநாடுகளுக்கும் செல்லதடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோரின் எண்ணிக்கைகணி சமானளவு குறைவடைந்துள்ளதாக இலங்கைவெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப்பொது முகாமையாளர் வீரசேகர n தரிவித்துள்ளார். பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லுவோர் தொடர்பான விபரங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளமுடிவதுடன், பணியகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள முகவர்நிலையங்களிலும்  இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்தெரிவிக்கின்றது. தற்போதுள்ள இறுக்கமானச ட்டதிட்டங்கள் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பணிப்பெண்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்துள்ளதை கீழுள்ளவரைபடத்தினூடாக விளங்கிக்கொள்ளலாம்.

 

சித்திரவதைகள்  மரணங்கள் போன்ற துன்பியல் சம்பவங்கள் நிகழ்ந்த பின்னரும் கூட பொருளாதார சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக தொடர்ந்தும் மலையகப்பெண்கள் சென்றுகொண்டுதான் இருக்கின்றார்கள். இதற்கு இங்குநிலவும் வறுமை மட்டும் காரணமல்ல. வசதியான வாழக்கைக்கான அவசியமும் தேவைப்படுவதாகவே காணப்படுகின்றது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *