கிருசாந்தி யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி..கிருசாந்தியை இரண்டு பொலிசாரும் ஒன்பது இராணுவத்தினருமாக பதினொரு பேர் வன்புணர்ந்து கொலை செய்தனர்…
1999 செம்டம்பர் 07 இலங்கை இராணுவத்தின் வாகனம் ஒன்று மோதி சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது மரண வீட்டிற்கு சென்ற மாணவர்களில் கிருசாந்தி குமாரசாமியும் ஒருவர். யாழ்ப்பாணம் வரவேற்கிறது என்ற வளைவுக்கு அருகில் உள்ள இராணுவ முகாமடியில் கிருசாந்தி தடுத்துநிறுத்தப்பட்டாள்இராணுவ அதிகாரி ஒருவர் கிருசாந்தியை உள்ளே கொண்டுவருமாறு கூறியுள்ளார். அவள் இராணுவத்தினரால் தடுக்கப்பட்டதை ஊரார் அவதானித்துச் சென்றனர். இந்த நிலையில் கிருசாந்திக்காக காத்திருந்த தாயாருக்கு அவள் இராணுவமுகாமடியில் வைத்து விசாரிக்கப்பட்ட செய்தியை மக்கள் கூறினர். இந்த நிலையில் கிருசாந்தியின் தயாரார் 59 வயதான இராசம்மா பக்கத்து வீட்டுக்காரர் சிதம்பரம் கிருபாமூர்த்தியை அழைத்துக் கொண்டு டியூஷன் போய் வந்த 16வயதான மகன் பிரணவனையும் அழைத்தபடி குறித்த இராணுவமுகாமிற்குச் சென்றார். இராணுவமுகாமில் கிருசாந்தியை விசாரித்தனர்.அவளை விசாரிக்க வந்த மூவரையும் இராணுவமுகாமிற்குள் கொண்டு சென்று சித்திரவதை புரிந்தனர். இரவு பத்து மணியளவில் அவர்கள் மூவரும் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டனர். கிருசாந்தியை இரண்டு பொலிசாரும் ஒன்பது இராணுவத்தினருமாக பதினொரு பேர் வன்புணர்வு செய்தனர். அதன் பின்னர் மூன்று புதைகுழிகளில் நான்குபேரையும் புதைத்தனர்.செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை கண்ணீருடன் திரண்ட தாய்மாரும் உறவுகளும் அடையாளம் காட்டினர். யாழ்ப்பாணமே கண்ணீர் கோலம் பூண்டது