போருக்கு பின்னர் வடக்கு கிழக்கில் அதிகம் உருவாகியுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு சுயதொழில் முயற்சிகள் நிறைந்த பலனைத் தருவதாக கூறப்பட்டாலும் அவர்களுக்கு சிறுதொழில் தொடங்க சிறிய முதலீடுகளே இன்று தேவைப்படுகின்றன.இன்று சுய பொருளாதார வாழ்வாதார முயற்சிகள்இ சுய கைத்தொழில் முயற்சிகள் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற சூழலில் சில நம்பிக்கை அளிக்கின்ற செயற்பாடுகளை காணக் கூடியதாக உள்ளது..
யாழ்ப்பாணம் – சுன்னாகம் புதுவளவு என்கிற இடத்தில் வசிக்கும் மார்ட்டீன் ஜெயராஜா நிர்மலா என்கிற பெண்ணொருவர் ’ஜெயா உற்பத்திகள்’ என்கிற பெயரில் பெண்களுக்கான விதவிதமான கைப்பைகளை 2014 மாசி மாதம் முதல் தயாரித்து வருகிறார் அவர் சொந்தமாக தயாரிக்கும் ஒவ்வொரு கைப்பையும் மிக நேர்த்தியாகவும்இ அழகாகவும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவு தரமாக அவரினால் தைக்கப்படும் கைப்பைகள் யதார்த்தமான விலையில் விற்கப்படுகின்றன.. நிர்மலா பேசும் போது இப்போது பிரதான பிரச்சினையாக உள்ளது இடவசதி தான். சீமெந்திலான கொட்டகையும்இ தையல் உபகரணங்களும் ஏற்பாடு செய்து கொடுத்தால் இன்னும் இரு மடங்கு கூடுதலாக பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்கிறார். அவர் சாதாரண தையல் மெசினில் தான் இவ்வளவு கைப்பைகளையும் தயாரித்து வருகின்றார். நிர்மலாவைப்போல் பல பெண்தலைமைத்துவ பெண்கள் வடகிழக்கில் வாழ்கிறார்கள் . அவர்களுக்கான சுயதொழில் முயற்சிகளை மேற்கொண்டால் அவர்கள் மன வலிமையுடன் வாழ்வதற்கான ஒரு உந்து சக்திநிலையை ஏற்படுத்த முடியும்.
நிர்மலாவின் சுய தொழில் உற்பத்திகளை வாங்க வாங்க அவரது தொலைபேசி இலக்கம் : 0094 774 585094