“Migrant Mother” – டோரதியா லாங்”
1933 இல் ஒரு நாள் அந்த இளம் பெண் புகைப்படக் கலைஞர் தனது ஸ்டுடியோவில் தங்களது உருவப்படம் எடுத்துக் கொள்வதற்காக வரிசையாகக் காத்திருக்கும் பணக்காரர்களை விட்டு விட்டு தனது கமராவுடன் சென்பிரான்சிஸ்கோ நகரின் தெருக்களுக்குள் நுழைந்தார். “White Angel” என்ற பணக்காரப் பெண்மணி ஏழைகளுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கும் “Bread Line” என்ற பகுதிக்குச் சென்று அங்குவரும் மக்களை நிறைய புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினார்.
முகச்சவரம் செய்யாத கைகளுக்கிடையே தகர டப்பாவை ஏந்தி வாய் கசப்பான கோடுகளைப் போன்றிருக்கும் ஒரு மனிதருக்குப் பின்னே உணவுக்காக கையேந்தி நிறைய பேர் வேறுபுறம் திரும்பியிருக்கும் படியானஒரு புகைப்படம் டோரதியா லாங்கையும் மிகவும் கவர்ந்த புகைப்படம.; அந்தப் புகைப்படத்திற்கு அவர் “White Angel Bread Line” என்று பெயரிட்டார்.
அதை அவரது ஸ்டுடியோவின் முன்புறம் சுவரில் மாட்டி அதன் அருகே “Francis Bacon” ன் புகழ்பெற்ற வாசகத்தையும் மாட்டி வைத்தார்.தவறும் குழப்பமும் அற்ற பதிலீடும் வஞ்சகமும் அற்ற விஷயங்களை
ஆழ்ந்து நினைப்பதே தன்னளவில் ஒரு நல்ல விஷயமாக இருக்கிறது. ஒரு முழு ஆராய்ச்சியின் விளைச்சலை விட
அதற்குப்பின் மிகுந்த ஒடுக்குதலுக்கும் கலக்கத்திற்கும் உள்ளான மக்களைப் புகைப்படம் எடுத்தார். அவர்களது சமூகச் சூழலைத் துல்லியமாக நோக்கும் தன்மை அவரது புகைப்படங்களில் எதிரொளித்தது. 1930களில் அமெரிக்காவில் நிலவிவந்த மிக நீண்ட விவசாய மடிவையும,; அது இயந்திரங்களால் இடம் பெயர்ந்ததையும் மரபு எப்படி நசிந்தது என்பதையும் தனது புகைப்படங்கள் வழியாக ஆவணப்படுத்தினார். குடிபெயர்தலும் சுரண்டிப் பிழைத்தலும் மக்களின் வாழ்க்கையில் உண்டாக்கும் அதிர்வைப் பதிவு செய்தார் ஒவ்வொரு புகைப்படமும் பார்வையாளருக்கு ஒரு பண்பாட்டின் சரடை உணர்த்தவும் மீண்டும் மீண்டும் பார்வையாளரைப் பார்க்கத் தூண்டவும் வேண்டுமென விரும்பினார் துன்புறும் மக்கள் மீது அவர் கொண்டிருந்த அளவிலா இரக்கமும் நேர்மையான பார்வையும் மிகவும் ஆற்றல் வாய்ந்த உணர்ச்சிமிக்க புகைப்படங்களை உருவாக்க உதவின.
1895 இல் நியூஜெர்சியில் பிறந்த ரோரதியோ லாங் தனது தந்தையார் தாயை விட்டுப் பிரிந்து விட்டதால் தாயுடன் பாட்டி வீட்டிலேயே வளர்ந்தார். இளவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட சிறு ஊனம் அவரை மிகவும் பாதித்தது. இந்த ஊனம் தான் அவரை வழிப்படுத்திய, உதவிய, நேர்ந்த அமெரிக்க யூட்டிய நிகழ்ச்சிகளிலேயே மிகவும் முக்கியமானது என்று கூறினார். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து இருந்த இவர் புகைப்படக்கலை மீது எழுந்த ஆர்வத்தால் அப்பள்ளியை விட்டு விலகினார். தனக்குத் தானே புகைப்படக்கலையைக் கற்பித்துக் கொண்டார். தனிமையும், தன்னுணர்வும் மிக்கவராய் இருந்த ரோடரதியாவை மக்களின் சோகத்தையும், வலியையும் வெளிப்படுத்தும் அவரது புகைப்படங்கள் மூலம் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. 1936இல் எடுக்கப்பட்ட “Migrant Mother” என்ற அவரது புகைப்படம் மிகவும் பிரசித்தி பெற்றது.
“Ansel Adams” என்ற புகைப்படக் கலைஞர் புகைப்படங்கள் எடுக்கச் சொல்லும் போது அவரது மிகுதியான புகைப்பட உபகரணங்களைக் கண்டு அவரை ஒரு கூட்டமே குழுமாம் ஆனால் டோரதியா எவருடைய கண்ணுக்கும் புலனாகாமல் புகைப்படம் எடுப்பதில் வல்லவர். நான் எதைப் புகைப்படம் எடுக்கிறேனோ அதைத் தொல்லை செய்யமாட்டேன,; குறுக்கிடமாட்டேன், முன் கூட்டி ஏற்பாடு செய்யவும் மாட்டேன் என்று கூறினார். அவர் கண்ணுற்ற மக்களின் கிளர்ச்சியூட்டும் அனுபவங்கள் வழியாக அளவிட இயலாசக்தியையும் புத்துயிர்ப்பையும் உணர்ந்தார். எதிர்காலத்தின் முன்னெச்சரிக்கையும் கண்டார். மனித இன மாறுபாட்டையும், பண்பாட்டு மாறுதலையும் ஒரு சேர அவர் உணரமுடிந்ததாகவும் கூறினார். புகைப்படக்கலை ஒர் உணர்ச்சியின் அதிர்வை நிறுத்தி வைப்பது என்பதால் இது வெகு சாதாரண விஷயமன்று.
குட்டி ரேவதியின் பனிக்குடத்திலிருந்து இக்கட்டுரை மீள் பிரசரமாகிறது
நன்றி : பனிக்குடம்
feb 2006