(புரோட்டீன்கள்)
வாசகர்கள் என்றால் வங்குரோத்து முட்டாள்கள் என்று இலக்கியவாதிகள் பலர் நினைக்கிறார்கள் போல. இல்லாவிட்டால் ஏன் இப்படியான கால்வேக்காட்டுப் பேட்டிகளை இவர்கள் கொடுக்க வேண்டும்?நான் சொல்றது மறுகாவில் வெளிவந்த ‘நான்கு பெண்களுடனான உரையாடல்’, ‘மனம் நவீனமடையாமல் கவிதைகளும் நவீனமடையாது ‘ போன்ற அனாரின் பேட்டிகளை முன் வைத்துத்தான் |
துளசிகா:வாசகர்கள் என்றால் வங்குரோத்து முட்டாள்கள் என்று இலக்கியவாதிகள் பலர் நினைக்கிறார்கள் போல. இல்லாவிட்டால் ஏன் இப்படியான கால்வேக்காட்டுப் பேட்டிகளை இவர்கள் கொடுக்க வேண்டும்?
நான் சொல்றது மறுகாவில் வெளிவந்த ‘நான்கு பெண்களுடனான உரையாடல்’ ‘மனம் நவீனமடையாமல் கவிதைகளும் நவீனமடையாது ‘ போன்ற அனாரின் பேட்டிகளை முன் வைத்துத்தான்.
சுதா: ஏற்கெனவே மறுகா உரையாடல் தொடர்பாக குட்டிரேவதியும்,(‘நாம் வைத்திருக்கின்ற சொற்கள் யாருடையவை?) சுவிஸ் றஞ்சியும்(சொற்களால் நிறமழிக்கும் உரையாடல்) இரு கோணங்களில் ‘கவிதைகளைக் கண்டெடுத்தேன் புகழ்’ பேராசிரியை சித்திரலேகாவின் நுண்ணரசியலை அலசியிருக்கிறார்கள். அதனால் அந்த விடயங்களைத் தவிர்த்து மற்ற சில விடயங்களில் கவனத்தைக் குவிக்கலாம்.
என்னைப் பொறுத்தவரை குறை சொல்லக்கூடாது. விஜயலட்சுமியும், உருத்திராவும், மலர்ச்செல்வனும் நிதானத்துடனும், பொறுப்புணர்வுடனும் பெண்மொழி மற்றும் அது தொடர்பான எழுத்துக்கள் பற்றி ஒரு உருப்படியான சமூக உரையாடலை நிகழ்த்துகிறார்கள். பல இடங்களில் தெளிவாக யோசித்துப் பேசுகிறார்கள். ஆனால் சித்திரலேகாவும் அனாரும் உரையாடலுக்கு வர முதல் ஒன்றாக குந்தியிருந்து கஞ்சா ரொட்டி திண்டிட்டு வந்தமாதிரி உளறிக் கொட்டியிருக்கிறார்கள்.
மல்லி: சும்மா சும்மா குறை சொல்லாமல் விஷயத்தை உதாரணங்களோட சொல்லப் பார் பார்ப்போம்.
சுதா: சரி மல்லி. மறுகாவின் 4ம் பக்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பேட்டியின் ஆரம்பத்திலிருந்தே பல கருத்தியல் பிரச்சனைகள் இருக்கின்றன. கவிஞர் அனார் பெண்மொழி, பெண் எழுத்துக்கள் பற்றி ஒரு சமன்பாடு போடுகிறார். அதாவது பெண்மொழி முதிர்ந்து பின்னர் பெண்ணெழுத்து ஆகிறதாம். அடுத்ததாக “எழுத வரும் பெண்ணுக்கு மொழி பெரிய பிரச்சனயாகவுள்ளதா என்பதைப்பற்றி எனக்குக் கூறத் தெரியவில்லை” என்கிறார். பிறகு “மொழியில் பெண்மொழி, ஆண்மொழி என்று இல்லை” என்கிறார். இவை மொழி தொடர்பான விளக்கமின்மைப் பிரச்சனைகள்.
அடுத்தது பெண்ணியம்/ங்கள் தொடர்பான தெளிவின்மை அவரின் உரையாடல் முழுவதிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அனார் சொல்கிறார் “ஆண்களின் உலகம் தட்டையானது. அவர்களும் கூட தட்டையானவர்கள். காரணம் பெண்களுக்கென்றே உள்ள சில விசேஷத் தன்மைகள் என்பவற்றை ஒருவித பொறாமைத் தன்மையோடுதான் பார்க்கின்றார்கள். இது ஆண்களின் பிரச்சனையல்ல. அவ்வாறு பழக்கப்படுத்தி விட்டார்கள்”
ஆண்கள் ஒரு பக்கமாகவும் பெண்கள் ஒரு பக்கமாகவும் நின்று ஆளையாள் வசைச் சொற்கள் சொல்லி, பரம எதிரிகளாகப் பார்த்து ஒருசாராரை இன்னொரு சாரார் சிதைத்துப் பார்க்கும் போக்கு அல்ல பெண்ணியம்ங்கள். பெண்ணியங்களின் முதன்மை நோக்கம் – பெண்களின் சுயாதீன முன்னேற்றமே. (இதனை பெண்களுக்கான தொழில், கல்வி, சொத்து, அறிவு, அதிகாரம், மொழி, பிரக்ஞை எனப் பல தளங்களிலும் அவரவர் சூழ்நிலைக்கேற்ப விரித்துப் பார்க்கலாம்) சுயாதீன முன்னேற்றம் ஆக்கத்தோடும், முயற்சியோடும் சம்பந்தப்பட்டது.
அதை விடுத்து “ஆண்களின் உலகம் தட்டை. அவர்களுக்குப் பொறாமை” என்றெல்லாம் எம்மோடு சக உயிரியாய் வாழும் ஒருவனைப் பற்றி பொதுப்படையாக அனார் உளறுவது ஒரு சமூக அக்கறையுள்ள செயலாகத் தோன்றவில்லை. நமக்கெல்லாம் தெரியும் ஃப்ராய்டின் penis envy theory எவ்வளவு அபத்தமானது என்று. அதாவது பெண்குழந்தைகள் தமக்கு குஞ்சாமணி இல்லாததால் ஆண்களைப் பார்த்துப் பொறாமைப் படுகிறார்கள் என்பதுதான் அதன் சாரத்துள் ஒன்று. அதே போல கவிஞர் அனாரும் ஏதாவது அபத்தமான round envy theory வைத்திருந்தால் நிரூபிக்கட்டும். கேட்க, வாசிக்க, அறிய வாசகர்கள் நாங்கள் ஆவலாக இருக்கிறோம்.
பெண்ணியங்கள் பற்றிய அடிப்படை அறிவோ, பெண்ணிய பிரக்ஞையுடன் கூடிய ஒரு குறைந்தபட்ச வாழ்வு முறையோ இல்லாத அனார் பெண்ணியங்கள், பெண்மொழி, பெண்எழுத்து என்று பேசுகிறார். பெண்ணியங்கள் பற்றிய அறிவு புத்தகங்களை வாசிப்பதால் மட்டும் வருவதில்லை. அதே போல பெண் எழுத்துக்கள், மற்றக் கவிஞர்களின் கவிதைகளை நீட்டி மடக்கி தழுவி கொப்பியடிப்பதால் மட்டும் உருவாகுவதில்லை. இவ்வாறான போலியானதும் ஜனரஞ்சகமானதுமான போக்குகள் இன்றைய காலகட்டத்தில் ஈழத்து இலக்கியத்தில் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
வாசக உரையாடல் இன்னமும் வளரும்
பெண்ணியங்கள் பற்றிய அடிப்படை அறிவோ, பெண்ணிய பிரக்ஞையுடன் கூடிய ஒரு குறைந்தபட்ச வாழ்வு முறையோ இல்லாத பெண்ணியங்கள், பெண்மொழி, பெண்எழுத்து என்கிறார்கள். பெண்ணியம் பற்றிய அறிவு புத்தகங்களை வாசிப்பதால் மட்டும் வருவதில்லை. இவ்வாறான போலியானதும் ஜனரஞ்சகமானதுமான போக்குகள் இன்றைய காலகட்டத்தில் ஈழத்து இலக்கியத்தில் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. Sabash purotinkal இது பலருக்கு பொருந்தும் பலர் தமது வாழ்வையே சமூகத்திற்காக தியாகம் செய்தவர்கள் சிலர்.அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.