யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாகி உள்ளது.
இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதுடன்இநீதிமன்றின் விளக்குள் அணைக்கப்பட்டு 7 பேருக்கும் தீர்ப்பாயம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.மேலும், அரச தலைவர் தீர்மானிக்கும் தினத்தில் உயிர் பிரியும் வரை தூக்கிலிட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.மேலும், 30 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 30, 000 ரூபா தண்டப்பணமும், உயிரிழந்த மாணவியான வித்தியாவின் குடும்பத்திற்கு ஒவ்வொருவரும் தலா 10 இலட்சம் ரூபா நஷ்ட ஈட்டை வழங்குமாறும் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
.
யாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் இந்த தீர்ப்பை இன்று அறிவித்துள்ளனர்.
.
யாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் இந்த தீர்ப்பை இன்று அறிவித்துள்ளனர்.