முல்லை தாரிணி-
அடங்கி இருந்து
உடைமையை பெற்றிட
உறங்கியிருந்தனர்
முட்கம்பிக்குள்ளும் முகாம்களுக்குள்ளும்
முடிவு!
அடக்கி வந்தவர் உடைமைகளை
முடக்கிக்கொண்டனர்
முடிந்தளவு முனுமுனுத்தனர்
முற்றுப்புள்ளியில்லை
பசுமை வயல்
தென்னந்தோப்பு
குளிரூட்டும் தென்றல்
அப்புச்சி இருந்த மாமரம்
அதன் கீழ் ஒரு ஊஞ்சல் – என
கண்ணை நிறைத்திடும் நிணைவுகளுடனும்
விவசாயம் செய்ய துடித்திடும் மனதுடனும்
அகிம்சை வழியில் உரிமைகள் கோரினர்
பெரிய தலைகள் – உதவிக்கரங்களை
நீட்டுவதுபோல் நீட்டி முடக்கிக்கொண்டன
உரிமைகள் வாய் மூட
பல வாய்கள் திறந்து
விலைகளும் பேசின
வலக்கை இடக்கைக்கு
பணம் கொடுக்க வேண்டுமாம்
பரிதாப நிலை! பாருங்கள்
வலுப்பெற்ற போராட்டங்கள்
வலுவிழக்கின்றன
ஒற்றுமை உடைபடும் போது – ஆம்
அடக்கி வாழ்வோர்
உணர்வுகள் உறங்கும்
இடத்தினை உடைத்திடும்
உத்தி கண்டனர் – அதில்
வெற்றியும் கண்டனர்
இன்றும்
அடக்குவோர் அடங்குவோர்
மாற்றமில்லை
உத்தியும் மாற்றமில்லை
அதே உத்தியுடன்
இன்றும் கேப்பாபிலவு