.நயன்தாரா கதையை மிகவும் உறுதியான அழகோடு நகர்த்தி செல்கிறார். பெண்ணிய ஆளுமை என்ற கட்டில் அவ்வளவு எளிதாக மட்டும் பொருத்தி விட முடியாது காரணம் விடாமுயற்சி என்பது பாலினம் ரீதியாக நிலைத்தோர், நிலையற்றோர் என்று இருக்கிறது ஆகவே தான் கோபி நயினார் தனது ஆன்மாவில் இருந்து மதிவதனி என்ற கதாப்பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார். அதில் நயன் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஆனால் கொஞ்சம் ஸ்டைல் நடைகளை சற்று குறைத்து இருக்கலாம் அது மட்டுமே கதையோடு உட்டாத செயற்கையாக இருந்தது. அனைத்தும் பெர்ஃபெக்ட்.
ஆழ்குழாய் கிணற்றில் விழும் குழந்தையின் குடும்பமும் அந்த குடும்ப கதாப்பாத்திரமும் மிகவும் கச்சிதமாக பொருந்து இருக்கிறது தாய் , தந்தை, அண்ணன் , மாமன் என்று எதிர்த்த குடும்ப பிரதியாக திரைப்படம் எங்கும் கான முடிந்தது .
விளிம்பு நிலை மக்களின் கோபம், அழுகை, பாதுகாப்பின்மை, போர் குணம், அரச பயங்கரவாதம், அரச கட்டமைப்பின் தோல்வி என உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு ஒரு திரைக்களமும் அதற்கு ஈடு தந்த எதார்த்த மக்களை போற்றிப் புகழ்ந்தே ஆக வேண்டும்
ஆண்டாண்டு காலமாக இந்த தேசத்தில் பிறந்த பாவத்திற்காக கையால் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களை இழிவில் இருந்து மீட்க இன்று வரை எந்த கண்டுபிடிப்பும் கருவியாக மாற்றமும் அடையவில்லை .ஆழங்களால் மட்டும் மாறுபட்டு நிற்கும் மலக்குழியும் ஆழ்துளை கிணறும் ஒன்றே அதற்கு கருவிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை..
http://maattru.com/aram-movie/