தெஹிவளையில் உள்ள ஆதரவற்றோர் இல்லமொன்றில் வதியும் 18 இளம் சிறுமிகள் அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து குறித்த சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. சிறுமிகள் மீதான் பாலயில் துஸ்பிரயோகம் சம்பந்தமான விசாரணைகள் கொஹுவலை பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆதரவற்றோர் இல்லத்துக்கு நீதிமன்றம் ஊடாகவும் சில பெண்கள் நேரடியாக தமது பெற்றோர்கள் மூலமாக சிறுமிகள் அனுப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.62 வயதுடைய பணியாளரே சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகவும் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.