ஊடறு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள் அமர்வு மிக முக்கியமானதாக எனக்கு அமைந்தது. பார்வையாளர்களாக மற்றும் பங்கேற்பாளராக வந்திருந்த அனைவருக்குமே அது முக்கியமான அமர்வுதான். காரணம் பேசவிருந்த தலைப்பும் அதைப் பேசுவதற்கு முன்வந்திருந்த தோழிகளும் அதற்கான தயார் நிலைகளும் அந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. சில தவிர்க்க முடியாத காரணங்களினால் குறிப்பிட்ட நேரத்தை தவறிதான் சந்திப்புத் தொடங்கப்பட்டது.
3.https://yogiperiyasamy.blogspot.ch/2018/01/3.html?spref=fb
பெண்களை ஒருங்கிணைப்பது என்பது சுலபமான காரியமா எனக்கெடடால், அது எளிமையாக நடக்க கூடிய விஷயமில்லை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. தமக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமைகள் பொறுப்புகள் தாண்டி பணிக்கும் போய்வந்து ஓய்வாக இருக்கப்போகும் ஒரு நாளிலும் முழுக்க அவர்களுக்கான நேரம் கிடைக்காமலே இருக்கும். இதற்கிடையில் பெண்கள் சந்திப்பு வைக்கிறோம் கலந்து பேசுவோம் என அழைத்தால், அது நடக்கும் காரியமா என்ன?
2.https://yogiperiyasamy.blogspot.ch/2017/12/2.html
‘ஸ்பேரோ’ பெண்கள் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும் எழுத்தாளருமான அம்பையும் ஊடறுவின் புதிய மாதவியும், அத்தலைப்பு தொடர்பான உரையாடலை தொடக்கி வைத்தனர்.
மோனோபஸ் , பெண்ணுடல் அடையும் மாற்றங்கள், பெண் பூப்படையும் வயது, அதுசார்ந்த புரிதல்கள், நம்பிக்கைகள் மற்றும் குடும்பத்திலும் குடும்பத்தை சுற்றியும் பெண் அனுபவிக்கும் பாலியல் வன்கொடுமைகள், தொந்தரவுகள் என்று உரையாடல்கள் விரிந்தன. இந்தச் சந்திப்பில் பள்ளி மாணவிகளும் பங்கெடுத்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மோனோபஸ் அல்லது பெண் பூப்பெய்தல் முறையை எப்படி புரிந்துக்கொள்கின்றனர் அல்லது புரிந்துக்கொண்டனர் என்ற தங்களது சொந்த அனுபவத்தை வெளிப்படையாக பகிந்துகொண்டதின் பேரில் பல விஷயங்கள் அவதானிக்க முடிந்தது.
1.https://yogiperiyasamy.blogspot.ch/2017/12/1.html