உலகத்தில் மிகப் பெரிய சோகம் எது தெரியுமா?? சொந்த மண்ணின் மக்கள் ,இந்த மண் உனதல்ல என்று மறுக்கப்படுவதும் துரத்தப்படுவதும்தான். என்றான் தன் தாய் நாட்டின் மண்ணிற்காய் துயர் நீர்த்த கறுப்புக் கவிஞன் பெஞ்சமின் மொலாய்ஸ். இன்று எல்லா நாட்டிலும் ஏதிலாய் ஈழத்தமிழழர்கள் விடுதலைக்காக வேட்டைக்கு வந்தவன். நான் கேட்டது என் மண் |
என்முதல் குருதி
சிந்தப்பட்ட மண்
என் தொப்புள் கொடி
புதைக்கப்பட்ட மண்
என் தாயின் பிணம்
புதைக்கப்பட்ட மண்
சென்ற நூற்றாண்டில்,புதைக்கப்பட்ட
மனித மண்டைகள்
புதையல்களாய்
ஆமாம் என் தொப்புள் கொடி எங்கே??
நிரம்பி வழியும் என் குருதிதான்
உன் விளக்கில் எண்ணெயாக
முலையறுந்த உடலுடன் பெண்கள்
போர்க்கொடியில்
சாம்பல்களைச்
சுமந்தபடி
என் மண்
மீண்டும் ஒரு பிறப்பு
ஒரு தொப்புள்கொடி
அறுப்பு
புதைப்பு
மீண்டும் போர்…
ஒவ்வொரு வாயிலும்
சயனட் குப்பிகள்!
ஒவ்வொரு குப்பிகளுக்குள்ளும்
நிறைந்திருப்பது இரசாயனங்களல்ல
எங்கள் மூச்சுக்காற்றின்
உயிரணுக்கள்….!
மரண இரவுகள் என்ற கவிதைதொகுதிக்கு சொந்தமான அருணின் வார்த்தைகள் இவை
நன்றி அருண், மரண இரவுகள் .
-முள்ளிவாய்க்கால் – மே 18 ஐ- நினைவு கூருமுகமாக சில ஆக்கங்களை ஊடறு வாசகர்களுக்காக