மலேசியாவில்-‘பெயரிடாத நட்சத்திரங்கள் ‘ புத்தக வெளியீடு

oodaru vidiyal

நாளும் பொழுதும் 3.3.2018 (சனிக்கிழமை மாலை 5 மணிக்கு )
நிகழ்விடம் :- எண் 14 மேடான், இஸ்தானா
பண்டார் ஈப்போ ராயா, ஈப்போ
(கல்லுமலை கோயிலுக்கு எதிர்ப்புறம்)

தொடர்புகட்கு :- யோகி : 0165432572
சிவா லெனின் :165684302
ருத்ராபதி : 0195710013

நன்றி சந்துரு (பிளையர்)

போர் முடிந்து 9 ஆண்டுகள் ஆன பின்னும் தனது வாழ்க்கையைச் சரிவரத் தொடரமுடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் பல போராளிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தக வெளியீட்டில் கிடைக்கப்பெறும் பணத்தை அவர்களின் நல்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்படும்

சுமார் 33 ஆண்டு ரத்த வரலாறு பேசுகிறது ஈழத்துப்போர்.

இன விடுதலைக்காக நேர்ந்த ரத்த சரித்திரம் இனஅழிப்பில் போய் முடிந்தது உலக மக்கள் அறிந்த ஒன்று.

 இந்தக் காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு அல்லது தாமே இயக்கத்தில் இணைத்துக்கொண்ட பல பெண் போராளிகளின் மிச்சமாக தற்போது கையில் இருப்பது இந்த பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பு மட்டுமே.
சுமார் 26 போராளிகள் எழுதிய இந்தப் பெண்ணிய எழுத்துக்கு உரியவர்களில் கிட்டதட்ட அனைவருமே போரில் வீரமரணம் எய்துவிட்டனர்.

போர் முடிந்து 9 ஆண்டுகள் ஆன பின்னும் தனது வாழ்க்கையைச் சரிவரத்  தொடரமுடியாத  சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் பல போராளிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தக வெளியீட்டில் கிடைக்கப்பெறும் பணத்தை அவர்களின் நல்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்படும்.

பெரிய சமுத்திரத்தில் ஒரு துளி நீர் போன்றது இந்த உதவி.

 தமிழுணர்வாளர்கள் என்று மேடை போட்டுப் பேசுவதைவிட அல்லது உணர்வை காட்டிக்கொள்ளவே மேடைபோடுவதைவிட செயலில் அவ்வுணர்வைக் காட்டக் கூடிய பலர் இருக்கவே செய்கிறார்கள்.

இது இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பாகும். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் வசித்துக்கொண்டிரும் ஊடறு இணையதளத்தின் நிர்வாகி ரஞ்சி மற்றும் அவரின் குழு முயற்சியில் விடியல் பதிப்பகம் மூலமாக முதல் பதிப்பு 2012-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட்து.

பின் கடந்த ஆண்டு பம்பாயில் நடந்த பெண்கள் சந்திப்பில் ஓர் அங்கமாக  இந்த புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு வெளியீடு செய்யப்பட்ட்து.  அதன் தொடர்ச்சியாக இந்த புத்தகத்தை வெளிநாடுகளில் வெளியீடு செய்வதற்கான முயற்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மலேசியாவில் இந்த புத்தகம் கொண்டிருக்கும் கவிதைகள் தொடர்பான கலந்துரையாடலும் அதன் பிறகு வெளியீடும் செய்யப்படவுள்ளது.  பெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பிற்கு விலையே நிர்ணயம் செய்யவில்லை. உண்மையில் அந்த எழுத்துக்கு என்ன விலை கொடுத்திட  முடியும்? உணர்வோடு இந்தப் புத்தகத்திற்கு வழங்கப்படும் பணம் ஈழத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஒரு போராளியின் வாழ்விலாவது ஒளி ஏற்றிவைத்தோம் என்ற நம்பிக்கை நமக்குக் கிடைக்கட்டும்.

பெண்ணிய குரலாக ஒலிக்கும் இந்த புத்தகத்தில் பெண் போராளிகளின் வாக்குமூலம் என்னவாக இருக்கிறது தெரிந்துகொள்ள  வேண்டுமா ?  வருகை தாருங்கள்.. கலந்துரையாடலாம்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *